சென்னை : அரசு இசைக் கல்லூரிகளில் பணி மூப்பின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாக, பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில், பயிற்றுவிக்கப்படும் பட்டயப் படிப்புகள் அனைத்தும், மூன்று ஆண்டுகால பட்டயப் படிப்புகளாகும். நட்டுவாங்கத்தில் ஓராண்டு பயிற்சி ஏதும் வழங்கப்படுவதில்லை. நட்டுவாங்கத்தில், இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பின் நட்டுவாங்கக் கலைமணி பட்டயம் வழங்கப்படுகிறது. இசைக் கலைமணி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் இசை ஆசிரியர் பயிற்சியில் நேரடியாக சேர இயலாது. இசை ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு இசைக் கல்லூரிகளில் உள்ள பயிற்றுனர், விரிவுரையாளர், பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பணியிடங்களுக்கு, தனித்தனியே பணி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படியே, அவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள இதர கல்லூரிகளில் உள்ளது போல், விரிவுரையாளர் ஒருவர் பட்ட மேற்படிப்போ அல்லது முனைவர் பட்டமோ படித்திருந்தால் கூட, பணி மூப்பின் அடிப்படையில் தான் விரிவுரையாளரிலிருந்து பேராசிரியராகவோ, பேராசிரியரில் இருந்து கல்லூரி முதல்வராகவோ பதவி உயர்வு பெற இயலும். எனவே, பணியில் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், தான் முதுநிலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருந்தால், சிறப்பு நிலையாகக் கொண்டு நேரடியாக பணி மூப்பினைத் தவிர்த்து பேராசிரியராகவோ, முதல்வராகவோ நியமனம் செய்திட விதிமுறைகளில் வழிவகை இல்லை. இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////
என்ற போதும் இந்நடைமுறைக்கு மாறாகப் பள்ளி ஆசிரியர்களில் இருந்து எந்தப் பணி மூப்பும் பார்க்காமல் விதிமுறைகளுக்கு மாறாக நேரடியாக இசைக் கல்லூ்ரிகளில் நியமிக்கப்பட்டவர்கள் நியமனங்களை நீ க்கினாலும் அவ்வாறு நியமித்தவர் மீது நடவ டிக்கை எடுத்தாலும்தான் இவ்வறிக்கைக்கு மதிப்பு இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக