வியாழன், 17 டிசம்பர், 2009


விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா�வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது. படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுறா...என்று பார்க்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல். இந்த சிக்கலுக்கு காரணம் விஜய் சந்தித்திற்கும் புதிய வில்லங்கம். ��ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது போல் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழ துரோகி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய். இது போதாது என்று தனது வேட்டைக்காரன் படத்தில் சிங்களப்பாடல் மெட்டில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்த மெட்டில் பாடல் அமைத்தவர் ராஜ்வீரரத்ன என்பவர். அவருடன் இணைந்துதான் வேட்டைக்காரனுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கு விஜய் ஏன் சம்மதித்தார். தொடர்ந்து விஜய் ஈழத்தமிழர்களூக்கு துரோகம் செய்துவருகிறார் என்று அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். வேட்டைக்காரன் மட்டுமல்லாது, பெருந்தொகை கொடுத்து சுறாவை வாங்கியிருக்க இந்த விவகாரத்தால் வெளிநாட்டு பிஸினஸ் பாதிக்கப்படுமோ என்று யோசிக்கிறதாம். அடுத்தடுத்து இரண்டு படங்களும் பிஸினஸ் ரீதியாக பாதிப்பட்டால் என்னாவது? இந்த தலை�வலி� தீர வழி என்ன என்றும் யோசிக்கிறதாம் சன் தரப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக