சனி, 19 டிசம்பர், 2009

வெற்றிடம்... தலையங்கம்:



ஆந் ​திர மாநி​லத்தை இரண்​டா​கப் பிரித்து,​​ ஏற்​கெ​னவே ஒப்​புக்​கொண்​ட​படி தெலங்​கா​னா​வைத் தனி​யா​கப் பிரித்​துத் தர வேண்​டும் என்று தெலங்​கானா ராஷ்​டிர சமிதி கட்​சித் தலை​வர் கே.​ சந்​தி​ர​சே​கர ராவ் எந்த நேரத்​தில் உண்​ணா​வி​ர​தத்​தைத் தொடங்​கி​னாரோ தெரி​ய​வில்லை,​​ அதன் தொடர்ச்​சி​யாக அடுத்​த​டுத்து நடந்து வரும் சம்​ப​வங்​கள் மத்​திய அர​சி​லும் மாநில அர​சி​லும் முதிர்ந்த அர​சி​யல் தலை​வர்​கள் யாருமே இல்​லாத வெற்​றி​டம் இருப்​ப​தையே வெளிச்​சம் போட்டு காட்​டு​கின்​றன.​மத் ​திய அர​சில் நிர்​வாக ரீதி​யான நட​வ​டிக்​கை​க​ளில் கூட கட்​சித் தலைமை காட்​டும் கண் ஜாடைக்கு ஏற்ப செயல்​ப​டும் பிர​த​ம​ரா​கத்​தான் மன்​மோ​கன் சிங் இருக்​கி​றார் என்​பது உல​கம் அறிந்த உண்மை.​ அதி​லும் ஆந்​திர விவ​கா​ரம் என்ன என்​ப​தைப் பத்​தி​ரி​கை​கள் மூல​மும் ஐ.ஏ.எஸ்.​ அதி​கா​ரி​கள் சொல்​வதி​லி​ருந்​தும்​தான் மன்​மோ​க​னால் தெரிந்து கொள்ள முடி​யுமே தவிர,​​ சொந்த அனு​ப​வத்தி​லி​ருந்து தெரிந்​து​கொள்ள அவ​ருக்கு வாய்ப்பே கிடை​யாது.​ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​ட​ணித் தலை​வ​ரான சோனியா காந்​தி​யின் நிலை​மை​யும் கிட்​டத்​தட்ட அதே​தான்.​ காங்​கி​ரஸ்​கா​ரர்​கள்​கூட அவ​ருக்​குக் கட்​டுப்​பட மறுத்து தெலங்​கானா வேண்​டும் என்​றும் தெலங்​கானா கூடாது என்​றும் இரு கட்​சி​க​ளா​கப் பிரிந்து நிற்​கின்​ற​னர் என்​பதி​லி​ருந்து,​​ இந்​தப் பிரச்​னை​யில் அவ​ருக்கு எந்த அள​வுக்கு அர​சி​யல் முதிர்ச்​சி​யும்,​​ விஷய ஞான​மும் உண்டு என்​பதை நாம் யூகித்​துக் கொள்​ள​லாம்.​ ​மூத்த தலை​வ​ரான பிர​ணாப் முகர்ஜி அர​சி​யல் அனு​ப​வஸ்​தர் என்​றா​லும் அவ​ரு​டைய அனு​ப​வம்,​​ அறிவு எல்​லாம் தேவைக்​குப் பயன்​ப​டுத்​திக் கொள்ள மட்​டுமே என்று கட்​சித்​த​லைமை கோடி காட்​டி​விட்​ட​தால் அவ​ருக்​கும் ஆர்​வம் போய்​விட்​டது என்றே சொல்ல வேண்​டும்.​ அர​சியலி​லி​ருந்தே ஓய்​வு​பெற வேண்​டும் என்று நினைக்​கும் அள​வுக்கு சலிப்​பும் விரக்​தி​யும் அடைந்​தி​ருக்​கி​றார் அவர்.​ ​உள்​துறை அமைச்​சர் ப.சிதம்​ப​ரம் உள்​ளிட்ட இதர மூத்த தலை​வர்​க​ளும் கட்​சித் தலைமை கேட்​டுக்​கொண்​டால் செயல்​ப​டு​வது என்ற எதிர்​பார்ப்பு நிலை​யி​லேயே இருப்​ப​தால்,​​ இரு தரப்​பா​ரை​யும் ஓரி​டத்​தில் அமர்த்தி சம​ர​சம் பேசி,​​ ""பிரி​வ​தாக இருந்​தா​லும் சேர்​வ​தாக இருந்​தா​லும் அதை அமை​தி​யா​கச் செய்​வோம்,​​ மாநி​லத்​தின் அன்​றாட வாழ்க்​கை​யைச் சீர்​கு​லைக்க வேண்​டாம்'' என்று கேட்​டுக்​கொள்​ளும் பக்​கு​வம் தெரிந்​த​வர்​க​ளாக இருக்​க​வில்லை.​அர​சி​யல் தலை​மை​யில் வெற்​றி​டம் என்​பது இது​தான்.​ இந்​தக் கிளர்ச்​சி​யைத் தீவி​ரப்​ப​டுத்த நினைக்​கும் இளம் மாண​வர்​க​ளுக்​கும்,​​ உணர்ச்சி வேகத்​தில் கொதித்​தெ​ழும் பொது​மக்​க​ளுக்​கும் விவ​ர​மும் தெரி​ய​வில்லை.​ விளை​வு​க​ளைப் பற்​றி​யும் கவ​லை​யில்லை.​ஆந்​தி​ரம் அப்​ப​டியே இருந்​தா​லும் பிரிந்​தா​லும் எல்லா தரப்​பி​ன​ரின் வாக்​கு​க​ளும் நமக்​குத்​தான் கிடைக்க வேண்​டும் என்ற அர​சி​யல் உள்​நோக்​கம்​தான் ஆளும் கட்சி அழுத்​த​மா​கச் செயல்​ப​டத் தடை​யாக இருக்​கி​றது என்​ப​தைப் புரிந்து கொள்ள முடி​கி​றது.​இத​னி​ டையே பத்​தி​ரி​கை​க​ளில் வரும் தக​வல்​கள் நமக்​குக் கவ​லை​யையே அளிக்​கின்​றன.​ கடந்த 10 நாள்​க​ளாக மருந்து,​​ மாத்​தி​ரைத் தொழில் நிறு​வ​னங்​கள் உற்​பத்​தி​யில் ஈடு​பட முடி​யா​மல் 400 கோடி ரூபாய்க்​கும் மேல் உற்​பத்தி முடங்​கி​விட்​டது.​""ஹைத​ரா​ பாத் நக​ருக்​குச் செல்​வ​தைத் தவிர்த்​து​வி​டுங்​கள்,​​ அங்கு கிளர்ச்சி வலுத்து வரு​கி​றது,​​ நிலைமை சரி​யில்லை'' என்று அமெ​ரிக்க வெளி​யு​ற​வுத்​துறை தன்​நாட்டு மக்​க​ளுக்கு விடுத்த எச்​ச​ரிக்​கை​யைத் தொடர்ந்து 50-க்கும் மேற்​பட்ட விஞ்​ஞா​னி​கள் தங்​க​ளது ஹைத​ரா​பாத் பய​ணத்தை ரத்து செய்​து​விட்​ட​னர்.​ஹைத​ரா​பாத் நக​ரில் கணினி மென்​பொ​ருள்​துறை நன்கு வளர்ச்சி அடைந்​தி​ருப்​ப​தால் அங்கு வெளி நாடு​க​ளில் இருந்​தும் வெளி மாநி​லங்​க​ளில் இருந்​தும் வந்து பணி செய்​யும் பலர் முதல் முறை​யாக தங்​க​ளு​டைய நக​ரத்​தின் கதி என்ன,​​ நமக்​குப் பாது​காப்பு இருக்​குமா என்று அஞ்ச ஆரம்​பித்​துள்​ள​னர்.​ஹைத ​ரா​பா​தி​லும் ஆந்​தி​ரத்​தின் பெரிய நக​ரங்​க​ளி​லும் ஹோட்​டல் விடு​தி​க​ளில் தங்​கு​வோர் எண்​ணிக்கை வெகு​வா​கக் குறைந்​து​விட்​டது.​ யாரும் மாநி​லத்​துக்​குள் துணிந்து வரு​வ​தில்லை.​ இத​னால் வரு​வாய் குறைந்​து​விட்​டது.​தெலங்​கானா வேண்​டும் என்​போ​ரும்,​​ வேண்​டாம் என்​போ​ரும் தின​மும் ஊர்​வ​லம் போவ​தும் வன்​மு​றை​யில் இறங்​கு​வ​தும் அச்​சு​றுத்​த​லாக இருப்​ப​தால் வளர்ச்​சிப்​ப​ணி​கள் முற்​றாக நின்​று​விட்​டன.​ மாநி​லத்​தின் அரசு நிர்​வா​கம் சட்​டம்,​​ ஒழுங்​கைப் பாது​காக்க முடி​யா​மல் திண​று​கி​றது.​முதல்​வர் கே.​ ரோசய்​யாவை,​​ மறைந்த முத​ல​மைச்​சர் ராஜ​சே​கர ரெட்​டி​யின் ஆத​ர​வா​ளர்​கள் ஏற்​றுக்​கொள்​ளா​த​தால் அவ​ருக்கு ஏற்​பட்ட பின்​ன​டைவு இப்​போது பல மடங்​கா​கி​விட்​டது.​ மாநி​லத்தை ஆளு​நர் ஆட்​சி​யில் தாற்​கா​லி​க​மா​க​வா​வது கொண்​டு​வந்​தால் நிலைமை மேம்​ப​டும் வாய்ப்பு இருப்​ப​தைப்​போ​லத் தோன்​று​கி​றது.​ அப்​ப​டிச் செய்​தால் அடுத்து பொதுத் தேர்​த​லைச் சந்​திக்க வேண்டி வருமோ என்று மத்​திய தலைமை கரு​து​வ​தால் இந்​தத் தேவை​யற்ற இழு​பறி நிலைமை தொடர்​கி​றது.​ ​தாயே ஆனா​லும் குழந்​தையை மார்​போடு அள​வுக்கு மீறி இறுக் ​க​மாக அணைத்​துக் கொண்​டால்,​​ குழந்தை திமிறி அந்​தக் கட்டி​லி​ருந்து விடு​ப​டத் துடிக்​கும்.​ மொழி​யு​ணர்​வால் கட​லோர ஆந்​தி​ரம் மற்​றும் ராய​ல​சீமா பகுதி மக்​கள் தெலங்​கானா பிரி​வதை வன்​மை​யாக எதிர்க்க எதிர்க்க,​​ பிரிந்தே தீரு​வது என்று தெலங்​கானா பகுதி மக்​கள் தங்​கள் நிலை​யில் மேலும் தீவ​ர​ம​டை​வ​தைத் தவிர்க்க முடி​யாது.​வாயின் ஒவ்​வொரு பகு​தியி​லி​ருந்​தும் ஒரே​நே​ரத்​தில் வெவ்​வேறு வித​மா​கப் பேசும் விசித்​தி​ரம் பார்த்​தி​ருக்​கி​றீர்​களா?​ தெலங்​கானா பிரச்​னை​யில் காங்​கி​ரஸ் கட்​சி​யி​னர் வெளி​யி​டும் கருத்​து​கள் அதைத்​தான் நினை​வூட்​டு​கின்​றன.​ வலி​யப் போய் வம்பை விலைக்கு வாங்கி,​​ ஆந்​திர மாநி​லத்தை இடி​யாப்​பச் சிக்க​லில் மாட்டி வைத்​தி​ருக்​கும் காங்​கி​ரஸ் தலை​மை​யின் அதி​புத்​தி​சா​லித்​த​னத்தை நினைத்​தால் சிரிக்​கா​மல் என்ன செய்ய?​உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடித்​தாக வேண்​டும்!
கருத்துக்கள்

எல்லாம் சரியாகச் சொல்லி விட்டு எவ்வாறு குடியரசுத் தலைவர் ஆட்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்? பெயரளவிலான கு.த.ஆட்சியை ஆட்டிப் படைப்பது மத்திய ஆளும கட்சிதானே! முதிர்ந்த தலைமையற்ற அக்கட்சியால் எவ்வாறு சரியாக மாநிலச் சிக்கலைக் கையாள இயலும்? முதிர்ச்சியற்ற கட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதால் முதிர்ச்சியின்மை தொற்றிக் கொண்டதோ? பிரிந்து இருப்பதாயினும் சேர்ந்து இருப்பதாயினும் அமைதியாகக் கையாளுமாறு கூறிய அறிவுரையைப் பின்பற்றினால் போதும். நல்ல தீர்வு கிடைக்கும். அல்லது திருப்பதி, சித்தூர் முதலான தமிழ்ப் பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைத்துவிட்டு எஞ்சிய பகுதிக்குத் தெலங்கானா அல்லது தெலுங்கானா எனப பெயர் சூட்டினால் போதும். என்ன? கிணறு வெட்டப் பூதம் கிளம்பும் என்கிறீர்களா? அதனாலாவது அவர்களிடையே ஒற்றுமை வரட்டுமே! நல்லதுதா‌னே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/19/2009 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ராஜிவ் காந்தியும் ச‌ரி, அவ‌ர‌து இத்தாலிய‌ ம‌னைவியும் ச‌ரி, வெளி நாட்டிலே வாழ்ந்து உல்லாச‌ வாழ்க்கை வாழ்ந்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு இந்த‌ நாட்டின் மீது ப‌ற்று, அக்க‌ரை இருக்கும் என‌ எதிர்பார்த்த‌வ‌ர்க‌ள், எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ள், முட்டாள்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு இந்திய‌ அர‌சு என்ப‌து ஒரு ப‌ண‌ம் கொள்ளைய‌டிக்க‌ குவிந்து கிட‌க்கும் ஒரு க‌ருவூல‌ம். அதில் ப‌ல‌ பீர‌ங்கிக‌ள், குட்ரொசிக‌ள் வ‌ருவார்க‌ள். இந்திய‌ ம‌க்க‌ள் அவ‌ர்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ ஓட்டுபோடுவார்க‌ள், அவ்ர் இற்ந்து விட்டால், அவ்ர் குடும்ப‌மும் வாரிசுக‌ளும் திரும்ப‌வும் கொள்ய‌டிக்க‌ ஓட்டுபோடுவார்க‌ள்
By த‌மிழ்க் கூர்மை
12/20/2009 1:26:00 PM

ஒரு லட்சம் அப்பாவித் தமிழினத்தை, குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்ற வித்தியாசம் பாராது, கொன்று குவித்த இந்த காங்கிரஸும் அதன் தலைவி சோனியவும் அழியனும் என்பது ஈசனின் கருணை, அதை நோக்கிச் செல்வதைத்தான் இந்த நடப்புகள் உணர்த்துகின்றன.அந்த கொலைகார மாபாவியை அழைத்து, தமிழின உணற்வுக்கு மதிப்பளிக்காது, மிகுந்த உபசாரத்துடன் திருப்பதி தேவனைக் காணச் செய்த மாபதகச் செயலுக்கு ஆந்திர தேசமும் அதற்க்கான் விலையைக் கொடுக்கிறது! கைகட்டி வாய் பொத்திக் கிடந்த தமிழக அரசும் எவ்விலை கொடுக்குமோ யாமறியோம். பொருத்திருந்து பார்ப்போம்.

By thulasingam Jayaram
12/19/2009 9:43:00 PM

ஒரு மாநிலத்தை பிரிப்பது தவறில்லை. இங்குள்ளவர்கள் என்னமோ நாட்டையே பிரிப்பதுபோல் நினைகின்றார்கள். இந்தியாவின் மக்கள்தொகை பதினைந்து நாட்டிற்கு சமம். இங்கு குறைந்தபட்சம் நூற்றி அம்பது மாநிலங்கள் இருக்க வேண்டும். ஒரு எம்பி அல்லது MLA முப்பதாயிறது இருந்து ஒரு லட்சம் வரைதான் REPRESENT செய்ய வேண்டும். என்னமோ மாட்டுகூட்டதை கவனிப்பதுபோல் இருக்ககூடாது. இன்னும்சொல்ல போனால் தமிழ் நாட்டை நான்கு மாநிலமாக பிரிக்க வேண்டும். நான் காங்கிராஸ்காரன் அல்லது வன்னியர் இல்லை. இதை சொன்னதற்காக வன்னியர் என்று நினைக்க வேண்டாம். சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வாகிப்பது மிக எளிது. KCR உண்ணாவிருதம் இருந்தார் என்பதற்காக மாநிலத்தை பிரிக்ககூடாது. நிர்வாகத்திற்காக மாநிலத்தை பிரிப்பதில் தவறில்லை.

By RAVI
12/19/2009 8:07:00 PM

காங்கிரஸ் அரசியல்வாதிகள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அல்லது மாஃபியாவில் பணி புரியும் ஊழியர்களை போன்றவர்கள். எல்லோருக்கும் நிதி மற்றும் பதவி கிடைக்கும். Chairman சோனியா, CEO மண்ணு மோகன் மற்றும் பல VPs சேர்ந்து நடத்தும் பெரிய லாபகர நிறுவனம் அது. அதில் companyயின் லாபம் மற்றும் business continuity ரொம்ப முக்கியம். அவர்களுக்கு நாடு மற்றும் மக்கள், மனித உயிர்கள் பற்றிய கவலை இருக்க வாய்ப்பு இல்லை. ஐரோப்பாவில் மக்கள் மொழி அடிப்படையில் நாடுகளாக வாழ்ந்து வரும் நிலையில், இந்திய துணைக்கண்டத்து பல்வேறு இன மக்கள் தங்களை தங்களே ஆண்டு கொள்ள இயலாது என்று கூறி ஒன்றாக்கி வைத்து அடிமையாகளாக அவர்களின் கள்ள குழந்தை காங்கிரசின் ஆளுகையில் வைத்து விட்டுச் சென்றனர்.

By SlaveTamilOfIndia
12/19/2009 5:38:00 PM

குளமும் மேடும் யாருக்கு வேணும்" என்று சொன்னவர் காமராஜர். ம.பொ.சி அல்லர்.

By M.S.Boobathi
12/19/2009 5:22:00 PM

குளமும் மேடும் யாருக்கு வேணும்" என்று சொல்லி ம.பொ.சி என்று சொன்னது காம்ராஜர். ம.பொ.சி அல்லர்.

By M.S.Boobathi
12/19/2009 5:21:00 PM

i am waiting ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

By tamizan(eezam)
12/19/2009 3:09:00 PM

பர்மாவில் நடக்கும் கொடுமையை கண்டும் காணாமல் இந்திய இருப்பதற்குக் காரணம், நாம் அவர்களிடம் பெட்ரோல் வாங்குவதால். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை நாம் தடுக்க முடியாமல் போயிருக்கலாம், ஆனால் ஒரு மனிதாபிமானத்துடன் ஒரு விசாரணை வேண்டும் என்றாவது ஐ,நா சபையில் வாகளிதிருக்கலாம். அடுத்த நாட்டின் இறையாண்மையில் தலியிடுவது வேறு. மனிதபினமில்லாமல் சுயநலத்துடன் நடந்துகொள்வது வேறு. சரி, இந்த ஆப்கான் பிரச்சினையில், நாம் கண்டும் காணாமல் இருப்பது ஒன்றும் நமது தீவிரவாதப் பிரச்சினையை தீர்கபோவதில்லை. அதே சமயம் ஆப்கானில் போரிடுவதால் இந்தியாவில் தீவிரவாதம் அதிகரிக்கும். ஆனால் அதற்காக தலையிடாமல் இருப்பது சரியா? முதலில் பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாதப் பயிற்சியை நிறுத்த வேண்டும். சுருங்கச் சொன்னால் நமது நாட்டை வழி நடத்த சரியான தலைமை இல்லை. மக்களும் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடாமல் பிரித்து பிரித்து ஓட்டுப் போடுகிறார்கள், அதனால் ஆட்சி நடத்துவது சிரமாக உள்ளது

By thamizhan
12/19/2009 12:52:00 PM

இந்திய என்றைக்குமே வல்லரசாக முடியாது. மற்றைய நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பெரிய வித்தியாசம், நமது அரசியல்வாதிகள் மனசாட்சியற்றவர்கள். பணத்திற்காக பெற்ற தாயையும் தாய் மண்ணையும், கொஞ்சம் கூட யோசிக்காமல் விற்கத் துணிந்தவர்கள். நமது நாட்டின் பாதுகாப்பை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்கள். வங்கதேச ஊடுருவல் எவ்வளவு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று தெரிந்தும், நீதிமன்றம் எச்சரித்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் நமது திறமை வெளிப்பட்டுவிட்டது. இலங்கை அரசால் கொள்ளப்படும் மீனவர்களை நாம் கண்டுகொள்வதில்லை. கச்சதீவு உண்டன்பாடு செல்லாது என்று நாமே அறிவிக்கிறோம். சீனா இந்தியாவிற்குள் ரோடு போடக்கூடாது என்றால் நாம் கேட்டுக்கொள்கிறோம். காசை வாங்கிக் கொண்டு மரபணு மாற்றப்பட்ட நெல், பருத்தி மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றைத் தவறு என்று தெரிந்தும் அனுமதிக்கிறோம். coke மற்றும் pepsi போன்ற பானங்களில் அளவுக்கு அதிகமான பூச்சிகொல்லி இருந்தும் அனுமதிக்கிறோம்.

By tamizhan
12/19/2009 12:51:00 PM

ஹேய் அப்படிப் போடு, போடு, போடு. இந்தியாவின் இந்த நிலைக்கு எதாவது ஒரு தீர்வு வேண்டும். ஒரு புரட்சி வெடிக்க வேண்டும்.

By நொந்துபோன தமிழன்
12/19/2009 12:50:00 PM

பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர் தியாகத்தின் மீது கிடைத்ததுதான் தனி ஆந்திரம். தமிழனின் ஆதிக்கம் என்று சொல்லி ஆந்திரத்தின் பகுதிகள் பிரிந்து சென்றன. மலபாரும் அதுபோலவே பிரிந்தது. மொழி வழி மாநிலம் பிரிக்க முதலில் நேரு விரும்பவில்லை. பொட்டி ஸ்ரீராமுலு செய்த அழிச்சாடியம்தான் ஆந்திராவைப் பிரித்ததோடு மட்டுமல்ல, மற்ற மாநில பிரிவினைகளுக்கும் அடித்தளமிட்டது. மொழிவழி மாநிலம் பிரிந்ததால் புதிய பிரிவினைகள் தோன்றின. இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் வேர் விட்டது. கர்நாடகமும் மராட்டியமும் அடித்துக் கொண்டது. "கொஞ்சமோ இங்கு பிரிவினைகள்?" அப்படி பிரிவுகள் இருந்தால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்தான். பல்வேறு வேற்றுமைகளைக் காட்டி வாழ்க்கை முழவதையும் போராட்டக் களமாக மாற்றி பிழைப்பு நடத்த பலரும் முன்வந்து விடுவார்கள். "என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?"

By Adithyan
12/19/2009 12:39:00 PM

திரு ராஜ் அவர்களே, நீங்கள் சொல்லும் இடங்கள் தவிர தமிழனுக்குத் தமிழனே செய்த தவறால், தேவிகுளம், பீர்மேடு முதலான இடங்களையும் இழந்தோம். "குளமும் மேடும் யாருக்கு வேணும்" என்று சொல்லி ம.பொ.சி. நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, பட்டம் தானுப்பிள்ளையிடம் அவற்றைப் பறிகொடுத்தோம். எல்லாவற்றுக்கும் காங்கிரஸ் கட்சியின் துரோகம்தான் காரணம் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

By Adithyan
12/19/2009 12:26:00 PM

The same KCR was agitating during the tenure of late Rajasekhar Reddy but at that time Reddy had controlled everything and not this much agitation and loss. This KCR also for the sake of publicity and money he made this drama. Earlier too he enjoyed ministerial berth in the centre though some of his MLAs asked him to resign for the sake of separate Telengana. He was adamant to resign. As clearly stated in the editorial page, it shows weakness of the present Congress government.If the same state people fight each other, how India would be united? General Public, please think and do not make pieces of India and it would pave a way for other social elements to intrude into our land.

By s.suresh
12/19/2009 12:26:00 PM

Let us not forget that India is a democratic country and consists of more than 35 to 40 languages speaking people. Its quite genuine that we have problems in our democratic set up. In no other cuntry in the world, this much language variations prevail. So long as the politicians are currupt and self centred, these problems will countinue, let any party rule the centre government. What is more required is the intelluctual approach and not hasty reactions. I dont know how many of us agree to this point.

By Rajasekaran Iyer
12/19/2009 12:07:00 PM

Is there anybody in Chithoor who does not speak Tamil. Why not separate Chithoor, Thirupathy, Kalahasty, etc which naturally belong, and attach to Tamilnadu. As always, Thiru Thiruvalluvan Ilakkuvanar is right here also. Let the related officials take some action in this respect.

By ATamil
12/19/2009 8:57:00 AM

All the decisions are with the view for next elections only. By allowing Telungana, Central Govt has started new division policy whereby other protestors can also join this move. Next wait for maoists to claim seperate states in all regions. The Home ministry is not going to control them as they are trouble makers in non-congress states. As long as we validate the militancy and other seperatism with reasons, we cannot take any stern action and I am worried that this would lead to situation we had immediately after independance. Jai Hind

By Raghu
12/19/2009 8:28:00 AM

திருப்பதி சித்தூர் மட்டுமா? நேருவின் பாரபட்ச அரசாங்கம் செய்த தவறால் நெல்லூர் , கோலார் தங்கவயல், மற்றும் பாலக்காடு போன்ற பல பகுதிகள் மற்ற மாநிலத்துக்கு போனது.

By raj
12/19/2009 8:26:00 AM

முசோலினியா செய்வதைப் பார்த்தால் ரஷ்யாவை அமெரிக்கா எவ்வாறு கோர்பசேவை வைத்து பிரித்ததோ அதே போன்று இந்தியாவையும் துண்டு துண்டாக பிரிந்து விடுமோ என்று தோன்றுகிறது? அவ்வாறு இந்தியா உடையுமானால் அது முசோலினியா, மண்ணுமூட்டையின் ஆட்சியில்தான் நடக்கும். சிக்கலான விஷயத்தை சிறிது அறிவுப்பூர்வமாக செய்திருந்தால் இத்தனை அழிவு ஏற்பட்டிருக்காது.

By நவீன் சென்னை
12/19/2009 8:11:00 AM

enthiyavil vakkalikkum perum muttalkal erukkum varaikkum entha enthiyavai yaralum kappatra mudiyathu

By kandasamy
12/19/2009 7:24:00 AM

நாட்டில் சிந்திக்கும் திறனற்ற மூட ஓட்டு வங்கிகள் இருக்கும் வரை நாட்டில் குளப்பம்தான். குளம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர்கள் காங்கிரசார்.

By பாலாஜி
12/19/2009 4:09:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக