Last Updated :
சித றிக் கிடக்கும் உலகத் தமிழர்களை இணைக்கவும் தமிழர்கள் யாவரும் இணையத்தின் அதிகபட்ச பயனை அடையவும் உருவாக்கப்பட்டதே ஆன்டோ பீட்டர் இம் மாநாடு சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்றது. தமிழ் இணைய மாநாட்டின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் ஆன்டோ பீட்டர் அதில் கலந்து கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம்.ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு எத்தனையாவது மாநாடு. எத்தனை நாள் நடைபெற்றது, எந்தெந்த நாடுகள் கலந்து கொண்டன?ஜெர் மனியில் நடைபெற்றது எட்டாவது உலக தமிழ் இணைய மாநாடு. இது ஐரோப்பாவில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாடு. தமிழகத்தில் இருந்து சுமார் இருபத்தி ஐந்து பேர் கலந்து கொண்டனர். அக்டோபர் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் ஜெர்மனியில் உள்ள யூனிவர்சிட்டி ஆப் கோலோன் என்ற பல்கலைகழகத்தில் நடைபெற்றது.அது ரோமன் கத்தோலிக்க நகரம். யூனிவர்சிட்டி ஆப் கோலலோனிற்கு ஒரு மதிப்பு உண்டு. தமிழகத்திற்கு வெளியே உள்ள மிகப்பெரிய தமிழ் நூலகம் அங்கு தான் அமைந்துள்ளது. அங்கு உள்றிக்கே நீக்கோலஸ் எனும் பெண்மணி அத்துறைக்கான தலைவியாக இருந்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்.மாநாட்டில் உலக நாடுகளில் ஐரோப்பாவில் உள்ள முக்கிய நாடுகள், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.மாநாட்டின் முக்கியமான விஷயங்கள்?மாநாட் டைப் பற்றி குறிப்பிடும் போது அதன் தலைவரான கல்யாணசுந்தரம் அருமையான ஒரு வார்த்தை சொன்னார். ஒரு துறை நன்றாக வளரும் போது அதற்கான நிர்வாகங்களின் சந்திப்பும் நேர்காணலும் நடைபெற்றால் தான் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று கூறினார். ஒவ்வொரு இணைய மாநாட்டிலும் தொழில் நுட்ப தமிழ் இணையம் மேலோங்கி வளர்ச்சி பெறுவது பெருமைக்குரிய விஷயம். மு.அனந் தகிருஷ்ணன் தமிழக அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். தமிழ் நாட்டில் இருந்து அரசு உறுப்பினர்களாக செம்மொழி வாரியம், தேசிய தகவல் தொடர்பியல் மையம், தமிழ் இணைய பல்கலைக்கழகம், ஆகிய துறையில் இருந்து கலந்து கொண்டார்கள். அடுத்த தமிழ் இணைய மாநாடு நம் தமிழகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோவையில் நடைபெறவுள்ளது. தமிழ் மொழியின் தாயகமான தமிழகத்தில் நடைபெற இருப்பதால் மிகப்பெரிய மாநாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த தமிழ் இணைய மாநாடுகளிலேயே இந்த மாநாடு தான் மிகப்பெரிய மாநாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அனந்த கிருஷ்ணன்தான் இதன் தலைமை பொறுப்பேற்கிறார்.ஒரு மாநாடு தமிழகத்தில் நடைபெறுவதற்கும், அயல் நாடுகளில் நடைபெறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வெளிநாடுகளில் உள்ளவர் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் நடக்கும் மாநாட்டை திருவிழா போல் கருதுகிறார்கள். இணைய மாநாடுகள் வெளிநாடுகளில் நடந்தாலும், என்னைப் போன்றவர்களுக்கு பிற நாடுகளில் நடைபெற்றதை விட மிகப்பெரிய மாநாடாக தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்பது தான் எண்ணம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கிறது?தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்து எந்த மொழி வளர்ந்ததோ அந்த மொழி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஐரோப்பாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் மொழிகள் இருந்ததாம். இப்போழுது 90 மொழிகள் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 910 மொழிகள் அடையாளமே இல்லாமல் போய்விட்டது என்றால் அது தொழில் நுட்பத்தைச் சார்ந்து வளரவில்லை என்பது தான் காரணம்.அதே மாதிரி நம் ஆசிய மொழிகளில் தொழில் நுட்பத்தைச் சார்ந்து வந்து மிகப் பெரியளவில் வளர்ச்சி கண்ட மொழி எது என்றால் அது சீனமும், தமிழும் தான். இந்தி மொழி கூட அதற்கு அடுத்து தான் இருக்கிறது. அப்படியென்றால் இன்னும் நாம் டெக்னாலிஜியில் ஸ்ட்ராங் ஆகணும். உதாரணத்திற்கு ஒரு கேமிராவை எடுத்துக் கொண்டால் அதில் மெனு ஆங்கிலத்தில் தான் இருக்கும். அது கூட தமிழில் வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். யூனி கோட் பான்ட் பிரச்னைகளை ஆலோசித்தீர்களா? ஒரே விசை பலகை இல்லாமல் எப்போழுது மாற்றங்கள் வரும்? 1999 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் தலைமையில் 2 ஆம் தமிழ் இணைய மாநாடு நடந்தது. அப்போழுது தான் முதன் முறையாக நிரந்தரமான கீபோர்டு வந்தது. நிரந்தரமான எழுத்துருக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது தான் இன்று அனுசரணையாக இருக்கிறது. அரசு மையங்களில் பயன்படுத்தப்படுகிறது. அந்த எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் வராது.எவ் வளவோ தமிழ் வெப்சைட்கள் யூனிகோடில் தான் இயங்குகின்றன. அதில் பிரச்னைகள் எதுவும் இல்லையே. சிக்கல் இருக்கும் திசையை நோக்கி எதிர் நீச்சல் அடித்தால் தான் பிரச்னைகள் தீரும். இணையதளத்தில் சைபர் க்ரைம் குற்றங்கள் நிறைய ஏற்படுகிறதே.. அதை தடுப்பதற்கு என்ன முயற்சி செய்தார்கள்?சைபர் க்ரைம் சட்டத்தை அறிமுகப்படுத்திய பதினொராவது நாடு இந்தியா. தொழில் நுட்பத்தை மீறி தொழில் நுட்பத்தை திருடுபவர்கள் மற்றும் அதைச் சார்ந்த குற்றங்கள் தான் சைபர் க்ரைம். சட்டம் கொண்டு தடுப்பதைவிட எல்லா வகையிலும் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருந்தால் இதை நாமே தடுக்க முடியும். மொபைல் சம்பந்தமாகவோ, ஆன்லைன் சம்பந்தமாகவோ, ஈ -காமர்ஸ் அல்லது வேறு எந்த தொழில்நுட்பம் சார்ந்தோ நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பு. தமிழ் இணையத்தைப் பொருத்தவரை பிளாக் ஸ்பாட் உருவாக்குதல் இப்பொழுது எல்லா இடங்களிலும் பரவியுள்ளது அது வரவேற்கத்தக்கதா?பிளாக் ஸ்பாட் உருவாக்குதல் தமிழ் இணையத்திற்கு பெரும் வளர்ச்சி தான். ஒரு கவிஞரையோ, எழுத்தாளரையோ, நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் தமிழால் அவர்களை தொடர்பு கொள்ள நினைனப்பவர்கள் நெருங்கியிருப்பது பிளாக்ஸ் மூலம்தான்.ஆரோக் கியமானதா என்றால் ஒரு சிலர் தேவையில்லாத சிலவற்றையும் எழுதி தள்ளிவிடுகிறார்கள் இது ஆரோக்கியமானது அல்ல. அது அவர்கள் பார்வையில் தான் சிந்திக்க வேண்டும். வணிக நோக்கத்துடன் சிலர் தகவல்களைக் கொடுக்கிறார்கள்.அவர் களுக்கு பெருமளவு உபயோகப்படுகிறது. சிலர் பிளாக் மட்டும் கொடுப்பவர்கள் பொது சிந்தனைவாதிகள் இவர்கள் எதற்கும் தயாராக உள்ளவர்கள். இது அவரவர் மன சிந்தனையைப் பொருத்தது என்பது தான் என்னுடைய கருத்து. சுற்றுலாத் துறை,விளையாட்டு, மருத்துவத் துறை இதில் தமிழ் இணையம் நிறைய பங்கெடுத்து கொள்கிறது. இதன் பயன்கள் எந்தளவிற்கு உபயோகமாக இருக்கிறது?சுற்றுலா, விளையாட்டு, மருத்துவம், ஆன்மிகம் இதற்கான தேவைகள் அயல்நாட்டு தமிழர்களிடம் பெரிய தேடல் ஏற்படுத்தியிருக்கிறது.இன் றைய காலகட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தேவைகளை இணையத்தின் மூலம் செய்துவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பணமும், நேரமும் மிச்சப்படுகிறது. ஆனால் அதன் தேவைகள் இன்னும் முழுமையாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.காலப்போக்கில் தமிழ் இணையம் பெரிய வளர்ச்சி ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.நிகழ்வுகள் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் இணையத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?தமிழ் இணையத்தைப் பொருத்தவரை வெற்றிகரமான சூழ்நிலையில்தான் இன்று இருக்கிறது. பத்திரிகைகள், இதழ்கள், தனித்தனி எழுத்தாளர்கள், தனித்தனி படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் இணையத்தில் பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய ஏற்பட்டிருக்கிறது.ஒவ் வொரு தமிழனும்கூட சென்னைக்குள்ளேயே தகவலை பரிமாறிக் கொள்ள இணையம் மிகப்பெரியளவில் உதவியாக இருக்கிறது. பொருளாதாரச் சுமையையும் தொழில் நுட்பம் தவிர்த்திருக்கிறது,நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது என்பது மிகப்பெரிய ஒன்று.நமக்கு இரண்டு விஷயங்கள் தான் ஒன்று நேரத்தை சுருக்குவது, தகவல் தொடர்பை எளிமைப்படுத்துவது. நம் தமிழ் இணையம் இந்த இரண்டு பணியையும் ரொம்ப அருமையாகச் செய்திருக்கிறது. பொருளாதார ரீதியாகத் தமிழனுக்கு தமிழ் இணையங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை.இதில் இன்னும் தமிழ் கலைக்கல்லூரியில் படிக்கும் தமிழ்த்துறை மாணவர்களுடைய பங்களிப்பும் பெரிய அளவில் இருந்தால் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
By தவா
12/15/2009 10:54:00 AM
By அனுராஜ்
12/15/2009 8:45:00 AM
By HB Stella
12/15/2009 6:57:00 AM
By venkatachalamSubramanian
12/13/2009 9:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*