வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஜனவரி 10-க்குள் தமிழர் மறுகுடியமர்வு: தில்லியிடம் இலங்கை குழு உறுதி



புது ​தில்லி,​​ டிச.​ 10: ​ ​ ​ இலங்​கை​யில் தற்​போது நிவா​ரண முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள தமி​ழர்​கள் அனை​வ​ரும் அடுத்த மாதம் 10-ம் தேதிக்​குள் அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வர் என,​​ தில்​லிக்கு வந்​துள்ள அந்த நாட்​டின் தூதுக் குழு​வி​னர் தெரி​வித்​த​னர்.​மேலும்,​​ இலங்​கை​யில் அதி​பர் தேர்​தல் முடிந்​த​வு​டன்,​​ தமி​ழர்​கள் பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண்​ப​தற்​கான முயற்​சி​க​ளும் உட​ன​டி​யாக மேற்​கொள்​ளப்​ப​டும் என அந்​தக் குழு​வி​னர் தெரி​வித்​த​னர்.​இலங்கை அதி​ப​ரின் மூத்த ஆலோ​ச​கர் பாசில் ராஜ​பட்ச,​​ செய​லர் லலித் வீர​துங்க,​​ பாது​காப்​புத் துறை செய​லர் கோத்​த​பய ராஜ​பட்ச ஆகி​யோர் அடங்​கிய தூதுக் குழு​வி​னர் தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.​ கிருஷ்​ணாவை சந்​தித்​துப் பேசி​னர்.​இலங்​கை​யில் நிவா​ரண முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள தமி​ழர்​களை அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​து​வது குறித்து இந்​தக் குழு​வி​ன​ரு​டன் கிருஷ்ணா விரி​வா​கப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.​இந்​தச் சந்​திப்​புக்​குப் பிறகு,​​ பாசில் ராஜ​பட்ச செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​இந்​தப் பேச்​சு​வார்த்தை மிக​வும் சுமு​க​மா​க​வும்,​​ நன்​றா​க​வும் இருந்​தது.​இலங் ​கை​யின் வடக்​குப் பகு​தி​யில் முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள அனைத்து தமி​ழர்​க​ளுக்​கும் எல்​லா​வி​த​மான ஜன​நா​யக உரி​மை​க​ளும் உள்​ளன.​ வரு​கிற இலங்கை அதி​பர் தேர்த​லில் அவர்​கள் வாக்​க​ளிப்​ப​தற்கு உரிமை உண்டு.​தமி​ழர்​கள் பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண இலங்கை அரசு உறு​தி​பூண்​டுள்​ளது.​ அதி​பர் தேர்​தல் முடிந்​த​வு​டன்,​​ இந்த பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண்​ப​தற்​கான முயற்​சி​கள் உடனே மேற்​கொள்​ளப்​ப​டும்.​தமி​ழர்​கள் பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண்​ப​தற்​காக,​​ இலங்கை அர​சி​யல் சட்​டத்​தில் தேவை​யான அனைத்து திருத்​தங்​க​ளும் மேற்​கொள்​ளப்​ப​டும்.​இந்​தி​யா​வின் நலன்​க​ளை​யும்,​​ பாது​காப்​பை​யும் உறு​திப்​ப​டுத்​து​வ​தில் இந்​திய அர​சு​டன் இலங்கை ஒருங்​கி​ணைந்து செயல்​ப​டும்.​ அதே​நே​ரத்​தில்,​​ இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் போது,​​ இந்​தி​யா​வின் பாது​காப்பு தொடர்​பான பிரச்னை எது​வும் விவா​திக்​கப்​ப​ட​வில்லை.​இந்​திய மீன​வர்​கள் பிரச்​னையை பொருத்​த​வ​ரை​யில்,​​ இரு நாட்டு மீன​வர்​க​ளி​ட​மும் தத்​த​மது கடல் எல்​லை​யைத் தாண்டி மீன் பிடிக்​கும் போக்கு உள்​ளது.​ கடல் எல்லை எது என்​பது மீன​வர்​க​ளுக்கு தெரி​யா​த​து​தான் இந்த பிரச்​னைக்கு கார​ணம்.​இந்த பிரச்​னையை சட்​ட​ரீ​தி​யாக அணு​கு​வ​தை​விட,​​ மனி​த​நேய அடிப்​ப​டை​யில் அணு​கு​வ​து​தான் சரி​யாக இருக்​கும்.​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் கிருஷ்​ணா​வு​ட​னான பேச்​சு​வார்த்​தை​யின் போது கச்​சத்​தீவு பிரச்னை பற்றி எது​வும் விவா​திக்​கப்​ப​ட​வில்லை.​இலங்​கை​யில் இடம் பெயர்ந்த தமி​ழர்​களை அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​து​வ​தற்கு இந்​தியா அளித்து வரும் உத​வி​யைப் பாராட்​டு​கி​றேன் என்​றார் பாசில் ராஜ​பட்ச.
கருத்துக்கள்

முதலில் போர் முடிந்ததும் தீர்வு, அடுத்து தலைவர் தேர்தல் முடிந்ததும் தீர்வு, பின் பொதுத் தேர்தல் நடந்ததும் தீர்வு, பின்னர் சிங்களர்களிடையே நிகழும் உள்நாட்டுப் போர் முடிந்ததும் தீர்வு, இதற்கும் பின்னர் தமிழர் யாரும் வதைமுகாம் நடவடிக்கைகளில் பிழைத்திருந்தார்கள் எனில் அவர்களும் அழிந்தபின் தீர்வு என்பதை நடைமுறைப்படுத்தும் சிங்கள ஆரியத் தலைவர்கள் வாழ்க! அவர்களின் கைக்கூலிகள் வாழ்க!வாழ்க!! தூங்கும் தமிழினமே தூங்குக! தூங்குக!! மாளும் மக்களினத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கா மனித நேயமே உறங்குக!உறங்குக!!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக