cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 மார்ச், 2012

vinmeenkal - a good film: விண்மீன்கள்

விமர்சனம்: விண்மீன்கள்

First Published : 26 Mar 2012 12:00:00 AM IST


அனுபவம் வாய்ந்த இயக்குநர்களே தேர்ந்தெடுக்கத் தயங்கும் ஒரு கதைக் களத்தைத் தன் அறிமுகப் படத்திலேயே துணிச்சலாகத் தேர்ந்தெடுத்து, அதை அற்புதமாகக் காட்சிப்படுத்திய இயக்குநர் விக்னேஷ் மேனன் பாராட்டுக்குரியவர்.நரேன்-மீரா தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை, செரிபரல் பால்ஸி என்கிற நோயால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழ் செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட வெறும் ஜடம் எனக் கருதக்கூடிய வகையில் உள்ள அந்தக் குழந்தையைக் கைவிட மனமில்லாமல் பாசத்தையும் பரிவையும் காட்டி, தன்னம்பிக்கையூட்டி வளர்க்கின்றனர் பெற்றோர். இந்தச் சூழ்நிலையில் இளைஞனாக வளரும் அவன் ஒரு பள்ளி ஆசிரியராக எப்படி உருவெடுக்கிறான் என்பதை பாசம், காதல், சோகம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளைக் கலந்து நெகிழ்ச்சியுடன் கூறுவதே கதை.நரேன், மீராவாக விஷ்வா, ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். மகனுடைய குறையை அறிந்து ஆரம்பத்தில் அழுது புலம்பினாலும் பின்னர் தங்களைத் தேற்றிக்கொண்டு மகனுக்கு தன்னம்பிக்கையூட்டி அவனை ஆளாக்கும் பெற்றோர் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். செரிபரல் பால்ஸியால் பாதிக்கப்பட்ட சிறுவனாய் நடித்துள்ள கிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளைஞன் வேடத்துக்கு ராகுல்; படம் முழுவதும் வீல் சேரில் உட்கார்ந்தபடி, செரிபரல் பால்ஸி குறைபாடுள்ளவர்களின் உடல் மொழியை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய காதலியாக வரும் அனுஜா ஐயர், மனதில் பதிகிறார். படத்தின் இன்னொரு முக்கியத் தூணாக வரும் பாண்டியராஜன், தன்னுடைய அனுபவத்தின் மூலம் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகப் பரிமளிக்கிறார்.அனைத்துக் கதாபாத்திரங்களும் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறும் பொருத்தமான முக பாவனைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்குரிய நடிப்பைப் பதிவு செய்துள்ளனர்.படத்தைப் பார்வையாளர்களோடு ஒன்றச் செய்வதில் ஜூபினின் இசையும் ஆனந்தின் ஒளிப்பதிவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னணி இசையும் பாடலிசையும் அற்புதம். "உன் பார்வை போதும்...', "அறியாத பருவத்தில்...' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில் தாலாட்டும் தன்னம்பிக்கையும் தடம்பதித்துள்ளன.படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இடம்பெறும் வித்தியாசமான கேமரா கோணங்கள், உதகையின் அழகை உள்ளம் உவகை கொள்ளும்வகையில் படமாக்கிய விதம் போன்றவை ஆனந்தை முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் சேர்க்கின்றன.உடலால் பாதிக்கப்பட்ட ஒருவனை மனதாலும் பாதிக்க வைத்துவிடக்கூடாது என்ற கருத்தைக் கூற இயக்குநர் மேற்கொண்டுள்ள திரைக்கதை உத்திகள் "ஏ' கிளாஸ் ரகம். "தோற்றுவிடுவோம்னு நினைத்து விளையாடாம இருக்கக் கூடாது', "ஃபிஸிக்கலி சேலஞ்சானவங்களை மெண்ட்டலி சேலஞ்சாக்கிடாதீங்க' போன்ற வசனங்கள் பலம்.அன்பின் ஆழத்தையும், உறவுகளின் உன்னதத்தையும், தன்னம்பிக்கையின் மகத்துவத்தையும் நல்ல கதை மூலம் வணிகச் சிந்தனை இல்லாமல் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் மேனன்.காதல் காட்சிகளிலும் ஆங்காங்கே மெதுவாகப் பயணிக்கும் காட்சிகளிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தாலும் அதனால் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, தான் எதிர்கொண்ட தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி, பின்னாள்களில் பிரபலமான எழுத்தாளராகவும் சமூக சேவகராகவும் திகழ்ந்த அமெரிக்கப் பெண்மணி ஹெலன் கெல்லர் கூறிய - "மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கையே' என்ற உண்மையைத் திரையில் உரத்துச் சொல்லியிருப்பதில் பிரகாசித்திருக்கிறது... "விண்மீன்கள்'!
 
-தினமணி

வியாழன், 29 டிசம்பர், 2011

ignoring anti-thamizh films will continue: தமிழ்ப்பகைப் படங்கள் புறக்கணிப்பு தொடரும்!


தமிழ்ப்பகைப் படங்கள் புறக்கணிப்பு தொடரும்!

பதிவு செய்த நாள் : 29/12/2011



“தமிழ்ப் பெயர் இல்லாத ஒசுத்தி முதலான படங்களைப் புறக்கணிப்போம்” எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். தொடக்கத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி, தமிழ்த்தேசியப் பொதுவுடைமை இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு,  முதலான அமைப்பினரும் குறுந்தகவல் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய அமைப்புகள், குறுந்தகவல் படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள் எனப்பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்  இணைந்து செயல்படுத்தி வருவதில் மகிழ்ச்சியே. ஆனால், பெருமபாலோர் மறியல், ஆர்ப்பாட்டம், முதலியன மூலம் எதிர்பபை வெளிக்காட்ட வேண்டும் என வேண்டுகின்றனர்.

நம் எதிர்ப்பு ஒசுத்தி படத்திற்கு மட்டும் அல்ல. இராசபாட்டை முதலான பிற படங்களுக்கும்தான். ஒசுத்தி படத்தைப் பொறுத்த வரை திரு இராசேந்தர் வருத்தம் தெரிவித்து, இனி வரும் படங்களில் தமிழில் பெயர் சூட்டுவதாகவும் தாமும் அயற்பெயர் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறிருக்க ஒரு படத்தை மட்டும் எதிர்ப்பதால் பயனில்லை. இப்பொழுது வெளிவந்துளள இராசபாட்டை முதலான அயற் பெயர்ப் படங்களுக்கும் இனி வர உள்ள விசுவரூபம், மைக் செட் பாண்டி முதலான எல்லா படங்களுக்கும் நம் எதிர்ப்பு தேவை. திரைப்படம் தொடர்பான அமைப்புகளுக்கு இது குறித்து  மடல் எழுதி வருகிறோம். குறுந்தகவல்கள் மூலமாக புறக்கணிப்பு வேண்டுகோளைப் பரப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.

நாம் மேலும முனைப்பாக முதலில்
அயற் பெயர்,
தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான காட்சிகள்
முதலான அனைத்திற்கும் எதிரான நம் கருத்துகளைத் தொடர்ந்து பரப்புவோம்.

கோடை விடுமுறையில் தமிழ் நலன் காக்கும் பரப்புரைகளை விரிவு படுத்துவோம்.

மாணாக்கர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் உரையாடல்கள், கூட்டங்கள், சந்திப்புகள் முதலானவை மூலம் கலைத்துறை மட்டிலும் அல்லாமல் எல்லாத்  துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழே தலைமையிடம் பெற வேண்டிய உணர்வை வெளிப்படுத்துவோம்.

தமிழ்நாட்டில்
தமிழுக்கே தலைமை!
தமிழர்க்கே முதன்மை!
என்னும் நிலையை உருவாக்குவோம்.

அவரவர் நாட்டில் அவரவர் வாழும் பொழுது
நற்றமிழ் நாட்டில் நந்தமிழர் வெல்லும் சூழ்நிலையை  உருவாக்குவோம்!

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

thamizh in cinema: திரைப்படங்களில் தமிழ் – நேரலையில் கலந்துரையாடலாம்


திரைப்படங்களில் தமிழ்  நேரலையில் கலந்துரையாடலாம்

பார்வையாளர்களுக்கு வணக்கம்,
வரும் சனிக்கிழமை (03.12.2013) மாலை 3.00 மணி முதல் 4.00மணி வரை
நமது நட்பு இணைய த் தொலைக்காட்சியில் தமிழ் காப்புக் கழகத்தின் தலைவர் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்,
திரைப்படங்களில் தமிழ் என்பது குறித்துப் பேச இருக்கிறார்.
தமிழ்ப் படங்களின் பெயர்கள், பாடல்கள், கதைப்பாத்திரப் பெயர்கள் போன்றவற்றில் நடக்கும் தமிழ்க் கொலை குறித்தும் பேச உள்ளார். மேலும், தற்போது வெளியாக இருக்கும் “ஒஸ்தி” படத்தின் பெயரை மாற்றகோரியும்  கொலை வெ றிப் பாடலின் தமிழ்க் கொலை குறித்தும் மாலை மலர், மாலை முரசு, , டெக்கான் கிரானிக்கல், நக்கீரன் போன்ற வார இதழ்களிலும் செய்தித் தாள்களிலும் விடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கமும் அளிக்கயிருக்கிறார். நம் நட்பு நேயர்களான தாங்கள் இந்த நேரலை நிகழ்ச்சியில் ஆவலோடு தொடர்பு கொண்டு பேசி உங்கள் கருத்தையும், தமிழ் உணர்வையும் வெளிப்படுத்த  வேண்டுகின்றோம்.

தவறாமல் பாருங்கள்! பங்க‌ேற்றுத் தமிழைக் காக்க உரிய கருத்துகளைத் தெரிவியுங்கள்.
நேரலையில் பேச: 044- 65497744

--

ஒஸ்திக்கு மாற்றுப்பெயர் என்ன வைக்கலாம்?!



osthe name will change...?
நடிகர் சிம்பு நடித்துள்ள ஒஸ்தி படத்திற்கு மாற்றுப்பெயராக என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது ஒஸ்தி படக்குழு. கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளுவர் இலக்குவனார் என்றொரு தமிழறிஞர், சிம்புவுக்கு ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். அந்த ஆலோசனையை கேட்ட சிம்புவும், தரணியும் பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்களாம்.

அப்படியென்ன ஆலோசனை சொன்னார் இலக்குவனார்?. ஒஸ்தி என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படி பெயர் வைப்பது சுத்த தமிழாகாது. அதனால் தம்பி சிம்பு, வேறு தலைப்பை வைக்க வேண்டும். இதே ஒஸ்தியை மேன்மை என்று வைக்கலாமே. உயர்வு என்று வைக்கலாமே என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருக்கிறாராம், இலக்குவனார். இதனால் படத்தின் பெயரை மாற்றலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம் படக்குழு.

வெள்ளி, 25 நவம்பர், 2011

தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் 'ஒஸ்தி' படத் தலைப்பு மாற்றப்படுமா?


சினிமா செய்திகள்
சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு `ஒஸ்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு:
சிம்புவின் ஒஸ்தி படம்
தலைப்பு  மாற்றப்படுமா?
சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு `ஒஸ்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீசாகிறது. இந்த நிலையில் ஒஸ்தி தலைப்பை மாற்ற வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
தமிழ் அமைப்பு கழக தலைவர் லக்குவனார் திருவள்ளுவர் நடிகர் சிம்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
 
தமிழ் பெயர்கள் தாங்கி திரைப்படங்கள் வரும் இக்கால கட்டத்தில் ஒஸ்தி என கொச்சைப் பெயரை படத்துக்கு வைத்திருப்பது சரியல்ல. இது போன்ற கொச்சையாக பெயர் வைத்தால் தான் படம் வரவேற்பு பெறும் என்று இல்லை. உசத்தி அல்லது ஒசத்தி என்று பேச்சு வழக்கிலாவது பெயர் வைத்து இருக்கலாம்.
 
நல்ல தமிழ் பெயர் சூட்டினால் சந்தோஷப்படுவோம். தங்கள் பாடல் எழுதும் போது கூட அயல்மொழி கலாவாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். `ஒஸ்தி' பெயரை மாற்றா விட்டால் அப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. `ஒஸ்தி'' பெயரை மாற்றலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி நெருங்குவதால் தலைப்பை மாற்றுவது சிரமம் என்கின்றனர்.
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Friday, November 25,2011 05:00 PM, சாமியார் said:
ஒஸ்தி மூன்றேழுத்து சிம்பு மூன்றெழுத்து ராசியில்லை. ஒசத்தி நல்ல பேரு நாலு எழுத்து நாலு பேர் சொன்னா கேட்கணும்
Friday, November 25,2011 04:55 PM, ஆல்வார்கடியன் said:
ஐயா தமிழ் இடி தாங்கி, முதலில் விமான நிலையம் சென்று பாரும். வெளி நாடு செல்லும் தமிழன் யாரும் தமிழில் பேச முடியாது செக்யூரிட்டி செக்கிங்கில். ஒரே இந்தி தான். அதை மற்ற முடியுமா என்று பாரும், பிறகு படத்தின் பெயரை மாற்றலாம்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....

புதன், 27 ஜூலை, 2011

வன்முறை, ஆபாசத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை: தமிழக அரசு

பாராட்டுகள். இதற்கு முன்னர் மோசடியாக வரி விலக்கு பெற்ற நிறுவனங்களிடம் இருந்த அளிக்கப்பட்ட விலக்கினைத் திரும்பப் பெறுவது குறித்தும் ஆராயலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வன்முறை, ஆபாச திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை: 
தமிழக அரசு
First Published : 27 Jul 2011 12:57:21 AM IST

சென்னை, ஜூலை 26: தமிழ்த் திரைப்படங்களில் "யு' சான்று பெற்ற படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுநீல் பாலிவால் வெளியிட்ட உத்தரவு:திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன. எனவே, கேளிக்கை வரிச்சலுகையை திரைப்படங்கள் பெறுவதற்குத் தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் தகுதி வரையறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.திரைப்படத் தணிக்கை வாரியத்திடம் இருந்து "யு' சான்று பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும். திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். புதிய குழு: கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும். திரைப்படங்களைப் பார்வையிட்டு வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

புதன், 27 ஏப்ரல், 2011

Cinema and cesor - dinamani article: திரைப்படமும் தணிக்கையும்

<< பேச்சில் சிறந்தவர் யாரு? - அண்ணா >>இவ்வாறு பாட்டில் இடம் பெற்றதால்  மாற்றச் செய்தவர்கள் தணிக்கைக் குழுவினர். படங்களில் தி.மு.க.கொடி இடம்பெறக் கூடாது எனத் தடுத்தவர்கள் தணிக்கைத் துறையினர். <<கூந்தல் கருப்பு!  குங்குமம் சிவப்பு >> எனப் பாடல் வரி வருவதைத் தடுக்க முயன்றவர்கள் தணிக்கைத்துறையினர். இவ்வாறு அடுக்கிக் கொண்டேபோகலாம். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் இவர்களுக்குத்தான் பதவிகள் கொடுத்து ஊக்கப்படுத்தியது தி.மு.க. அரசு-இப்பொழுது போல்! (அந்தக் கொள்கையில் எக்காலமும்  மாற்றமில்லை) எவ்வகைச் சார்பும் இல்லாதவர்களாக, இலக்கிய ஈடுபாடும் கலை,பண்பாடு,  மனியத நேயம், பகுத்தறிவு (இறை மறுப்பல்ல; இறை நம்பிக்கையும் இருக்கலாம்; நம்பிக்கை யின்மையும இரு்ககலாம்)ஆகியவற்றில் ஆர்வமும்  தமிழ் நலச் செயல்பாடுகளும் உடைய தமிழர்களைத் தணிக்கைக் குழுவில் அமர்த்தினால்தான் சிறந்த திரைப்படங்களைக் காண இயலும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



சினிமாவும் தணிக்கையும்

First Published : 27 Apr 2011 01:55:46 AM IST


இந்தியாவில் சினிமாவுக்கு சென்சார் உண்டு. அதாவது இந்தியாவில் திரையிடப்படும் ஒவ்வொரு படமும் பொதுமக்கள் பார்ப்பதற்கு உகந்ததுதானா என்று சென்சார் செய்யப்பட்ட பின்னர்தான் பொது இடங்களில் திரையிடப்படுகிறது. சென்சார் என்பதைத் தமிழில் தணிக்கை என்று குறிப்பிடுகிறார்கள்.  சினிமாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்குத்தான் தணிக்கை என்று இல்லை. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கும் தணிக்கை செய்யப்படாத படத்துக்கும்கூட தணிக்கை உண்டு. கதைப்படங்கள் என்றுதான் இல்லை. விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் என்று எல்லாவற்றுக்கும் தணிக்கை உண்டு.  சினிமா என்பது கலைப்படைப்பு. கலைக்குத் தணிக்கை என்பது கொடுமையானது. அது சுதந்திரத்தைப் பாதிக்கும். சில நாடுகளில் உள்ளதுபோல சினிமா தயாரிப்பாளர்களின் சுயகட்டுப்பாடே போதும்; தணிக்கை தேவையில்லை என்று சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்கள், அசல் கலைஞர்கள் எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் வரையில் கலைஞர்களின் கோரிக்கை சென்றது.  சினிமா கலைப்படைப்பு என்பது முழுக்க முழுக்கச் சரியான வாதமல்ல. அது வியாபாரம், கேளிக்கை, பொழுதுபோக்கு என்று பல அம்சங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் ஆபாசம், வன்முறை, இனக்கலவரம் ஆகியவற்றைக் காட்சிகள் வழியாகவும், வசனங்கள், இசை வழியாகவும் தூண்டிவிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சினிமாவுக்குத் தணிக்கை அவசியமாகிறது. ஆனால், கலையைப் பாதிக்காமல் தணிக்கை இருக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது உச்ச நீதிமன்றம்.  1952-ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் சினிமா தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கொரு தலைவரும், அவருக்கு ஆலோசனை வழங்க 23 பேர்கள்கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அதன் தலைமை அலுவலகம் மும்பை. தணிக்கைக்குழு சுதந்திரமானது. அதன் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பெரும்பாலும் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட்டார்கள். சிலசமயத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இடம்பிடித்துக் கொண்டார்கள். இந்தியாவில் சினிமா என்பது மும்பை இந்தி சினிமா, கொல்கத்தா வங்காளி சினிமா. எனவே, சினிமா தணிக்கைக்குழுத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி, வங்காளி சினிமா தயாரிப்பாளர்களாகவோ, இயக்குநர்களாகவோ, நடிகர் நடிகைகளாகவோ இருந்தார்கள். அதன் காரணமாக, தணிக்கைக்குழு என்பது பொதுமக்களுக்கு ஆதரவாக இருந்ததென்பதைவிட சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நலம், வசூல் ஆகியவற்றைக் காப்பாற்ற ஒரு கருவியாக இருந்தது. சில சமயத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கலை, கலாசார அபிமானிகள் என்ற பெயரில் தணிக்கைக்குழுத் தலைவரானார்கள்.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவராக, தலைமைப் பதவியைப் பிடிக்கத் தனியாகத் தகுதி எதுவும் தேவையில்லை. ஆனால், சினிமாத்துறையில் இருப்பது கூடுதலான தகுதி. பிராபல்யத்தைக் கொடுக்கிறது. எனவே, சினிமாக்காரர்களில் சிலர் தணிக்கைக்குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து அடைகிறார்கள். அதற்குக் காரணம் அதிகமான அளவில் பணம் புழங்கும், பிராபல்யம் கொடுக்கும், கேளிக்கைக் கொண்டாட்டங்கள் கொண்ட சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பதவியில் இருப்பதாகக் காட்டிக்கொள்வதுதான். அதனைப் பொது விதி என்றும் சொல்ல முடியாது.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பதவி சள்ளைபிடித்தது. மோசமான, ஆபாசமான காட்சிகளையெல்லாம் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் கொடுப்பது. அதனால் கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று சிலர் ஒதுங்கிக் கொள்வதும் உண்டு.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகித் தன் பேச்சால், பதவியைப் பாதியில் விட்டுவிட்டுப் போனவர்களும் உண்டு. பிரபல இயக்குநரும், நடிகருமான விஜய் ஆனந்த் அதற்கோர் எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தவர். சினிமா தெரிந்தவர் என்று பெயரெடுத்தவர். அவர் சினிமா தணிக்கைக்குழுத் தலைவரான சிறிது காலத்துக்குள், ஆபாச சினிமாப் படத்தைத் தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் சில தியேட்டர்களைத் தேர்ந்தெடுத்து ஆபாசப் படங்கள் வெளியிட உரிமம் கொடுத்துவிடலாம். அதனால் பொழுதுபோக்குப் படங்களில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறாமல் போய்விடும் என்றார். அவர் பேச்சு பெரும் பிரச்னையைக் கிளப்பிவிட்டது. நாடு முழுவதிலுமிருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனால், விஜய் ஆனந்த் தன் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.  2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சென்னை, கலாúக்ஷத்ரா இயக்குநர். சங்கீத நாடக அகாதெமியின் தலைவர். அதோடுகூட பிரதமரின் கலாசார ஆலோசகர்.  60 வயதாகும் லீலா சாம்சன் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது சினிமாக்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அது தங்களின் உள்வட்டத்துக்கு உரியது என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஆளை, அமைச்சர் பிடித்துப்போட்டு விட்டதாகக் கருதுகிறார்கள்.  சினிமாவோடு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் வெளியாள்கள்தான். வெளியாள்கள் சினிமா பார்க்கவும், பாராட்டுக் கூட்டங்கள் நடத்தவும், பரிசு கொடுக்கவும், விருந்து வைக்கவும் உரியவர்கள். அவர்கள் சினிமா என்ற வட்டத்துக்குள் உள்ளே வரக்கூடாது. அது ஒரு மனோநிலை. அது ஜாதி அபிமானம் போன்றது. ஆனால் எல்லாத் தொழிலிலும் நிலைபெற்று இருக்கிறது. கலையாகவும், தொழிலாகவும் இருக்கும் சினிமாவில் கூடுதலாக இருக்கிறது.  பொதுப் புத்தி கொண்ட எந்தக் குடிமகனும் சினிமா தணிக்கைக்குழுவிலும், தலைவர் பதவியிலும் இருக்கலாம். சிலர் இருந்து இருந்திருக்கிறார்கள்.  இந்திய சினிமா எதிர்கொள்ளும் பிரச்னை ஆபாசம். வன்முறைதான். அதனைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியாது. நீக்குப்போக்குடன்தான் தணிக்கை செய்ய வேண்டும். சட்டம், விதியென்பது ஒன்றுதான் என்றாலும் படத்துக்குப் படம் அதன் கதை, அது சொல்லப்படும் விதம், காட்சிகள், வசனம் சார்ந்து மாறுபடும். அதுவே, சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறது.  மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் சிக்கிக்கொண்ட ஓர் இளம் பெண்ணின் கதை சொல்லும் இந்திப் படத்துக்கு "யு' சான்றிதழ் கொடுத்தார்கள். மாநில அரசு, கேளிக்கை வரியில் இருந்து சலுகை அளித்தது. அதே படம் தமிழில் பிரபலமான சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தால் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் பெரிதாகச் சண்டை போட்டார். இந்தியா ஒரே நாடு. ஒரே தணிக்கைக்குழு. ஒரே விதிமுறைதான். அப்படியிருக்கத் தமிழ் சினிமாவுக்கு எப்படி மாற்றிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று கேட்டார்.  மும்பையில் பெண்கள் சட்டப்படி விபசாரம் செய்ய சிவப்பு விளக்குப் பகுதி இருக்கிறது. சென்னையிலோ, தமிழ்நாட்டிலோ அப்படிப்பட்ட சிவப்பு விளக்குப் பகுதிகள் ஏதுமில்லை. எனவே, விபசாரத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் காட்சிகள், வசனங்கள் கொண்ட படம் வயது வந்தவர்கள் பார்ப்பதற்குத்தான் தகுதியானது. எனவே, "ஏ' சான்றிதழ்தான் கொடுக்க முடியும்.  நீங்கள் வேண்டுமானால் மேல்முறையீடு செய்து பாருங்கள். அவர்கள் உங்கள் விருப்பப்படிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டது.  தணிக்கைக்குழுவின் முதல் முடிவுதான் முடிவு என்பது இல்லை. அதற்குமேல், மேல்முறையீடு இருக்கிறது. அதுவும் திருப்தி அளிக்காவிட்டால், மும்பைக்கு முறையீடு செய்யலாம். மத்திய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் பார்த்துச் சான்றிதழ் கொடுப்பார்கள். அதிலும்,திருப்தியில்லையென்றால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று நீதிமன்றங்களை நோக்கிச் செல்லலாம்.  சினிமா என்பது எத்தனைதான் கலையென்றாலும் அது பணம் சம்பந்தப்பட்டது. தயாரிப்பாளர் விரைவில் படத்தை வெளியிட்டு லாபம் எடுக்க ஆவலாக இருக்கிறார். சினிமா இயக்குநர், நடித்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் படம் விரைவில் திரையிடப்பட்டு பெருவாரியான மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும். அதன் வழியாகப் புதிய வாய்ப்புகள் வரவேண்டும் என்றுதான் இருக்கிறார்கள். எனவே, அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்ளும் படத்தைத் திட்டமிட்டு யாரும் எடுக்க முன்வருவது இல்லை.  2006-ம் ஆண்டில் "டாவின்சி கோடு' என்ற ஹாலிவுட் ஆங்கிலப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்தியாவில் திரையிடத் தணிக்கைக்குழு படத்தைப் பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தது. ஆனால், சில மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகள் எங்கள் சமய உணர்வுகளை டாவின்சி கோடு புண்படுத்துகிறது. எனவே, படத்தைத் திரையிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதனால் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், நாகலாந்து, கோவாவில் டாவின்சி கோடு திரையிடப்படவில்லை.  தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுத்தாலும்கூட, மாநில அரசுகள் படம் திரையிடப்படுவதால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். பொது அமைதி குலைந்துவிடும் என்று கருதினால் அந்தப் படத்தைத் திரையிடாமல் தடைசெய்து விடலாம்.  இந்திய சினிமா தணிக்கைக்குழு சினிமாக்காரர்கள் தங்கள் ஆள் தலைவராகி அவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சினிமாத் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் தலைவராகி விட்டார். அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவரை எப்படித் தலைவராகப் போடலாம் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.  சினிமா தயாரிக்க, சினிமாப்படத்தை இயக்க, சினிமாப் படத்துக்குக் கதை, வசனம் எழுத, பாடல் எழுத, இசையமைக்க, நடிக்க முன்அனுபவம் இல்லையென்று யாரையும் தள்ளிவைப்பதில்லை. தணிக்கைக்குழுவின் வேலை நல்ல சினிமாவா, கெட்ட சினிமாவா என்று தரம் பார்ப்பதல்ல. ஒரு படத்துக்கு விருதோ, தண்டனையோ கொடுப்பதும் அல்ல. எவ்வளவு பணச்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது, யார் யார் நடித்திருக்கிறார்கள், யார் இயக்குநர் என்று பார்ப்பதும் அவர்கள் வேலை இல்லை. ஒரு சினிமாப்படம் இந்தியக் குடிமக்கள் பார்க்கத்தக்கதா, ஆபாசம், வன்முறை அதிகமாக இருக்கிறதா, சமய நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கிறதா, இன்னொரு நாட்டை நிந்தனை செய்கிறதா, எந்த வயதினர் படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்வதுடன் முடிந்து விடுகிறது.  இந்த வேலையைச் செய்ய சினிமாத்துறையில் பல்லாண்டுகள் இருந்து அனுபவம் பெற வேண்டியதில்லை. அது பொது அறிவும், சமூகத்தின் மீது அக்கறையும், நேர்மையும் கொண்ட எந்தவொரு குடிமகனும், குடிமகளும் செய்வார்கள்.  லீலா சாம்சன் இந்திய சினிமாத் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி ஒருவர், சிறந்த நடனக்கலைஞராகிய அவர் அடிக்கடி மட்டமான படங்களைப் பார்த்து கொண்டிருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரே என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.  லீலா சாம்சனுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதா, இப்படி ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை


ஞாயிறு, 27 மார்ச், 2011

Film Saatappadi kutram - Political bomb: அரசியல் நெடி வீசும் "சட்டப்படி குற்றம்'

விருதகிரிக்கே தடை கேட்டுப் போராடுபவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? ஆனால், இப்படம் ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று எண்ணக்கூடாது. ஒட்டு மொத்த அரசியலே அவ்வாறுதான் உள்ளது. இவ்வாறு எழுதுபவர்கள், பேசுபவர்கள், நடி்பவர்கள், இயக்குபவர்கள்,வேறு வகையில் தொடர்பு உள்ளவர்கள் என எல்லாத் தரப்புமே கை தட்டலுக்கான இப்பணியைச் செய்து விட்டு அரசியல் சாக்கடையில் புரண்டு ஆதாயம் தேடுபவர்களாகத்தான் உள்ளனர். ஒட்டு  மொத்த அரசியல் விழிப்புணர்வும் நேர்மையின்பால் பற்றுமதொண்டு உணர்வும் மக்களுக்கு வந்தால்தான் மக்கள் சார்பாளர்களும் நேர்மையும் தூய்மையும் கொண்டு விளங்குவார்கள்.  இல்லையேல் கைதட்டி மறக்கும் காடசிகளாக மாறும்  அவலம் தொடரும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அரசியல் நெடி வீசும் "சட்டப்படி குற்றம்'
First Published : 27 Mar 2011 12:00:00 AM IST

சென்னை,மார்ச் 26: எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள "சட்டப்படி குற்றம்' படத்தின் வசனங்கள் ஆளும் கட்சியை சாடும் வகையில், அரசியல் நெடி கலந்து உள்ளன.  நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் "சட்டப்படி குற்றம்'. இதில் சத்யராஜ், சீமான், ராதாரவி, விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், பானு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  விஜயின் அரசியல் பிரவேச பேச்சுகளுக்குப் பின் ஆளும் கட்சியினரால் அவர் பாதிப்புகளுக்கு உள்ளானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த "காவலன்' படத்தை வெளியிட விடமால் ஆளும் கட்சியினர் தடங்கல் ஏற்படுத்தியதாகவும் அவரது தரப்பில் புகார்கள் கூறப்பட்டன.  இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடர்ச்சியாக மூன்று முறை சந்தித்து பேசியது, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியது, ஆகிய நிகழ்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த பேரவைத் தேர்தலை, விஜய் எப்படி சந்திக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், இதன் பின் அவர் அமைதியானதையடுத்து பரபரப்பு சற்று ஓய்ந்தது. இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரனின் "சட்டப்படி குற்றம்' படம் ரிலீசுக்கு தயாரானது. ""இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் பலர் வாங்க ஆர்வத்துடன் முன்வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ஆளுங்கட்சியினரின் மிரட்டல்களால் இந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்கினர்'' என்று செய்தியாளர்களிடம் பகிரங்கமாக எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார். இது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இப்படத்தை தடை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடைசி நேரத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், இப்போது "சட்டப்படி குற்றம்' தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.  உள்ளூரில் விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் நடிகர் விக்ராந்திடம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு கேட்டு வரும் போது ஆரம்பிக்கின்றன படத்தின் அரசியல் நெடி கலந்த வசனங்கள். ""தேர்தலின் போது பிச்சைக்காரர்கள் போல் ஓட்டு கேட்டு வருவீங்க.  தேர்தல் முடிந்தவுடன் எங்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடுவீங்க'' என்று விக்ராந்த் சொல்ல, வாக்கு கேட்டு வந்த வேட்பாளர் (இயக்குநர் வெங்கடேஷ்) ""உங்களுக்கு அரசியல் தெரியாது தம்பி'' என்கிறார். ""எங்களுக்கு அரசியலும் தெரியும். அரசியலில் நடக்கிற கொள்ளைகள் பற்றியும் தெரியும்'' என்கிறார்.  விவசாயி, நெசவாளி என யாரும் சௌகரியமாக இல்லாத நிலையில் யாரைக் கேட்டு ஓட்டுக் கேட்டு வந்தீங்க என்று கேட்பதிலும் அரசியல் நெடி. தேர்தலில் ஜெயித்த பிறகு சினிமாத்துறையைத்தான் முதலில் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார் ஒரு அரசியல்வாதி. அது ஏன்? என கேட்பருவருக்கு சினிமாவை கைக்குள் வெச்சுக்கிட்டாதான் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்கலாம் என்கிறார்.  விஜய் ரசிகர் மன்றத் தலைவர் விக்ராந்த் தலைமையிலான இளைஞர்கள் உள்ளூரைச் சேர்ந்தவரை இடைத்தேர்தலில் ஜெயிக்க வைக்கின்றனர். ஆனால், அவரோ அரசியல்வாதியிடம் ரூ. 200 கோடி வாங்கி கொண்டு தேர்தல் முடிவையே மாற்றி விடுகிறார்.  இதன்பின் நியாயம் கேட்கச் செல்லும் விக்ராந்திடம் ""நீ 200 ரூபாயை வாங்கி கொண்டு ஓட்டு போட்டே, நான் ரூ. 200 கோடி வாங்கி கொண்டு அதை விற்று விட்டேன். நீ சில்லறை வியாபாரி, நான் மொத்த வியாபாரி என அவர் விளக்கமளிக்கிறார். இது வாக்குக்கு லஞ்சம் என்ற இப்போதைய நிலையை எடுத்துரைக்கிறது.  பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, ""அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு'' என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.  ஸ்பெக்ட்ரம் ஊழல் - மறைமுக தாக்கு: கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.  நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.  1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.  வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம். இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.  இப்படி ஆங்காங்கே நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழ்த் திரைப்படங்களுக்கு விதிகளை மீறி வரிவிலக்கா?: அரசு விளக்கம்


சென்னை, நவ.1: திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை முடிவுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு முடிவுசெய்யும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விளக்கம் அளித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே, கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த அடிப்படையில் கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  உதாரணங்கள்: 'சிவாஜி',  'ஏகன்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'கோவா', 'எந்திரன்' போன்ற திரைப்படங்களாகும்.  ஆனால், இந்தத் துறையில் அறிமுகமாகி, படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குநராகவும்,         கதை-உரையாடல் எழுதுபவராகவும் வளரத் தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள்; கேளிக்கை வரிவிலக்குக்கான அரசின் நிபந்தனைகளைப் புரிந்து கொள்ளாமலும், அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்படத் தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களைச் சூட்டுவதும்; அவற்றுக்குக் கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரச்சாரம் செய்வதும்; அதனடிப்படையில், இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினர்க்கு, இந்த வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை  அரசியல் நோக்குடன் வெளியிட்டு வருவதும் இப்பொழுது வழக்கமாக ஆகத் தொடங்கியுள்ளது.திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்பட்டிருக்கிறதா  அல்லது திரைப்படங்களுக்கு இடப்பட்டுள்ள தலைப்புக்கான பெயர்கள் கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்குமுன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல.  அந்தக் குழு ஒப்புக் கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது என்பதையும் அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையும்  இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.  தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை துறைதான் வழங்கும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

மேலும் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாயின் கட்டணச்சீட்டுகளில அதைச் சேர்க்காமல் கட்டணைத்தைக் குறைத்து அதன் பயன் பார்க்கும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். அவ்வாறில்லாமல் பொது மக்களிடம் கேளிக்கை வரி பெற்றுக் கொண்டு அதைத் தமிழ் என ஏமாற்றும் திரையாளர்கள் பெற வசதி செய்யும் ஏற்பாடு மோசடி அல்லவா? அதனை உடனே நிறுத்த வேண்டும். (இவ்வாறு சொல்வதால் தினமணி இச்செய்தியை நிறுத்தக் கூடாது.) அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 3:37:00 AM
அரசின் நிலைப்பாடுமிகமிகத் தவறு என்பதை இவ் விளக்க அறிக்கையே விளக்குகிறது. <கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது> என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், அறிவழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர் சூட்டி புரட்சி செய்த இயக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழ்ப் பெயர் அல்லாதவற்றிற்குப் பெயர்ச சொல் என்ற அடிப்படையில் வரி விலக்கு அளிப்பது எவ்வாறு பொருந்தும்? மேலும் அரசின் நோக்கம், கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்வது என்பதிலிருந்தே வேண்டியவர்க்குக் கனிவு காட்டவே கூடுமானவரையில் எனச் சேர்க்கப்பட்டுள்ளது என்பது புரிகின்றது. மேலும் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாயின் கட்டணச்சீட்டுகளில அதைச் சேர்க்காமல் கட்டணைத்தைக் குறைத்து அதன் பயன் பார்க்கும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். அவ்வாறில்லாமல் பொது மக்களிடம் கேளிக்கை வரி பெற்றுக் கொண்டு அதைத் தமிழ் என ஏமாற்றும் திரையாளர்கள் பெற வசதி செய்யும் ஏற்பாடு மோசடி அல்லவா? அதனை உடனே நிறுத்த வேண்டும். (இவ்வாறு சொல்வதால் தினமணி இச்செய்தியை நிறு
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 3:36:00 AM
தமிழில் பெயர் வைப்பதால் மட்டும் தமிழ்மொழி எய் வளர்க்க முடியாது. கருப்பு பணத்தை மாற்ற இது ஒரு மார்க்கம்.
By sundar
11/1/2010 10:14:00 PM
aiyoooooooo............................WHAT WILL HAPPEN TO THIS STATE...........WHAT A FOOLISH RULE IS THIS???? WHO WILL TALK TO THEM???? PUBLIC!!! CAN NOT YOU DO SOMETHING ABOUT THIS??? GOVT COULD GET GOOD INCOME FROM THE CINEMA MEDIA, GOVT. IS LOOSING SO MUCH INCOME BY GIVING TAX EXEMPTION TO THE CINEMA JUST FOR THE SAKE OF TAMIL NAME...THAT TAX INCOME CAN BE USED FOR WELFARE SCHEMES....what is this govt doing? is there no public social service organisation, who can fight for the right cause??? NO SOCIAL ORGANISATION IS THERE IN TAMIL NADU TO FIGHT FOR THE GOOD CAUSE???????govt is loosing so much income from this tax exemption.....directly and indirectly govt is taxing the middle class people, but giving exemption to the rich people...........what a foolish rule is this? is this THUKLAM RAJYAM?
By MIDDLE CLASS PEOPLE
11/1/2010 8:30:00 PM
வ குவாட்டர் கட்டிங் இது தமிழ் பெயரா? ஒருவேளை இந்த படத்திற்கு வரி விளக்கு அளிக்கப்படாவிட்டால் அந்த துறை அதிகாரியின் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்று முதல்வரால் உறுதி கூற முடியுமா?? வாய் கிழிய தமிழ்,தமிழ் என்றும் பெயர்பலகைகள் தமிழிலில் வைக்கவேண்டும் என்று கூறும் முதல்வர், ரெட்ஜைன்ட், க்லவ்ட் நைன், போன்ற குடும்ப நிருவனங்களின் பெயர்கள் தமிழில் எந்த அகராதியில் இருந்து கிடைத்த பெயர்கள் என்பதை கூற முடியுமா? பாவம் உயிரினங்கள் அசைவம் சாப்பிடாஹஈர்கள் என்று ஒருர்வன் வீட்டில் குழியை அடைத்து வைத்துவிட்டு வாய்கிழிய சொற்பொழிவு ஆற்றியதுபோலதான் உள்ளது?? இந்த வரிவிலக்கால் யார் குடும்பத்திற்கு லாபம், இந்த வரி விளக்கால் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது, இந்த வரி விளக்கால் யாருக்கு நஷ்டம்? என்பதை மக்களுக்கு வெளிச்சம்மிட்டு காட்டும் பொறுப்பு தினமணிக்கு உள்ளது ..
By tamizhinian
11/1/2010 5:34:00 PM
In spite of DINAMANI's open canvassing on absurdity of giving tax-breaks in the name of TAMIL ( an absurd rule that says if title is in Tamil, film is eligible for tax-rebate) Govt. is relentless. The exchequer is losing valuable money. If one displays 'TAMIL VAZHGA' neon-board or if films have Tamil titles ( they should have but a clear order to adhere to rules will do- no tax-rebates) will TAMIL get promoted? I curse only my FATE for seeing TN pushed to all unbearable absurdities. This is exactly what the scatter-brained/ puppy-brained/blank-headed idiots will do if given the handles to rule. UZHAR-SANDHAI where no one will go, SAMATVAPURAM where none required, re-do all parks bridges with fancy drawings! & so on.
By ASHWIN
11/1/2010 5:32:00 PM
கண்ணதாசன் ஒரு குடிகாரன். போதையில் உளறுபவன். அவர் எம்ஜியாரை பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் மட்டமாக பேசியும், எழுதியும் உள்ளார்.
By K Rajan
11/1/2010 5:23:00 PM
Tamil Nadu is not Gujarat which has a able Chief mInister like Modi. Tamil nadu has a loafer who came to madras without ticket and who goes behind women. You cannot expect anything from Karunanidhi. Read Kannadasan's Vana vaasam to know more about this loafer with 5 + wives and concubine
By Observer
11/1/2010 4:51:00 PM
திரைப்படஙளுக்கு வரி விலக்கு தேவைதனா? திரைப்படங்ளின் பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? திரைப்படங்களில் அருவருக்கத்தக்க வசனங்களை எல்லாம் திணித்துவிட்டு வரிவிலக்கு பெற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். வரி விலக்கின் நோக்கம் எந்த வகையிலும் நிறைவேறாத நிலைதன் தொடர்கிறது. தற்போது வரி விலக்கு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் டிக்கெட் 1000 ரூபாய் வரை விற்கப்படுள்ளதாக தெரிகிறது. கொள்ளை லாபம் சம்திக்கும் சினிமாக்காரங்களுக்கு வரி விலக்கு அளிப்பதால் தமிழ் நாட்டுக்கு, தமிழுக்கு எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்பதுதான் உண்மை. இனிமேலாவது அரசியல்வாதிகள் சினிமாக்கரங்களை காக்கா பிடிக்காமல் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதை ரத்து செய்யவும்.
By Meenakshisundaram
11/1/2010 12:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
meel padhivu: மேலும் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாயின் கட்டணச்சீட்டுகளில அதைச் சேர்க்காமல் கட்டணைத்தைக் குறைத்து அதன் பயன் பார்க்கும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். அவ்வாறில்லாமல் பொது மக்களிடம் கேளிக்கை வரி பெற்றுக் கொண்டு அதைத் தமிழ் என ஏமாற்றும் திரையாளர்கள் பெற வசதி செய்யும் ஏற்பாடு மோசடி அல்லவா? அதனை உடனே நிறுத்த வேண்டும். (இவ்வாறு சொல்வதால் தினமணி இச்செய்தியை நிறுத்தக் கூடாது.) அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 11/2/2010 3:37:00 AM இவ்வாறு சொல்லியும் தினமணி கருத்தை எடுக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 5:32:00 PM
Meel padhivu: அரசின் நிலைப்பாடுமிகமிகத் தவறு என்பதை இவ் விளக்க அறிக்கையே விளக்குகிறது. <கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது> என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், அறிவழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர் சூட்டி புரட்சி செய்த இயக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழ்ப் பெயர் அல்லாதவற்றிற்குப் பெயர்ச சொல் என்ற அடிப்படையில் வரி விலக்கு அளிப்பது எவ்வாறு பொருந்தும்? மேலும் அரசின் நோக்கம், கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்வது என்பதிலிருந்தே வேண்டியவர்க்குக் கனிவு காட்டவே கூடுமானவரையில் எனச் சேர்க்கப்பட்டுள்ளது என்பது புரிகின்றது. By Ilakkuvanar Thiruvalluvan 11/2/2010 3:36:00 AM அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 5:31:00 PM
THE DEAD ALIEN NEESHA PASHA SANSKRIT ALSO MUST BE STOPPED FOR USING TO NAME THAMIL FILMS AND THE DIALOGUES MUST BE 90% TAMIL, IF THE CONDITIONS MET, TAMILNADU CAN GIVE TAX RELIEF TO THE THAMIL FILMS NOT TO ENTHIRAN LIKE ENGLISH FILMS WITH SOME TAMIL DIALOGUES. THE BODY - WHO DECIDE THIS - MUST BE INDEPENDENT THAMIL SCHOLORS NOT BY THE CROOK DMK RUN BY THE CROOKED KARUNANITHI
By AMARAN
11/2/2010 12:36:00 PM
எஹன் என்பது வடமொழி .எந்திரன் என்பதும் வடமொழி. படதிர்க்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்க வென்டும் ஆரசியல்லெ இது எல்லாம் ச்கஹஜமப்பா
By Aslam
11/2/2010 9:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *