vivekanandhar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vivekanandhar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2012

TNA parliamentarian condemns desecration of Vivekananda statue in Batticaloa

TNA parliamentarian condemns desecration of Vivekananda statue in Batticaloa

[TamilNet, Friday, 13 January 2012, 06:06 GMT]
Politically motivated mischievous elements should not be allowed to create disharmony between Tamils and Muslims in the East, said Batticaloa District Tamil National Alliance (TNA) parliamentarian P.Ariyanethran in a statement condemning the desecration of the state of a Hindu Swami Vivekananda in Aaraiyampathi - Kaaththaankudi border recently. “Those who want to pursue their political ambition currently in the scene are suspected to be behind such crimes and violence between communities,” the TNA MP said.

Statues of educationists and religious leaders in the east are under threat from mischievous elements.

People would rally against such criminal acts by political mischievous elements continue unabated, the MP warned in his statement.

The law enforcement authority in Troncomalee has not arrest those who desecrated Thanthai Chelva statue. The lapse on the SL law enforcement authority had raised a grave suspicion on the part of the Colombo government, TNA parliamentarian alleged in his statement.

Chronology:

புதன், 12 ஜனவரி, 2011

article about vivekanandhar: விடுதலைக்கு விதை தூவிய வித்தகர்

நன்றாகத்தான் எழுதியுள்ளார். இராமக்கிருட்டிணா மடங்கள் பலவும் கல்வி உதவி முதலான பல நல்லத் திட்டங்களையும் செயற்படுத்தத்தான் செய்கின்றன. இருப்பினும் சாதி வெறியில் உள்ளனர். சான்றாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்தில் புத்தக வங்கி மூலம் பொறியியல் மாணாக்கர்களுக்குப் பாடநூல்கள் தருவதாகக் கேள்விப்பட்டுச் செல்பவர்களுக்கு ஏமாற்றம். அத்திட்டம் குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும்தான். அதை மூடி மறைக்க ஏதேதோ சொல்லித் தட்டிக் கழிக்கின்றனர். ஆரியத்தை எதிர்த்த விவேகானந்தர் புகழ் பாடுநர், ஆரியத்தைப் பரப்பவே தமிழ் மக்கள் பணத்தைச் செலவிடலாமா?  
வேதனையுடன் இலக்குவனார்  திருவள்ளுவன்


விடுதலைக்கு விதை தூவிய வித்தகர்

First Published : 12 Jan 2011 01:30:11 AM IST


"சுவாமி விவேகானந்தரைப் பற்றி எத்தனை எத்தனை எடுத்துரைத்தாலும் எனக்கு வாய் நோவதில்லை. நா தளர்வதில்லை. இரவுபகலாக எண்ணற்ற நாள்கள் எழுதிக்கொண்டே போனாலும் என் கை சலிப்பதில்லை. அவரை நினைக்கிற நேரமெல்லாம் எனக்குப் புதிது புதிதாக ஊக்கமும் உற்சாகமும் உண்டாவதோடு, எங்கிருந்தோ எனக்கே தெரியாமல் ஒரு சக்தியை அடைகிறேன். மனம் பூரித்துப் புளகிக்கிறது.÷எனக்கு அறிவுப் பாலூட்டும் அன்னையாய், எனது கொள்கைக்கெல்லாம் ஆதாரமாய், என்பின்புறத்தே நின்றுகொண்டு, எனது ஜீவிதத்துக்கு ஒரு தூண்டுகோலாய் என்றும் அவர் இருந்து வருகிறார். அவர் சக்தி இருந்து வருகிறது; விவேகானந்தரின் கடிதங்களில் தேசாபிமானம் ததும்புகிறது; பாரத உணர்ச்சி பொங்குகிறது;  இந்திய ரத்தம் துடிக்கிறது  நமது தாய்நாட்டின் ஜெயகோஷம் முழங்குகிறது'' என்று உணர்ச்சி பொங்கத் தமது நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்,  தமிழகத்தின் விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சுப்பிரமணிய சிவா. ÷பாரதியார் தனது இந்தியா இதழில் எழுதிய ஒரு தலையங்கத்தில் பரம ஞானியாகிய ஸ்ரீகிருஷ்ணபகவான் மஹாபாரதப் போரிலே பாண்டவர்களுக்கு வழிகாட்டியது போலவும், சர்வ பந்தங்களையும் துறந்த ராமதாஸ்முனிவர்,  மகாராஜா சிவாஜிக்கு ராஜ தந்திரங்களைச் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேகத் துறவிகள் நமது சுதேசிய முயற்சியிலேயே சேர்ந்திருக்கிறார்கள். காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும் என்று எழுதியுள்ளார். 1893-ல் சென்னை திருவல்லிக்கேணியில் பாலாஜிராவ் என்ற தனது சீடரின் இல்லத்தில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து பாலாஜிராவின் புதல்வர் ரகுநாதராவ் நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல வழிகளிலும் இந்தியா சீர்குலைந்து போய் இருந்தாலும், அந்நியர்களையும் அந்நிய ஆட்சியையும் எதிர்த்துக் கிளர்ந்தெழக் காலம் கடந்து விடவில்லை. குறுகிய மனப்போக்குகளும் பொறாமை உணர்வுகளும், வகுப்பு வாதமும் இன்று நாட்டைப் பிளவுபடுத்தியிருந்தாலும், இந்தியா விரைவில் புத்தெழுச்சி பெற்று விடுதலை பெறப்போகிறது என்று உணர்ச்சிகரமாக தனது உரத்த குரலில் கம்பீரமாக விவேகானந்தர் முழங்கியதாக ரகுநாதராவ் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு ஆழமான அரசியல் கருத்தை வெளியிட்டபோது விவேகானந்தருக்கு வயது 30 மட்டுமே. சாதாரணப் பொருளில் அவரை அரசியல்வாதி என்று சொல்ல முடியாவிட்டாலும் தற்கால தேசிய இயக்கத்தின் சாரதிகளில் ஒருவராக அவரை நான் கருதுகிறேன். மாபெரும் அந்த இயக்கத்தில் தீவிரமாய்ப் பங்கேற்ற பலரும் அவரால் தூண்டப் பெற்றவர்களே. அவரது செல்வாக்கு இன்றைய பாரதத்தை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கவர்ந்துள்ளது என்று நேதாஜி கூறியுள்ளார். நேதாஜி முழுக்க முழுக்க விவேகானந்தரின் தாக்கத்தால் உருவானவர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் அனைவருமே ஒருமுகமாகக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ஒரு படி மேலேபோய் நேதாஜி முழுமையாகத் தன்னை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால்  அவர் விவேகானந்தரைப்போல் இருந்திருப்பார். விவேகானந்தர் நேரடி அரசியலில் களமிறங்கியிருந்தால் அவர் நேதாஜியைப்போல் விளங்கியிருப்பார் என்றும் சில ஆய்வறிஞர்கள் வரையறுத்துக்  கூறுகின்றனர். ஈசன் அருளாலும், நம்மவர் அதிர்ஷ்டத்தாலும் மற்றெல்லாப் பற்றையும் துறந்த அவர், நாட்டுப்பற்றை மட்டிலும் நெடுங்காலம் கொண்டிருந்தார். ஆனால், பரம சன்னியாசியைத்தவிர மற்றவர்கள் அனைவரும் பூமிப்பற்று இல்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமமானவர்கள் என்பதை இம் மகரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார் என்று பாரதியார், விவேகானந்தரின் நாட்டுப்பற்றை வியந்து பாராட்டுகிறார். வீரர்களாயிருங்கள்; பூமியை அனுபவியுங்கள்; கண்டவர்களெல்லாம் காலால் மிதித்தும், காறியுமிழ்ந்தும் அவமானப்படுத்துகிற இந்தப் பேடி வாழ்க்கையை எத்தனை காலம் வாழப் போகிறீர்கள்? இதுவும் ஒரு வாழ்க்கையா? என்று மகா ஆத்திரத்துடன் இந்தியர்களிடம் விவேகானந்தர் எழுப்பிய கேள்வியைப் பாரதியார் தனது கட்டுரை மூலம் நமக்கு நினைவுபடுத்துகிறார். விவேகானந்தரின் வரலாற்றை ஆய்வு செய்வதில் ஒரு வேள்வியே மேற்கொண்ட மேலைநாட்டு வரலாற்று அறிஞர் ரோமன் ரோலண்ட், இந்திய விடுதலைப் போராட்டத்தில் விவேகானந்தரின் தாக்கத்தையும் ஆய்வுசெய்து நீறு பூத்த நெருப்பாய் இருந்த தேசிய இயக்கத்தை விவேகானந்தர் ஊதிவிட்டது, தீக் கொழுந்துகளுடன் எரியத் தொடங்கி அவரது மறைவுக்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1905-ல் வீறுடன் வெடித்தெழுந்தது என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். 1905 வங்கப் பிரிவினையும் அதன்பொருட்டு எழுந்த மாபெரும் ஆங்கிலேயச் சூழ்ச்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியும் தான் இந்தியவிடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இப்போராட்டத்தையொட்டித்தான் சுதேசி இயக்கமும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பெற்ற திலகர், விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகிய மூவரிடத்திலும், இதேபோன்று தமிழகத்தின் தொடக்ககால முப்பெரும் போராளிகளாக விளங்கிய வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகிய மூவரிடத்திலும் விவேகானந்தரின் தாக்கத்தை வெகுவாக உணர முடிகிறது.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்கள் விவேகானந்தர் தொடங்கி மொத்தம் பதினாறு பேர். அவர்களுள் ஒருவரான இராமகிருஷ்ணானந்தரை, சுவாமி விவேகானந்தர் சென்னையில் இராமகிருஷ்ண மடத்தை நிறுவ 1897-ல் அனுப்பிவைத்தார். இந்த இராமகிருஷ்ணானந்தரைத்தான் பின்னொரு சமயம் வ.உ.சி. சென்னையில் சந்தித்துள்ளார். இவரைச் சந்தித்து உரையாடிய பின்னர் கிடைக்கப்பெற்ற புதிய வெளிச்சத்தில்தான் தனது அரசியல் செயல்பாடுகள் விரிவடைந்ததாக வ.உ.சி.யே தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். தனது சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதியுள்ள வ.உ.சி. இராமகிருஷ்ணானந்தரைச் சந்தித்தது பற்றிக் கூறுகையில் - ""சுதேசியம் ஒன்றே சுகம் பல அளிக்கும். இதே என் கடைப்பிடி என்றனன், அவனுரை வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்  சித்தம் அதனைச் சிதையாது வைத்தது''-என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு சமயம், இராமகிருஷ்ணர்  இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய பிரமுகர்கள் ஜப்பான் செல்கிறபோது, தூத்துக்குடியில் அவர்களை வரவேற்று விருந்தளித்து அவர்களிடம் நெடுநேரம் உரையாடிப் பயனடைந்ததாக வ.உ.சி. கூறியுள்ளார். இராமகிருஷ்ண மடத்தின் முதல் தலைவராக விளங்கியவர் பிரம்மானந்தர். அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து பத்தாண்டுகள் தங்கியிருந்து அங்கு சொற்பொழிவுகள் மூலமாக அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சுவாமி அபேதானந்தர்.  இவர்கள் இருவரையும் சந்தித்து உரையாடி மேலும் தேசம் குறித்த புதிய சிந்தனைகளுக்குத்  தன்னை ஆட்படுத்திக் கொண்டதாக வ.உ.சி. எழுதியுள்ளார். இதேபோன்று பாரதியும் 1908-ல் வெளியிட்ட தனது முதல் நூலான "ஸ்வதேச கீதங்கள்' எனும் நூலில் ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் ... "எனக்கும் பாரததேவியின் சம்பூர்ணரூபத்தைக் காட்டி, ஸ்வதேசபக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலை ஸமர்ப்பிக்கிறேன்' என்று அச்சிட்டுள்ளார். பாரதி தனது குருவாக விவேகானந்தரின் தலைமைச்சீடர்களில் ஒருவராக விளங்கிய சகோதரி நிவேதிதாவை ஏற்றுப் போற்றுகிறார். நிவேதிதாவுக்கே தனது முதல் நூலை பாரதி சமர்ப்பித்துள்ளார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். விவேகானந்தரைப் பற்றியும் சகோதரி நிவேதிதா குறித்தும் தனது "இந்தியா' இதழில் பலமுறை விரிவாக எழுதியுள்ளார் பாரதியார். தேசபக்தர்கள் இருவகைப்படுவர்;  ஒருவகை, அரங்கத்திலாடுவது. மற்றொருவகை திரைக்குப் பின்னேயிருந்து புகழறியாமல் பாடுபடுவது. இவற்றுள் முன்னதிலும், பின்னது சிறந்ததாகக் கூறலாமேயல்லாது குறைந்ததாகக் கருதத்தக்கதன்று. காலஞ்சென்ற ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள் பின் வகுப்பைச் சேர்ந்திருந்தவர் என்று 1909-ம் ஆண்டு அழகிய சிங்கப்பெருமாளின் மறைவையொட்டி இந்தியா இதழில் எழுதிய இரங்கல் கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதியார். நமது தேசபக்தி முயற்சிக்குத் தாய் முயற்சியாகிய ஸ்வாமி விவேகானந்தரது வேதாந்தப் பிரசாரத்தில் அழகிய சிங்கப்பெருமாள் அளவிளந்த சிரத்தைப் பாராட்டியவர் என்றும் பாரதியார் எழுதியுள்ளார். விவேகானந்தர் எழுதிய கடிதங்களில் பெரும் எண்ணிக்கையிலானவை அழகிய சிங்கப்பெருமாளுக்கு எழுதியவையேயாகும். விவேகானந்தர் தனக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கிய அழகிய சிங்கப்பெருமாளைத் தனது சென்னைச் செயலர் என்று அவரே குறிப்பிடும் அளவுக்கு அணுக்கமாகத் திகழ்ந்தவர். பாரதியாரால் அழகிய சிங்கப்பெருமாள் குறித்துச் சொல்லப்பட்ட கருத்து அவரின் குருவாகத் திகழும் விவேகானந்தருக்கும் முழுமையாகப் பொருந்தும்.  ஹிந்து, சுதேசமித்திரன் போன்ற இதழ்களைத் தொடங்கி தேசபக்தக் கருத்துகளைப் பரப்பிய, காங்கிரஸ் கட்சியின் தொடக்க மாநாட்டிலேயே தமிழகத்தின் சார்பில் பங்கேற்று முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை சென்னையில் நேரில் கேட்டுப் பரவசமடைந்தவர். எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் வீரவுரை நிகழ்த்திய விவேகானந்தர் அடுத்து, ""ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த மகத்தான தாய்நாட்டைப் பற்றியே நாம் நினைக்க வேண்டும். அதுவொன்றே நமது தேசிய வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோளாகும். இக்காலத்தில் மற்றெல்லா தெய்வங்களும் நம் மனத்தை விட்டு அகலட்டும். நமது தேசம், நமது மக்கள் இவைகள்தான் உயிருள்ள தெய்வங்கள். இத்தெய்வத்தின் கைகளும், கால்களும், சமூகமும் நாடு முழுவதும் எங்கும் பரவியிருக்கின்றன. மற்ற தெய்வங்கள் அனைத்தும் இப்பொழுது உறங்கிக்கொண்டிருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் பரவி, எங்கும் திகழ்ந்து கொண்டிருக்கும் இவ்விராட புருஷனை வழிபடுவதை விடுத்து நாம் வேறு தெய்வங்களை நாடிச்செல்ல வேண்டுமா? இந்தத் தெய்வத்தை நாம் முதலில் வழிபடுவோமாக'' என்று வீர ஆவேசமாக முழங்கினார். விவேகானந்தர் குறிப்பிட்டது போலவே ஐம்பது ஆண்டுகள் கழித்து நாடு விடுதலை பெற்றது. வீரத்துறவி விவேகானந்தர் 1893-லேயே "வரலாறு கண்ட வஞ்சம்' என்ற தலைப்பில்  ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த உரையின் சில வரிகளை நாம் என்றென்றும் மறக்கலாகாது. ""தேசபக்தி என்பது அந்நியர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதையும் குறிப்பதாகும்'' என்ற வரி நெஞ்சில் நிலைக்கத்தக்க வரிகளில் வைரவரியாகும்.  தனது ஆன்மிக, ஆவேச உரைகளால் பாமரனுக்கும் தேசப்பற்றை ஊட்டிய வீரத்துறவி விவேகானந்தர், தேச விடுதலைக்கு மட்டுமல்லாமல், ஒவ்வோர் இந்தியரின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான விடுதலைக்கும் வித்திட்டவர்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

விவேகானந்தர் இல்ல குத்தகை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டிப்பு



சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் ​(ஐஸ் அவுஸ்).
சென்னை, ​​ பிப்.1: சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் குத்தகைக் காலத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்துக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.​ இந்த இல்லம் வேறு பயன்பாட்டுக்கு தரப்படலாம் என்று "தினமணி'யில் 2008 ஏப்ரல் 22-ல் செய்தி வெளியானது.​ அதன் அடிப்படையில் அரசியல்,​​ ஆன்மிக,​​ சமூகத் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.​ இப்போது இந்த இட குத்தகையை ராமகிருஷ்ண மடத்துக்கே மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு கொடுத்துள்ளது.​ சென்னை காமராஜர் சாலையில் ​(கடற்கரைச் சாலை)​ சுவாமி விவேகானந்தர் நினைவு இல்லம் உள்ளது.​ தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்குப் பெற்று நிர்வகித்து வருகிறது.​ 1842-ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் ஆங்கிலேயர்களால் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டது.​ இதனால் இது "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது.​ அதன் பிறகு இந்தக் கட்டடத்தை சுவாமி விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார் வாங்கி "கெர்னான் கேசல்' என்று பெயரிட்டார்.​ 1897-ம் ஆண்டு சென்னை வந்த விவேகானந்தர் பிப்ரவரி 6 முதல் 14-ம் தேதி வரை 9 நாள்கள் இங்கு தங்கினார்.​ அப்போதுதான் அவர் புகழ்பெற்ற 6 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.​ 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கட்டடத்தில்தான் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை,​​ சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடங்கினார்.​ 1906 வரை 10 ஆண்டுகள் மடம் இங்குதான் இயங்கியது.​ மடம் இங்கு இயங்கியபோது ராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர்,​​ நிரஞ்சனானந்தர்,​​ திரிகுணாதீதானந்தர்,​​ அபேதானந்தர் ஆகியோர் வருகை தந்தனர்.​ இவர்கள் தவிர சகோதரி நிவேதிதாவும் இங்கு வருகை தந்துள்ளார்.​ 1963-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தக் கட்டடத்துக்கு "விவேகானந்தர் இல்லம்' என்று தமிழக அரசு பெயர் சூட்டியது.​ 1902 ஜூலை 4-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் மகா சமாதி அடைந்தார்.​ அதற்கு அடுத்த ஆண்டு 1903-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக இந்தக் கட்டடத்தில்தான் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.​ இன்று தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமியின் ஜெயந்தி விழா இங்குதான் தொடங்கியது.​ 1906-ம் ஆண்டு இந்த இல்லத்தை ஆந்திரத்தைச் சேர்ந்த அங்கிதம் வெங்கட ஜக்கையா ராவ் ஏலத்தில் எடுத்தார்.​ சில மாதங்கள் அங்கு வசித்தார்.​ அதன் பிறகு பல ஆண்டுகள் பூட்டப்பட்டு இருந்தது.​ 1917-ம் ஆண்டு ஜக்கையா ராவிடம் இருந்து ரூ.​ 79,944-க்கு இல்லத்தை ஆங்கில அரசு வாங்கி "மெரைன் மேன்சன்' என்று பெயரிட்டது.​ பிறகு அந்த இல்லத்தை சகோதரி சுப்புலட்சுமி எஎன்பவருக்கு ஆங்கில அரசு வாடகைக்கு விட்டது.​ அவர் அங்கு இளம் விதவைப் பெண்களுக்கான சேவை இல்லத்தையும்,​​ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.​ இங்குதான் அவர் சாரதா ஆஸ்ரமத்தையும் தொடங்கினார்.​ இடப்பற்றாக்குறை காரணமாக சாரதா ஆஸ்ரமம் வேறு இடத்துக்குச் சென்றதும் அருகில் இருந்த வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியுடன் இந்த இல்லம் இணைக்கப்பட்டது.​ 1941 முதல் 1993 வரை அங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரி இயங்கியது.​ குத்தகைக்குவிட கோரிக்கை:​ சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவாற்றிவிட்டு தாயகம் திரும்பியதன் நூற்றாண்டு விழா 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.​ அந்த சமயத்தில் இந்த இல்லத்தை குத்தகைக்கு தருமாறு சென்னை ராமகிருஷ்ண மடம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.​ அதனை ஏற்று 27,546 சதுர அடி பரப்பளவு கொùண்ட இல்லத்தை 1997 டிசம்பர் 24-ம் தேதி,​​ ஆண்டுக்கு ரூ.​ 1,000 வீதம் 3 ஆண்டு குத்தகைக்கு ராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டது.​ அதன்பிறகு,​​ இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி அருகில் இருந்த 8 கிரவுண்ட் 1928 சதுர அடி இடத்தை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்கு கேட்டது.​ அதனை ஏற்று 90 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் 1998 ஜூன் 10-ம் தேதி,​​ ​ சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 3 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.​ 2000-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.​ அதன் பிறகு ராமகிருஷ்ண மடம் அந்த இல்லத்தைப் புதுப்பித்து சுவாமி விவேகானந்தர் பற்றிய நிரந்தரக் கண்காட்சி கூடத்தை அமைத்தது.​ புதுப்பிக்கப்பட்ட இல்லத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
"தினமணி' செய்தி எதிரொலி:​ உலகத் தமிழ்ச் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அமைக்க இருப்பதால் விவேகானந்தர் இல்லத்தைக் காலி செய்யுமாறு ராமகிருஷ்ண மடத்துக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்பட்டது.​ இது பற்றி 2008 ஏப்ரல் மாதம் "தினமணி'யில் விரிவாக செய்தி வெளியானது.​ அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட ​ தலைவர்கள் விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயல்வதாக தமிழக அரசு மீது குற்றம்சாட்டினார்கள்.​ இது குறித்து 2008 ஏப்ரல் 24}ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.​ அதன் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி,​​ ""விவேகானந்தர் இல்லத்தைத் தமிழக அரசு அபகரிக்க முயலவில்லை.​ அதனை இடிக்கவும் விரும்பவில்லை.​ அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.​ ஏதேதோ கதை கட்டி எங்களை சாமியார்களுடன் மோதவிடுகிறார்கள்'' என்றார்.​ அதன்பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.​ குத்தகைக் காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:​ 2010 ஜனவரி 28-ம் தேதியோடு விவேகானந்தர் இல்லத்தின் குத்தகைக் காலம் முடிந்தது.​ இந்நிலையில் இல்லத்தின் குத்தகைக் காலத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.​ தமிழக அரசின் முடிவை சென்னை ராமகிருஷ்ண மடம் வரவேற்றுள்ளது.​ இது குறித்து மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரிடம் கேட்டபோது,​​ அவர் கூறியதாவது:​ குத்தகைக் காலம் முடிவடைவதால் இல்லம் மீண்டும் கிடைக்குமா என்கிற கவலை எங்களுக்கு இருந்தது.​ அந்தக் கவலை முதல்வர் கருணாநிதி மூலம் நீங்கியுள்ளது.​ அதற்காக அவரை சில நாள்களில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன்.​ மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதன் மூலம் எங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் ஏற்பட்டுள்ளது.​ இப்போது வேத காலம் முதல் சுவாமி விவேகானந்தர் காலம் வரையிலான நமது கலாசாரம் பற்றிய கண்காட்சி இடம்பெற்றுள்ளது.​ அடுத்த கட்டமாக மத்திய அரசு மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி பெற்று நமது பண்பாடு கலாசாரம் பற்றிய முழுமையான கண்காட்சியை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

இராமகிருட்டிணா மடம் பணக்கார மடம்தான். எனவே, இத்தகைய நேர்வுகளில் அங்காடி விலைக்குத்தான் குத்தகை விடப்பட வேண்டும். குறைந்த வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடப்பட்டுத் தமிழக வருவாய் சுரண்டப்பட இடம் தரக் கூடாது.சமற்கிருதத்தைவிடத் தமிழே தொன்மையானது;உயர்ந்தது; தமிழ்ப்பண்பாடே சிறந்தது;தமிழர் நாகரிகமே இந்திய நாகரிகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தது என முழங்கிய விவேகானந்தர் புகழ் ஓங்குக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:31:00 AM

பாராட்டுவோம். ஆனால் இவ்வாறு பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காக இருந்தாலும் அவர்கள் மாநிலததில் தமிழ் அறிஞர்கள், திருமுறைப் புலவர்கள் பெயரில் நினைவகம் அல்லது ஆராய்ச்சியகம் வைக்க அவர்கள் மாநிலத்தில் இடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பது ஒன்றும் தவறல்ல. குமரியில் பெருமளவு நிலப்பரப்பு விவகோனந்தர் அமைப்பின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மால் (பாரதியின் பெயரிலான சாலை தவிர) (அம்மாநிலத்தவரால் நடத்தப்படும்) கல்கத்தா தமிழ்ச சங்கத்திற்குக் கூடத் தகுந்த இடம் வாங்க முடியவி்லை. உலகப் புலவர் திருவள்ளுவர் சிலை திறப்பு கூடத் தடைசெய்யப்பட்டுப் பேரம் பேசி மாற்றுச் சிலை தரப்பின் அடிப்படையில்தான் திறந்து வைக்கப்ப்ட்டது. மேலும், இராமகிருட்டிணா மடம் பணக்கார மடம்தான். எனவே, இத்தகைய நேர்வுகளில் அங்காடி விலைக்குத்தான் குத்தகை விடப்பட வேண்டும். குறைந்த வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடப்பட்டுத் தமிழக வருவாய் சுரண்டப்பட இடம் தரக் கூடாது.சமற்கிருதத்தைவிடத் தமிழே தொன்மையானது;உயர்ந்தது; தமிழ்ப்பண்பாடே சிறந்தது;தமிழர் நாகரிகமே இந்திய நாகரிகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தது என முழங்கிய விவேகானந்தர் பு

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
விவேகானந்தர் இல்லம் என்பது கட்டடத்தின் பெயர். அந்தக் கட்டடத்தின் பெயரை மாற்றினால் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் உள்ளது. குத்தகை என்பது வணிகம் சார்ந்தது. இராமகிருட்டிணா மடம் இயஙகுவதற்குத் தடை விதித்தாலும எதிர்ப்பதில் நியாயம் உள்ளது. பணக்கார மடம் தனது குத்தகை முடிந்ததும் நீட்டிக்கக் கேட்பதும் ஏற்கப்படுவதும் மறுக்கப்படுவதும் வணிகம் சார்ந்தது. இதில் தலையிட்டு உணர்ச்சி வயப்படட்டு முன்பு தினமணி குத்தகை முடிவை எதிர்ததது மிகப் பெரும் தவறு. இது போன்ற தமிழ்த்தேச நலனுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தவும் பிற மாநிலத்தவர்க்காக வாதிடவும் இனியேனும் தினமணி முயலாதிருப்பதாக. குத்தகைக்காரர்களுக்கும் உடைமையாளர்களுக்கும் இடையே உள்ள தரகர்கள் போல் தினமணி புரியாமல் அப்பொழுது நடந்துகொண்டது மிகப் பெரும் தவறு.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:53:00 AM
+++++++++++++++++++++++++++++++++++++

நண்பர்கள் என் கருத்ததுகளை முழுமையாகப்படிக்காமல் ஏதோ குறிப்பிட்டுள்ளார்கள். விவேகானந்த அடிகள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பதால்தான் அவரை வாழ்த்தியும் குறிப்பு எழுதியுள்ளேன். ஆனால் அவர் பெயரைப் பயன்படுத்துவோருக்குத் தமிழ் நாட்டில் சலுகை காட்ட வேண்டும் என்று சொல்வது எந்த அளவில் நியாயம்? மடததிற்கும் அரசிற்கும் இடையே உள்ள குத்தகையை விவகோனந்த அடிகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாமே. வரி ஏய்பிற்காகத் தாங்கள் இந்துக்கள் அல்ல; சிறுபான்மைச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய இராமகிருட்டிணா மடத்திற்குச் சலுகை காட்ட வேண்டிய தேவை யில்லை என்பதுதான் நடுநிலையோர் கருத்தாக இருக்க முடியும். அதே நேரம் அடிகளைப் பற்றி எழுதுவோர் அவர் வழியில் விழிமின் எழுமின் என வேண்டுகிறேன். அடிகள் புகழ் ஓங்குக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 7:20:00 PM

Tamils have broad mind than any one. You cannot sing devaram in Maatti meet but we hear abang in music fetival in Chennai. Tamil are proud to say they can sing abang, Maratti fellows give damm about devaram or an tamil songs. Vivekanada tried to teach the broader mind of Tamils to all so let us have his glory preserved in Chennai

By Partha
2/2/2010 5:40:00 PM

"CHANGE"....What happened to Mr.I.Thiruvalluvan? There are only very few individuals who have CROSSED the BARRIER of Region,Religion,Language and even NATION! Swamy Vivekaananda is One such Gifted Individual.Indians,especially Tamilians should be proud that TAMIL Nadu and Tamilian,especially SETHUPATHY Maharaja have done yeoman service to the WORLD RENOWENED SAGE. Actually the Government of Tamil Nadu,instead of giving iot for lease ,should DECLARE this MONUMENT as the MEMORIAL dedicated to the one of the GREAT SON of INDIA,and make it as a PILGRIMAGE for the LOVERS of HUMANITY!...Please Contact us in

By "Five Men Army"("Vaanchi Naathan,Rajaguru,Sugadev,Bagad Singh,Nethaji")
2/2/2010 1:58:00 PM

I strongly condemn Mr. Thiruvalluvan. it should not be told that as " This building ". it has got own significance. This will give the memory of Swami Vivekananda"s stay to the followers of him. He gave the stand to India in the World Gallery. This continues till date. We tamilians just give the shape to the language which is not visible. We spend the crores of the amount for it. You should see the India as whole nation. the ideology of Swami Vivekananda, Sri Ramakrishna, Mother Sarada Devi's teachings make every one spiritual and to lead a good, peaceful, happy life. YOu should have broader outlook

By Kanagarajan
2/2/2010 6:12:00 AM


புதன், 13 ஜனவரி, 2010

புத்தொளி பாய்ச்சிய புனிதர்!



ஜாதியிலே, ​​ மதங்களிலே,​​ சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு,​​ புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற -​ அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர்.​ அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.விவேகானந்தரைச் சான்றோனாக,​​ துறவியாக,​​ நாவலனாக,​​ தத்துவ ஞானியாக,​​ சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர்.​ இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு.​ ஊக்கமின்றி,​​ உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர்.​ முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு,​​ ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர். தன்னம்பிக்கையும்,​​ அச்சமின்மையுமே அவர் சொல்லிலும்,​​ செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன.​ ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன.​ ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' ​(சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி:​ 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார்.​ வலிமையே வாழ்வெனவும்,​​ வலியின்மை மரணமெனவும் முழங்கினார்.​ ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' ​(தொகுதி:​ பக்.160) என வலியுறுத்தினார்.​ உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார்.​ மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல்,​​ அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.அறியாமை! ​ தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை;​ எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க,​​ அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும்,​​ ""முடியாது,​​ என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.​ நீங்கள் எல்லையற்றவர்கள்.​ காலமும்,​​ இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.​ நீங்கள் எதையும் செய்ய முடியும்.​ எல்லாம் வல்லவர் நீங்கள்'' ​(பக்.300) எனவும் கூறினார்.தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின்,​​ இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர்.​ நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும்,​​ அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர்.​ ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.​ வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது,​​ செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர்.​ ஆனால் விவேகானந்தர்,​​ தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார்.​ தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.​ அவர் எளிய வாழ்க்கை முறையையும்,​​ உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும்.​ குறிப்பாக,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர்,​​ கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார்.​ ஆனால்,​​ படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை.​ சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து,​​ நீந்திப் பாறையை அடைந்து,​​ தியானம் மேற்கொண்டார்.அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும்,​​ உள்ளத்திண்மையையும்,​​ மனத்தன்மையையும்,​​ மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர்.​ 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய,​​ கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது.​ அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும்,​​ தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய,​​ "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி,​​ கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது,​​ அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது.​ அவர் வலிவும்,​​ பொலிவும்,​​ கருவிழிகளும்,​​ தோற்றமிடுக்கும்,​​ சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும்,​​ அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க,​​ ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன.​ அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' ​(பக்.5).இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும்,​​ தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார்.​ தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர்.​ அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும்,​​ அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு,​​ ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின்,​​ உங்களை தூக்கிலோ,​​ தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் ​(தொகுதி:2 பக்.27).மதத்துக்கும், ​​ மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர்.​ ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார்.​ இக்கருத்தை அறுதியிடும் வண்ணம்,​​ "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார்.​ ஆன்மிகம் என்பது வாழும் நெறி;​ அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து.​ இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான்.​ அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான்.​ அம் மாணவன் துறவு பூணக்காரணம்,​​ அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர்,​​ முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி,​​ அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர்.​ மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில்,​​ விவேகானந்தரின் பணிச்சிறப்பும்,​​ பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன;​ பெரிதும் வேண்டப்படுகின்றன.​ மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில்,​​ மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது.​ இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.​ ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி,​​ கொள்கை வெறியை வளர்க்கிறது;​ சில நேரங்களில் அவ்வெறி,​​ எல்லை கடந்தும் போய்விடுகிறது.​ மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது.​ எனவே,​​ எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' ​(தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.இந்தியாவில் மட்டுமன்றி,​​ வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும்,​​ மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார்.​ "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில்,​​ ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை.​ உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர்.​ ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே.​ பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால்,​​ நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' ​(தொகுதி:​ 2 பக்.367)ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர்.​ மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி;​ கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று;​ சதியால் நேர்ந்தது என முரசறைந்தார்.​ ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' ​(தொகுதி:​ 6 பக்.317) என வேதனைப்பட்டார்.இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார்.​ இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர்.​ ""உங்கள் சமயம் மகத்தானது,​​ ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர்.​ வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க,​​ மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' ​(தொகுதி:​ 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார். விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர்.​ அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர்.​ "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர்.​ அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன.​ அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல்,​​ அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது.​ ""ஒரு விவேகானந்தர் என்ன,​​ காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.​
கருத்துக்கள்

Is it possible to create a genetically modified Shri Vivekanandar now?He is more needy at this time..Perhaps our environment minister who is the PRO of Mahyco,Monsanto can help for this request....I guess he wont entertain shri vivekanandar,because he is not a Bt-brinjal to introduce all over india and will be busy in licking the boots of monsters engineering the nature to eat more money.....By a idiot

By manidhan
1/12/2010 6:43:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 26 டிசம்பர், 2009

சுவாமி விவேகானந்தர் பிறந்ததினத்தன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை



சென்னை, ​​ டிச.​ 25: ​ சுவாமி விவேகானந்தர் பிறந்ததினமான ஜனவரி 12}ம் தேதி மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.​ இந்தியா ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த பண்டைய நாடு என உலகிற்கு உணர்த்தியவர்.இன்றைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆன்மிகம் அறிந்த இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரை தங்களது ஆதர்ச நாயகனாக பார்க்கிறார்கள்.​ இதைக் கண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தார்.ஆனால் இன்று தமிழகத்தில் மது அருந்துவோரில் 95 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர்.​ எனவே சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.சி.​ செந்தில்​ குமார் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இந்தக் கோரிகையை இந்தியா முவழுவதுமே வைப்பதுதான் முறை.எனினும் தமிழ நாட்டில்தமிழர் திருநாளை முன்னிட்டு அந்த வாரம் முழுவதுமே மதுக்கடைகளுக்கு விடுமுறை விடலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *