சனி, 28 செப்டம்பர், 2013

விரைவான அருவினைக்கு வினைத்திறன் இன்றியமையாதது!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81427220130928005710.jpg
வேகமான சாதனைக்கு விவேகம் அவசியம்!


அமெரிக்காவில், மூன்று லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவரும்; பல துறைகளில் ஆராய்ச்சி செய்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற, சுப்ரா சுரேசு: நான், சென்னையில் வளர்ந்தவன். சென்னை ஐ.ஐ.டி.,யில், ‘கெமிக்கல் இன்ஜினியரிங்’ முடித்து, மேற்படிப்பிற்காக கடன் வாங்கி, 100 டாலர் பணத்துடன், அமெரிக்கா சென்றேன். என் முதல் முனைவர் பட்டத்தை, எம்.ஐ.டி., யில், 1981ல் பெற்று, அங்கேயே ஆசிரியராக பணியாற்றினேன். ஆசிரியப் பணியின் போதே, ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, 250 ஆராய்ச்சி கட்டுரைகள், ஆறு புத்தகங்களை எழுதியுள்ளேன். பொறியியல், மருத்துவம், ரசாயனம், உயிரியல் என, பல துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 22 புதிய கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமையும் பெற்றிருக்கிறேன். எம்.ஐ.டி., பல்கலை கழகத்தில், ஐந்து வெவ்வேறு துறைகளின் தலைவராக பணியாற்றியதை, இன்றளவும் பெருமையாக கருதுகிறேன். ஏனெனில், இச்சாதனையை செய்த முதல் ஆசிய இனத்தவர் நான் தான். பல துறைகளில் ஆராய்ச்சி செய்து சாதித்ததற்காக, ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி, இந்திய அரசு பாராட்டியது.
‘என்.எஸ்.எப்.,’ எனும், தேசிய அறிவியல் அறக்கட்டளை தான், அமெரிக்காவின் மிக உயர்ந்த அறிவியல் அமைப்பு. இங்கு, விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், புதிய கண்டுபிடிப்புகள் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து, நிதி உதவியும் செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக, 2010ம் ஆண்டு என்னை நியமித்தார்.
நான், கடந்த ஆண்டு மட்டும், மூன்று லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியதோடு, 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, நிதி உதவி செய்து, பல புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்துள்ளேன். அமெரிக்க பல்கலை கழகம் ஒன்றின் தலைவர் பொறுப்பை ஏற்க, அறக்கட்டளை பணியிலிருந்து விலகிய போது, அமெரிக்காவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவியதாக, அதிபர் ஒபாமாவே என் திறமையை பாராட்டினார். சாதனைகளை வேகமாக செய்தாலும், விவேகம் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக