புதன், 25 செப்டம்பர், 2013

13- ஆம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு

13- ஆம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு


சிதம்பரம் ஓமக்குளத்தில் தூர்வாரும் போது கண்டுபிடிக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி மற்றும் செங்கல் கேணிகள் புதன்கிழமை தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் ஓமக்குளம் இந்த ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும்போது திங்கள்கிழமை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த காலத்தில் 13-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கேணி 2-ம், 17-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 20 அடிக்கு மேல் விட்டம் கொண்ட செங்கல் கேணிகள்- 4 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதனை சென்னை தொல்பொருள் ஆய்வுத்துறையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் முனைவர் யத்தீஷ்குமார் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால சோழர்கள் காலத்தில் இதுபோன்ற சுடுமண் உறை கேணியை மக்கள் தூய குடிநீருக்காக அமைத்து பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்று சுடுமண் உறை கேணிகள் மகாபலிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரவலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முனைவர் யத்தீஷ்குமார் தெரிவித்தார். தொல்லியல் ஆய்வாளருடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், நிர்வாகிகள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக