காசுமீர் இன்னமும் இந்தியாவுடன் சேரவில்லை: முதல்–மந்திரி உமர் சொல்கிறார்
மாலை மலர் பதிவு செய்த நாள் :
வியாழக்கிழமை,
செப்டம்பர் 26,
11:21 AM IST
,திருநகர், செப். 26–
ஐரோப்பிய யூனியன்
பிரதிநிதிகள் குழு இந்தியாவில் சுற்று பயணம் செய்து வருகிறது. நேற்று அந்த
பிரதிநிதிகள் காஷ்மீர் மாநிலம் சென்றனர். முதல்–மந்திரி உமர் அப்துல்லாவை
அவர்கள் சந்தித்து பேசினார்கள்.
காஷ்மீர் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்தனர். அப்போது ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் உமர் அப்துல்லா கூறியதாவது:–
1947–ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதும், எல்லா மாநிலங்களும் ஒன்று சேர சம்மதம் தெரிவித்தன. அதன்படி இந்தியாவுடன் இணைந்தன.
ஆனால் இந்தியாவுடன் சேர ஜம்மு–காஷ்மீர் பிராந்தியம் சம்மதித்தது. ஆனால் இந்தியாவுடன் சேரவில்லை.
இந்தியாவுடன்
காஷ்மீர் இணையவில்லை என்ற எங்கள் கட்சியின் நிலை இன்னமும் நீடிக்கிறது.
இதன் காரணமாகத்தான் காஷ்மீர் பகுதிக்கு தனி சிறப்பு அந்தஸ்தை இந்தியா
கொடுத்துள்ளது.
எங்கள் பகுதிக்கு என்று தனி சட்ட அமைப்பு உள்ளது. தனி கொடி இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சினையில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அது பிரிவினை வாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதம் கொண்டவர்கள் பிரிக்க சொல்கிறார்கள். மற்றவர்கள் காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்கிறார்கள்.
இரு
தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், தற்போதைய நிலை மாறாது.
பிரிவினை வாதிகளுடன் பேச்சு நடத்த சட்டத்தில் வழிவகை உள்ளது.
இவ்வாறு காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக