திங்கள், 23 செப்டம்பர், 2013

நெகிழிப் பொருட்களைத் தவிர்க்கலாமே!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_810020.jpg
நெகிழிப் பொருட்களை த் தவிர்க்கலாமே!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, "பயோ பிளாஸ்டிக்' என்னும், மண்ணில் மக்கும் பிளாஸ்டிக்கை கண்டு பிடித்த, பள்ளி மாணவன் எம்.எம்.அர்ஜுன்: நான், சென்னையில் உள்ள, எஸ்.பி.ஓ.ஏ., ஜூனியர் கல்லூரியில், பிளஸ் 1 படிக்கிறேன். சுற்றுச்சூழல் மாசுபாட்டால், நாளுக்கு நாள் புதிய நோய்கள் உருவாகின்றன. "பிளாஸ்டிக்' பொருட்களின் அதிகபட்ச பயன்பாடும், இதற்கு ஒரு காரணம். ஏனெனில், குளிர்ச்சியாக கிடைக்கும் குளிர்பானம் முதல், சுடச் சுட கிடைக்கும் உணவு பொருட்கள் வரை, அனைத்துமே பிளாஸ்டிக்கால் தான், "பார்சல்' செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக், சூடான பொருட்களால் உருக்கப்பட்டு, மீண்டும் நம் வயிற்றுக்குள்ளே சென்று, உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. நவீன உலகில், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க முடியாவிட்டாலும், அதை மண்ணிற்குள் புதைக்காமல், மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு, படித்தவர்களிடம் இருப்பதில்லை. எனவே, சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை, உருவாக்க முயற்சித்தேன். ஆண்டிற்கு, 800 டன் சோளம் வீணாவதாக அறிந்ததால், சோள மாவிலிருந்து பயோ பிளாஸ்டிக்கை உருவாக்க முயற்சித்தேன். இரண்டு, "டீஸ்பூன்' சோள மாவு, 100 மி.லி., தண்ணீர், ஒரு சொட்டு வினிகர், கிளிசரின் மற்றும் வெஜிடபுள் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி, 40 வினாடிகள் வரை சூடேற்றினால், அக்கலவை ஜல்லி போன்ற வடிவம் பெறும். அதை, அலுமினிய பாயில் பேப்பரில் ஊற்றி, நாள் முழுவதும், "பிரிஜ்'ஜில் வைத்தால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மக்கும், பயோ பிளாஸ்டிக் கிடைக்கும். இக்கலவையின் விகிதத்தை மாற்றியமைப்பதன் மூலம், "கேரி பேக், பிளாஸ்டிக் கப்' போன்ற பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கலாம். உபயோகித்த பின், இதை மண்ணில் புதைத்து விட்டால், சில நாட்களிலேயே மக்கிவிடும். சென்னையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், பயோ பிளாஸ்டிக் செய்யும் முறையை செய்து காட்டி, மேயர் சைதை துரைசாமியிடமிருந்து முதல் பரிசை வென்றேன்.
தொடர்புக்கு: 96001 25111.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக