முழு க் கவனத்துடன் செயல்படுவேன்!
கால்நடை மருத்துவ த் தேர்வில், 8.68 கிரேடிங் பாய்ன்ட்கள் பெற்று, கவர்னர் ரோசய்யாவிடம், 24 தங்க பதக்கங்கள் பெற்ற, இராசேசுவர் குமார் யோகி: நான், ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தின், பாட்டன் கிராமத்தை சேர்ந்தவன். தந்தை ஜக்மோகன், ராஜஸ்தானில் தொழில் செய்கிறார். பள்ளி நாட்களில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தையின் தொழிலில் உதவியதால், இரவு நேரங்களில் மட்டுமே, படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. என் சிறு வயதிலிருந்தே, படிக்கும் போது, படிப்பிலும், விளையாடும் போது, விளையாட்டிலும் என, செய்யும் செயலில் முழு கவனம் செலுத்துவேன். கால்நடை மருத்துவம் படிப்பதற்காக, அகில இந்திய அளவில் நடைபெற்ற, நுழைவு தேர்வு எழுதினேன்.
அதன் மூலம், நாமக்கல்லில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தில், இளநிலை கால்நடை மருத்துவத்தில், பி.வி.எஸ்.சி., பட்ட படிப்பில் சேர்ந்தேன். பல்கலையில் படிக்கும் போதே, அமெரிக்காவில் உள்ள, மிக்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில், ஏழு வாரங்கள் தங்கி, இன்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பை, நன்கு பயன்படுத்தினேன்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக பட்டப் படிப்பில், 8.68, கிரேடிங் பாயின்ட்கள் பெற்று, பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்றேன். மேலும், பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னரிடம், 24 தங்க பதக்கங்கள் பெற்று சாதித்தேன். விழாவில் பங்கேற்ற அனைவரும், கரவொலி எழுப்பி பாராட்டியது, மனதிற்கு மகிழ்ச்சியையும், முன்னேற வேண்டும் என்ற உந்துதலையும் தந்தது.
தற்போது, பல்கலையிலேயே, கிராஜுவேட் அசிஸ் டென்ட்டாக பணியாற்றிய பின், ராஜஸ்தான் செல்ல விரும்புகிறேன். ஏனெனில், என் சொந்த மாநில விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருடன் பணியாற்றி, நேரடி அனுபவம் பெற வேண்டும். அது, என் பிற்கால கால்நடை ஆராய்ச்சிக்கு உதவும். கால்நடை வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை, விவசாயிகளிடம் ஏற்படுத்துவதே, என் அடுத்த இலக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக