வியாழன், 26 செப்டம்பர், 2013

இரத்தக்குழாய் அடைப்பைக் கண்டறியலாம்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_812683.jpg
இரத்தக்குழாய் அடைப்பை க் கண்டறியலாம்!

எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி, ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை, விரல் நுனியிலேயே கண்டறியும் கருவியை கண்டுபிடித்த, கேரி பியர்ஸ்:
நான், அமெரிக்காவில் உள்ள, ஐயோவா பல்கலை பேராசிரியர். மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்களில், பெரியது மற்றும் மிக முக்கியமானது, ‘அயோட்டா’ எனும், இதயத்தில் உள்ள மகா தமனி. இதயத்திலிருந்து எடுத்து செல்லப்படும் ரத்தம், மகா தமனி எனும் இந்த ரத்தக் குழாய் வழியாக தான், உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும். நவீன வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வயோதிகம், உடல் உழைப்பு இல்லாதது என, பல காரணங்களால், மகா தமனியில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு என, பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மகா தமனியின் செயல்பாட்டை அறிய, கழுத்தில் உள்ள, ‘கரோடிட்’ தமனி அல்லது வயிறும், தொடையும் இணை யும் பகுதியில் உள்ள, ‘பெமோரல்’ தமனி மூலம், இதய துடிப்பு கணக்கிட்ட பின்பே, ரத்தக் குழாயில் எந்த அளவிற்கு அடைப்பு உள்ளது என, ஓரளவே தீர்மானிக்க முடியும். ஜுரத்தை கண்டறி யும், ‘தெர்மா மீட்டர்’ போல், ரத்த குழாயின் அடைப்பை எளிதில் கண்டறிய முடியாமல், சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். அத னால், ‘டிரான்ஸ்டியுசர்’ எனும், கருவியை கண்டுபிடித்தேன். nஇக்கருவியை, விரல்களின் மீதோ அல்லது முழங்கையின் கீழ் பகுதியிலோ வைத்தால், சம்பந்தப்பட்டவரின் வயது, உடல் எடைக்கு ஏற்ப, இதயத் துடிப்பு உள்ளதா என்பதையும்; மகா தமனியில், எந்த அளவிற்கு அடைப்பு உள்ளது என்பதையும், மிக துல்லியமாக தெரிவிக்கும். இதய நோயால், அதிகம் பேர் பாதிக்கப்படும் தற்போதைய காலகட்டத்தில், அறுவை சிகிச்சை இல்லாத, இப்பரிசோதனை முறை, நடுத்தர மற்றும் முதியவர்களுக்கு பெரிய அளவில் பயன்அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக