முகநூல் குறைபாட்டை க் கண்டுபிடித்த தமிழன்!
‘பேஸ்புக்’கின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்து, 8.12 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற, அருள்குமார்: நான், சேலம், ஆத்தூரில் உள்ள, கந்தசாமி புதுாரை சேர்ந்தவன். அப்பா வையாபுரி, குடும்ப வறுமையிலும், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், பொறியியல் படிக்க வைத்தார். குடும்பத்தில், நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி.
கல்லுாரியில், ‘இன்டர்நெட்’ பயன்படுத் திய போது தான், நண்பர்கள் உதவியுடன் பேஸ்புக் பற்றி தெரிந்து கொண்டேன். அப்படி, ‘பேஸ்புக்’கில் உலாவிய போது, ‘பக் பவுண்டி புரோகிராம்’ பற்றி தெரிந்து கொண்டேன். அதாவது, ‘பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட்’ என, பல வலைதளங்களில், அவர்களின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டு பிடித்தால், லட்சக்கணக்கில் பரிசு தருவர். அப்பரிசு தொகை மீதான ஆர்வத்தால், பேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என, ஆராய்ந்தேன். பல வலை தளங்களில், ‘பேஸ்புக்’குக்கான, ‘லிங்க்’ கொடுத்திருப்பர். அதை நிறைய பேர், ‘ஷேர்’ செய்வர். ஆனால், பேஸ்புக் போலவே தோன்றும் பல போலி தளங்களும், அதில் இருக்கும். அப்போலி தளங்களில், ‘கிளிக்’ செய்தால், நம் கணக்கில் இருக்கும் தகவல்கள் தானாகவே திருடப்படும். இப்பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து கூறியதற்கு, 1,500 அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்தது. அதனால், ஆர்வம் இன்னும் அதிகமானது. மேலும், பேஸ்புக்கில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை, ஒரு குறிப்பிட்ட, ‘சாப்ட்வேர்’ மூலம் மற்றவர்கள் கையாள முடியும் என்ற, மிகப்பெரிய குறைபாட்டை கண்டறிந்து கூறிய போது, பேஸ்புக் நிர்வாகமே அதிர்ந்தது. பின், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எல்லாம் சரியாக இருப்பதாக கூறினர். அதனால், மற்றவரின் புகைப்படத்தை எப்படி திருட்டுத்தனமாக கையாள்வது என்ற, ‘டெமோ வீடியோ’வை பேஸ்புக் நிர்வாகத்திற்கு, ஆதாரமாக அனுப்பினேன். தன் தவறை உணர்ந்த பேஸ்புக், என் கண்டுபிடிப்பிற்கு, 8,12,500 ரூபாய் பரிசளித்து பாராட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக