புகைப்படம் எடுப்பது என் ரத்தத்தோடு கலந்தது.
சத்சங்கி
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1944ம் ஆண்டில் பிறந்தவர், சிறுவயது முதலே புகைப்படத்தின் மீது ஆர்வம் கொண்டவர். 1961ம் ஆண்டு ஆக்பா அறிமுகம் செய்த பாக்ஸ் டைப் கேமிராவை பதினெட்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாவிற்கு வாங்கி தனது புகைப்பட வாழ்வைத்துவக்கியவர்.
என்ஜினியரிங் முடித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து முடித்தவர், தற்போது சென்னையில் தன் மனைவியுடன் அழகான ஒரு பிளாட்டில் புகைப்படமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
கடந்த 89ம் ஆண்டில் இருந்து சீரியஸ் புகைப்படக் கலைஞரானவர். வைல்டு லைப், லேண்ட்ஸ்கேப், மைக்ரோ, போர்ட்ரெய்ட் என்று புகைப்பட பிரிவின் அனைத்து பிரிவிலும் தனது முத்திரையை பதித்தவர்,
படம் எடுப்பதற்காக ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, ஆஸ்திரேலியா, அலஸ்கா, தான்சானியா, கென்யா, ஜாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் போஸ்வானா ஆகிய நாடுகளுக்கு போய்வந்தவர்.
புகைப்படம் தொடர்பான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்பவர், இவரது படங்கள் பல முறை சர்வதேச பரிசுகள் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள

போட்டோகிராபி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த புகைப்படக்
கலைஞர்களின் படங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த
புத்தகத்தில் இவரது படமும் இடம் பெற்றுள்ளது என்பதே இவரது பெருமைக்கு
சான்றாகும்.
நிக்கான் கேமிரா காதலரான இவர் ஒரே நேரத்தில் மூன்று கேமிராக்களையும், மூன்றுவித லென்சுகளையும் எடுத்துக்கொண்டு செல்வார்.
இவ்வளவு படங்கள் எடுத்தாலும் எந்த படங்களையும் காசாக்க நினைக்காதவர். தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே எடுக்கக்கூடிய படங்களை பொதுமக்கள் பார்க்கவேண்டும், அவர்களும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக முன்வரவேண்டும் என்று நினைப்பவர்.
இவரது படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோகேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
இவருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 9884039713
- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக