தன்னார்வத்துடன் சேவை செய்தேன்!
கிராமங்களில், எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, 196 நாடுகளின் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்ற, நித்தியானந்தம்: நான், கோவை மாவட்டத்தை சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் போதே, சேவை செய்வதில் ஆர்வம். நண்பர்கள் உதவியுடன், 2002ல், தியான பொது
சேவை மையம் துவங்கி, பல சமூக சேவைகளை செய்து வருகிறேன். கோவையில் உள்ள, 450க்கும் மேற்பட்ட கிராமங்களில், எய்ட்ஸ் மற்றும் குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரசாரத்தை, சிறப்பாக செய்தேன். மாவட்ட ஆட்சியர் உதவியுடன், இருபாலர் சுயஉதவி குழுவை ஏற்படுத்தி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொழிற்பயிற்சி தந்து, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தினேன். சில மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து, இலவச மருத்துவ முகாம் மூலம், முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பார்வையற்றவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை செய்தோம். குஜராத்தில் நடந்த பூகம்பத்தின் போது, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துகளுடன், நாங்கள் ஒரு குழுவாக சென்று, ஆறு மாதங்கள் தங்கி சேவை செய்தோம். தமிழகத்தில், சுனாமி அதிகம் பாதித்த நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தங்கி, பாதிக்கப்பட்டவர்கள் பசியாற, உணவுகளை பங்கிட்டு கொடுக்கும் கிராமப்புறங்களில், எய்ட்ஸ் விழிப்புணர்வை சிறப்பாக செய்ததற்கு, 2012ல் வாஷிங்டனில் நடந்த, 196 நாடுகள் பங்கேற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இம்மாநாட்டில், ஹிலாரி கிளிண்டன், உலக வங்கி தலைவர் என, பலர் பங்கேற்றனர். இந்த ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் நடந்த
மாநாட்டில், எய்ட்ஸ் தொடர்பாக, 450 கிராமங்களில் நான் செய்த விழிப்புணர்வு பற்றிய ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தேன். அதன் காரணமாக, உலக எய்ட்ஸ் அமைப்பின், தன் னார்வ தொண்டு நிறுவன அங்கீகாரம் பெற்ற பணியாளராகும் வாய்ப்பை பெற்றது, பெருமையாக உள்ளது. என் சேவையை பாராட்டிய சேலம் கலெக்டர், சிறந்த இளைஞர் விருது வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக