இந்திரா பாணியில் நடவடிக்கை: வலியுறுத்துகிறார் கருணாநிதி
சென்னை:"தமிழக மீனவர்கள் பிரச்னையில், இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு
வழிக்கு வரும்; தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்' என, தி.மு.க., தலைவர்
கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:பார்லிமென்ட்டில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான்குர்ஷித் பேசுகையில், "மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இணைந்து பேச வேண்டும். தமிழக மீனவர்கள் குழு, தமிழக அரசின் ஆதரவுடன், இலங்கை சென்று திரும்ப வேண்டும் என, விரும்புகின்றனர்.ஆனால், இதுவரை அவர்களுக்கு உரிய அனுமதியை, தமிழக அரசு தரவில்லை.இப்பிரச்னையில், உண்மையிலேயே, தமிழக அரசு சுமூகப் பேச்சுவர்த்தைக்கு, தாமதம் செய்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்த செய்தி உண்மையாக இருக்குமானால், இதுவரை மத்திய அரசு மீது பழிசுமத்தி, காலம் கடத்தி வந்ததை போல செய்யாமல், தற்போதாவது, தாமதத்தை தவிர்த்து, மீனவர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திரா பிரதமராக இருந்த போது, சிங்கள கேப்டன் ஒருவர், அடிக்கடி, தமிழக மீனவர்களை, தமிழக எல்லை பகுதிக்குள்ளேயே வந்து, தாக்கி வருவதை கேள்விப்பட்டு, கோபமடைந்த இந்திரா, அந்த கேப்டனை கைது செய்ய, இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டார். கடற்படை வீரர்களும் சிங்கள கேப்டனை பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.பின், அந்த கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்ப பெற்றது. இச்சம்பவத்தை இந்திய அரசும், தமிழக அரசும் நினைவிலே கொண்டு, இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும். இலங்கை அமைச்சர்களும் தங்கள் மனம் போன படிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள முன்வருவர். தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக