செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தமிழர்களுக்கு வஞ்சகம் புரிந்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது - வை கோ

தின இதழ் Home / அரசியல் / தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது
தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது

தமிழர்களுக்கு  வஞ்சகம் புரிந்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது

ஈரோடு, ஆக. 26
தமிழ் இனத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் செய்த காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என்று ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ஈரோட்டில் நடைபெற்ற ‘இணையதள நண்பர்கள் முன்னெடுக்கும் மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:‘‘மாற்றம் வேண்டும் என்று இந்த இணையதள நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். நாட்டிலேயே திராவிட இயக்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே மதிமுக தொடங்கப்பட்டது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு திமுக கட்சி கூட்டத்தில் பேசியதற்காக கைதட்டல் கிடைத்தது. அதற்காக என்னை அந்த கட்சியிலிருந்து நீக்கினார்கள். மதிமுக இயக்கத்தில் புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். அவர்கள் கட்டுப்பாட்டுடன் உள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுள்ளது. அரசியல் மாற்றம் வேண்டும்.
முதலில் இந்திய அரசியலில் மாற்றம் வேண்டும். தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் செய்த சோனியா காந்தி தலைமையிலான, மன்மோகன்சிங் பிரதமராக உள்ள காங்கிரசை அகற்றியே தீர வேண்டும். வாஜ்பாய் அரசு ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவிபோல எந்த தலைவரும் செய்யவில்லை. கருணாநிதி வார்த்தை ஜாலத்தால் அரசியல் செய்து வருகிறார். இப்போது அரசியல் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சி செய்தவர்களின் சுயநலத்தால் எடுக்கப்பட்ட முடிவால், கட்அவுட் கலாச்சாரத்தால், ஜாதி பெயரால் அரசியல் சீரழிந்து வருகிறது.
இளைஞர்கள் இதை முறியடித்து சாதிக்க வேண்டும். ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் அப்பட்டமாக ஈழத்தமிழர்களை குறை கூறி தயாரிக்கப்பட்ட படமாகும்.அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மதிமுக எப்போதும் ஆதரவளிக்கும். இவ்வாறு வைகோ பேசினார். கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக