இலங்கையில் நடைபெற்ற போரின் போது மனித உரிமை விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை 7 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்குள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு பணிகளை பார்வையிட்டார். பின் யாழ்பாணத்தில் உள்ள மைய நூலக கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது காணாமல் போன தமிழர்கள் விவகாரம் குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசிப்பேன் என்று நவநீதம்பிள்ளை தமிழர்களிடம் கூறினார். மேலும் தற்போது வாழும் இடம் குறித்தும் ராணுவம் நிலங்களை பறித்தது தொடர்பாகவும் ஆலோசிப்பேன் என்றும். இலங்கை தமிழர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என்றும் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக