புதன், 28 ஆகஸ்ட், 2013

90 அகவைத் தாயாரை ஆட்டுக் கொட்டிலில் வீசிய பாசக்கார மகள்
முதியோருக்கான தொண்டுநிறுவனங்களில் நன்கொடை தவிர பிற நிறுவனங்கள்போல் வணிக நோக்கு வரவு கிடையாது. எனவே, இதனை நடத்துவோர் குறைவாகவே உள்ளனர். வசதி உள்ளவர்கள் கட்டணம் செலுத்தித் தங்கும் வகையில் நல்ல முதியோர் காப்பகங்கள் உள்ளன. எனினும் ஏழைகளும் பயன்பெறும் வகையில் அரசே முதியோர் காப்பகங்கள் நடத்த வேண்டும். எனினும் முதியோர் காப்பகங்களுக்குத் தேவையில்லாத வகையில் முதியோர் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். முதியோர்களுக்கும் உடன் செல்பவர்களுக்கும் எவ்வகை வேறுபாடுமின்றி இலவசப் பயணக் கட்டணம் அளித்தல், இலவச முழுமையான மருத்துவ ஆய்வும் மருத்துவ உதவியும் அளித்தல், முதியோரைச் சுமையாகக் கருதா வகையில் அன்புடன் பேணும் வகையில் அரசே முதியோருக்கு முதன்மை அளித்தல் போன்ற பல்வகை நலத்திட்டங்கள் மூலம் குடும்பத்தின் வேர்களான முதியோரைப்  பேணச் செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன்மூலமும்  சுமை தாங்கிகளாக இருந்தோரைச் சுமையாகக் கருதும் அவலநிலையைப் போக்க இயலும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

படுத்த படுக்கையான 90 அகவைத் தாயாரை ஆட்டுக் கொட்டிலில் வீசிய பாசக்கார மகள்


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79022220130828000550.jpg

புதுடில்லி ??:நோயுற்று படுத்த படுக்கையான, 90 வயது தாயை கவனிக்க முடியாமல், பாழடைந்த கட்டடத்தின், ஆட்டு கொட்டிலில் போட்டு விட்டு சென்றார் பாசக்கார மகள்.

முதியோர் இல்லங்களும், வயதானவர்களுக்கான தனி குடியிருப்புகளும், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதற்கு, கொல்லம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவமே சாட்சி. தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, கடைசி காலத்தில் வைத்து காப்பாற்றுவதற்கு, இன்றைய தலைமுறையினர் முன்வருவதில்லை; பாரமாக நினைக்கின்றனர் என்பதற்கு, இதுவே சான்று.கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில், குலத்துப் புழாவில், 90 வயதான மூதாட்டி ஒருவர், தன் மகள் - மருமகன் வீட்டில், சில ஆண்டுகளாக வசித்து வந்தார். இவருக்கு மகன் இருந்த போதிலும், அவர் கவனிக்க முன் வரவில்லை.மகளோ, தன் தாயை, தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி, வீட்டு வேலைக்கு உதவியாக வைத்து கொண்டார். ஆனால், சில நாட்களுக்கு முன் அந்த மூதாட்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். இது, மகளுக்கு பாரமாக போய்விட்டது. உடனே சகோதரனை அழைத்து, "தாயை தூக்கிச் செல்' என்று கூறியுள்ளார்; பெத்த மகனோ கண்டு கொள்ளவில்லை.

இதனால், பெத்த மகளும், தன்னால் முடியாது என்ற கூறி, தன் வீட்டு அருகே இருந்த, பாழடைந்த கட்டடத்தில், ஆடுகள் கட்டப்பட்டிருந்த கொட்டிலில் போட்டு விட்டார். இதை பார்த்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தலையிட்டுள்ளனர்; ஆனால், அப்பெண்ணின் உறவினர்களே ஆர்வம் காட்டாததால், உதவ நினைத்தவர்களும் பின் தங்கினர்.ஆட்டு கொட்டிலில் மூதாட்டி ஒருவர் அவதிப்படுவது பற்றிய தகவல் வெளியானதும், தன்னார்வ நிறுவனம் ஒன்று, அம் மூதாட்டியை தூக்கி சென்று, கொட்டாரக்கராவில் உள்ள முதியயோர் இல்லத்தில் சேர்த்துள்ளது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக