செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மறந்துபோன மருதிருவர் கோட்டை


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / மறந்துபோன மருதிருவர் கோட்டை

மறந்துபோன மருதிருவர் கோட்டை

சிவகங்கை அரசி வேலுநாச்சியாருக்கு பக்க பலமாக இருந்த மருது சகோதரர்கள் ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக இந்த கோட்டையில் வீரர்களுக்கும் யானைகளுக்கும் போர் பயிற்சி அளித்துள்ளனர்.காளையார்கோவில் மற்றும் சிவகங்கையில் இருந்த ஆயுத கிடங்குகளை விட சங்கரபதி கோட்டையில்தான் அதிக ஆயுதங்களை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.வீரர்களுக்கு கொரில்லா பயிற்சி மற்றும் மற்போர் பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் கோட்டையில் செய்யப்பட்டு இருந்தன. கோட்டையை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் மதுரை திருமலை நாயக்கர் மஹால் போன்று தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, முட்டை, கடுக்காய் ஆகியவை ஒன்றாக அரைத்து ஊற வைத்து கோட்டையின் சுவர்களை பூசியுள்ளனர்.
யானைகள் கோட்டைக்குள் வந்து செல்லும் வகையில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது இந்த பகுதி மருது சகோதரர்களின் பலமிக்க பகுதியாக விளங்கி வந்துள்ளது. இங்கிருந்து காளையார் கோவிலுக்கு சுரங்கம் அமைத்துள்ளனர்.கோட்டையின் உள்ளே இருந்த ரகசிய அறைகள் காலப்போக்கில் பராமரிக்காமல் மூடப்பட்டு விட்டன. பல வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்ட இந்த கோட்டை இன்று வனங்கள் சூழ்ந்து காடுகளுக்கு மத்தியில் மறைந்துள்ளது.தற்போது இக்கோட்டை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கோட்டையின் சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்து கட்டடம் முழுவதும் சேதமாகும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் இந்த கோட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு தமிழக சட்டசபையில் சங்கரபி கோட்டை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு செய்தனர். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.வரலாற்றையும் நமது சுதந்திரத்தின் போராட்டத்தையும் தன்னுள் வைத்திருக்கும் இந்த கோட்டையை புதுப்பித்தால் நமது வீர மறவர்களின் வரலாற்றை வருங்கால சந்ததியும் அறிந்து கொள்ளும் நிலை உருவாகும்.தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக