எந்திரனியல் மாணாக்கன்
சிங்கப்பூரில் நடந்த, "வேல்ட் ரோபோட் மாஸ் டர் கப்-2013' போட்டியில், வெண்கலம் வென்ற மாணவன், சஞ்சய் கிருட்டிணன்: நான், புதுச் சேரி மாநிலம், தேங்காய் திட்டில் உள்ள, ஆச்சாரியா பால சிக்ஷா மந்திர் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறேன். பள்ளியில், "ரோபோடிக்ஸ்' தொடர்பான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றதால், ரோபோக்களை உருவாக்கும் வழிமுறைகளை, ஆர்வத்துடன் கற்றேன். கடந்த ஜனவரியில், சென்னையில் நடந்த, "யூனி ரோபோட் மாஸ்டர் கப் - 2013' போட்டியில் வென்றதன் மூலம், சமீபத்தில், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக போட்டிக்கு தகுதி பெற்றேன்.
இப்போட்டிக்கு, இந்தியாவிலிருந்து, ஐந்து பள்ளிகளை சேர்ந்த, 30 மாணவர்கள் என, 350 வகையான ரோபோட்டிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர். ஜூனியர், சீனியர் என, இரண்டாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்றில், நாங்கள் உருவாக்கிய ரோபோக்களுக்கும், போட்டியாளரின் ரோபோக்களுக்கும் இடையே, "சாக்கர் மாஸ்டர்ஸ்' எனும் கால் பந்து போட்டி நடந்தது.இரண்டாம் சுற்றில், "ரோபோ வார்ஸ்' எனும், ரோபோக்களுக்கிடையே சண்டை போட்டி நடந்தது. இறுதியாக, மாணவர்களின் படைப்பாற்றலை சோதிக்கும், "கிரியேட்டிவிட்டி' சுற்றில், இந்திய ராணுவத்திற்கு பயன்படும் ரோபோவை உருவாக்க கூறினர்.நான், என் நண்பனுடன் இணைந்து, ரிமோட் மூலம் இயக்கும், "ருத்ரா' ரோ போவை உருவாக்கினோம். எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், வெடிகளை கண்டுபிடித்து, செயலிழக்க செய்வது, எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்து கண்ணி வெடிகளை பொருத்துவது போன்ற, செயல்களை செய்யும் வகையில் ரோபோவை வடிவமைத்தோம்.எங்களின் இப்படைப்பு சிறப்பாக இருந்ததால், "டெக் னோ மாஸ்டர்ஸ் ஜூனியர் அவார்டு'க்கான, வெண் கல பதக்கம் கிடைத்தது. 13 வயதிலேயே ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்றது, எதிர் வரும் காலங்களில் இத்துறை மீதான ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக