கொசுக்களை அழிக்கும் சப்பாத்திக்கள்ளி!
கொசுக்களின் பெருக்கத்தை, இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த, பள்ளி மாணவன் காசுட்ரோ:
நான், பதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள, பாரதி அரசு மேல்நிலைபள்ளியில், பிளஸ் 1 படிக்கிறேன். மலேரியா, "டெங்கு' போன்ற, நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது. மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி, கொசுக்களின் பிறப்பிட மாக அமைகிறது.இதனால், பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில், கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்க்கரசி உதவியுடன் முயற்சித்தேன். செயற்கையான வேதியியல் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திக்கள்ளிஉதவியது.
கொசுவின் முட்டைகள், "லார்வா, பியூபா, அடல்ட்' என, இந்த படிநிலைகளை தாண்டி தான், கொசுக்களாக உருவம் பெறுகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன். அதிலிருந்து, "மியூசிலேஜஸ்' எனும், வழுவழுப்பான திரவம் கிடைத்தது.
பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி, அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன். கொசுவின், "லார்வா'க்களுக்கு, உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன. இச்சோதனையில், கொசுவின் கூட்டுப் புழுக்கள்முற்றிலும் அழிந்ததைநிரூபித்தேன்.
இது இயற்கை முறையிலானது என்பதால், தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன், கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்தும், "மேக் சயின்ஸ்' போட்டியில், முதல் பரிசு மற்றும், 300 யூரோ பெற்றேன். தொடர்புக்கு: 88707 89884.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக