தமிழால் தழைக்கிறது செளராட்டிரம்!
வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும். அத் தொன்மையான மொழியிலிருந்து
கிளைத்த மொழியே செüராஷ்டிர மொழியாகும். இம்மொழிக்கு சொந்த எழுத்து
இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம்
பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர். பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே
கொண்டுள்ளனர். ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர்.
தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும்,
தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ்
எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும்
வருகின்றனர்.
உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு,
1958-இல் செüராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத
ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
இம்மொழிக்கென வெளிவரும் "பாஷாபிமானி' எனும் மாத இதழில் தலையங்கம்
செüராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது. இம்மொழி
இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது. ஆக, செளராஷ்டிர மொழி
இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி
முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும்
ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப்
பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...!
கருத்துகள்(1)
நீலகிரிவாழ் படுகர்களும் தம் பேச்சுமொழியின்
வரிவடிவத்திற்குத் தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்! ஆனால்
ஒன்று.., படுகர்களின் பேச்சு கிட்டத்தட்ட தமிழை ஒத்தது! சௌராஷ்டிர
மொழிக்குடும்பங்கள், அய்யங்கார் என்ற அடைமொழியுடன் தமிழகத்தில் வாழ்ந்து
வருகின்றனர்! பூணூலும் அணிந்துகொள்கின்றனர்! அவர்களின் கிரந்தமொழி
மூலத்தோடு பல தமிழ்ச்சொற்கள் சிறிது திரிபுகளோடு கலந்திருப்பதை, அவர்களோடு
பேசிப்பழகும் யாரும் உணரலாம்! "தமிழும் - சௌராஷ்டிரமும் ஓர் ஒப்பாய்வு" என
யாராவது ஆய்வுகள் நடத்தி முடிவுகளை வெளியிட்டால், அது இருமொழிகளுக்குமே
பயன் உள்ளவையாக இருக்கும்!
பதிவுசெய்தவர்
சிவ.தணிகாசலம், நாமக்கல்கவிஞர் பேரவை, நாமக்கல்
08/18/2013 20:51
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக