வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தன்தொழிலால் தன்னம்பிக்கை கிடைக்கும்!

 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79113120130829013015.jpg


தன்தொழிலால் தன்னம்பிக்கை கிடைக்கும்!
 

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச த்தொழிற் பயிற்சி வழங்குவதுடன், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி த் தரும், பி.கே.செரியன்: நான், சென்னை, கிண்டி மத்திய தொழில்நுட்ப பயிற்றுனர் மைய வளாகத்தில் உள்ள, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின், துணை இயக்குனராக பணியாற்றுகிறேன்.
இங்கு, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ், 1976ம் ஆண்டு முதல், மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் தந்து, வேலைவாய்ப்பை ஏற் படுத்தி தருவதுடன், ஊக்க தொகையையும் பெற்று தருகிறோம். 40 சதவீத உடல் ஊனத்தை தாண்டியவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, 51 முதல் 70ஐ.கியூ., உள்ள, 15 முதல் 50 வயதுள்ளவர்கள் மட்டுமே, பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்யலாம். இதற்கு, மாவட்ட மண்டல மறுவாழ்வு அதிகாரியின் சான்றிதழ் தேவை. ஆண், பெண், கல்வியறிவு என, எந்த தடையுமின்றி, தங்களின் திறமையின் அடிப்படையில் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இம்மையத்தில் பதிவு செய்த மாற்றுத் திறனாளிக்கு, இலவச கணினி பயிற்சி, தட்டச்சு, "ரேடியோ, டிவி' மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல், டெய்லரிங், போட்டோகிராபி, ஸ்கிரீன் பிரின்டிங், தங்க அளவு நிர்ணயித்தல் போன்ற பயிற்சிகளை, இலவசமாகவே வழங்குகிறோம். சுய வேலைவாய்ப் பை பெற விரும்பி னால், எம்.எஸ்.எம்.ஈ., (மைக்ரோ, ஸ்மால், மீடியம் என்டர்பிரைசஸ்) மூலம் உதவுகிறோம். மாற்றுத் திறனாளிக்கு தேவைப்படும், செயற்கை கை, கால்கள், மூன்று சக்கர சைக்கிள் வண்டி, காது கேட்கும் இயந்திரம், பார்வை குறைபாட்டிற்கு தொடு உணர்வு கருவி, டேப்ரெக்கார்டர் போன்ற கருவிகளையும், இலவசமாக வழங்குகிறோம்.
எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல பெரிய நிறுவனங்களில், பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். தொடர்புக்கு: 044- 2250 1534.

1 கருத்து:

  1. வணக்கம்.இதில் பல பயன் உள்ள தகவல்களை திரட்டி வழங்கி வருகின்றீர்கள்.மற்றும் சிலர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.இது குறித்து வரும் எழும் சந்தேங்களுக்கு சமபந்தப்பட்டவர்களின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து வருகின்றீர்கள்.கூடவே அவரின் புகைப்படத்தையும் வழங்கினால் நன்றாக இருக்கும் என என் விருப்பம்.நன்றி.

    பதிலளிநீக்கு