சனி, 15 ஜூன், 2013

விழி வெண் படலத்தில் புதிய அடுக்கு

விழி வெண் படலத்தில் புதிய அடுக்கு : இந்திய அறிவியலர் கண்டுபிடிப்பு
இலண்டன் : மனித க் கண்களில் காணப்படும், விழிவெண் படலத்தில் (கார்னியா), புதிய அடுக்கு இருப்பதை, இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். மனித உறுப்புகளில் மிக முக்கியமாக கருதப்படும் கண்ணின் செயல்பாடுகள் குறித்தும், செயற்கை முறையில் கண் உருவாக்கம் குறித்தும், பிரிட்டனில் உள்ள, நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில், பல நாடுகளை சேர்ந்த ஆசவாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்ணில், கார்னியா எனப்படும் பாதுகாப்பான லென்ஸ் உள்ளது. இதன் வழியாகவே ஒளியானது, கண்ணில் ஊடுருவி செல்கிறது. இதுவரை, கார்னியாவில் ஐந்து அடுக்குகள் இருப்பதாக டாக்டர்கள் கூறி வரும் நிலையில், ஆறாவதாக புதிய அடுக்கு ஒன்றை, இந்திய விஞ்ஞானி, அரிமந்திர் துவா கண்டறிந்துள்ளார்.
இதுவரை, கார்னியல் எபிதேலியம், பொமைன்ஸ் லேயர், கார்னியல் ஸ்ட்ரோமா, டிசேமேட்ஸ் மெம்பரைன் மற்றும் கார்னியல் என்டோதெலியம் ஆகிய ஐந்து அடுக்குகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் நான்காம் அடுக்குகளுக்கு மத்தியில் ஒரு அடுக்கு இருப்பதை, துவா கண்டுபிடித்துள்ளார். இது, கார்னியாவின் மொத்த தடிமனான, 550 மைக்ரான்களில் (0.5 மி.மீ), வெறும், 15 மைக்ரான் தடிமன் கொண்டுள்ளதாக, துவா தெரிவித்துள்ளார்.
இந்த கண்டு பிடிப்பின் மூலம், கண் அறுவை சிகிச்சையில், இதுவரை ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்படும் என்றும், மிகத் துல்லியமான சிகிச்சை மூலம், கண் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும், டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய அடுக்கிற்கு, துவாவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக