http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_734047.jpg
ஆதிவாசி மக்களின் "எம்ப்ராய்டரி' வேலைப்பாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம்
பாரம்பரியம்:
நீலகிரி
மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், காட்டு நாயக்கர் என, பலவகை
பழங்குடி, ஆதிவாசி இன மக்கள் வசிக்கின்றனர். நீலகிரியின், "மண்ணின்
மைந்தர்கள்' என்ற பெருமையை பெற்ற, இவர்களின் பாரம்பரியம், பல நூறு ஆண்டுகளை
கடந்தது. இவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளில், தோடர் இன பெண்களே பூ
வேலைப்பாடுகள் செய்து கொள்வர். தவிர, பூ வேலைப்பாடுகள் நிறைந்த பல
அலங்காரப் பொருட்களையும், தோடர் இன பெண்கள் தயாரிக்கின்றனர். இவற்றை, வெளி
மார்க்கெட்டில் விற்க, சில தன்னார்வ அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.
தோடர் இன பெண்கள், குழுக்களாக இணைந்தும், பூ வேலைப்பாடுகள் நிறைந்த
பொருட்களை தயாரித்து, விற்பனை செய்தும் வருகின்றனர்.
முக்கியத்துவம்:
நீலகிரி
மாவட்டத்தில் உள்ள, "கீ ஸ்டோன்' நிறுவனம் மற்றும் தோடர் நலவாழ்வு
சங்கத்தின் முயற்சியால், தோடர் இன மக்களின் பூ வேலைப்பாடுகளுக்கு, உலகளாவிய
முக்கியத்துவத்தை தரும், சென்னை புவியியல் குறியீடு பதிப்பகம் மூலம்,
"புவியியல் குறியீடு' பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், நீலகிரி தோடர் இன
பெண்கள் செய்து வரும் பூ வேலைப்பாடு, உலகில் வேறெங்கும்
தயாரிக்கப்படுவதில்லை என, உறுதியளிக்கப்பட்டுள்ளது. தவிர, கலைநயம் மிக்க
இந்த படைப்புகளின் பட்டியலில், தோடரின பெண்களின் பூ வேலைப்பாடுகளும்
இணைந்துள்ள. இதே போன்று காஞ்சிபுரம் பட்டு, பத்தமடை பாய், நாச்சியார்
கோவில் குத்து விளக்கு, தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை போன்றவையும், புவியியல்
குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தான் சிறப்பு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக