திங்கள், 10 ஜூன், 2013

ஓலைச்சுவடிகள் குறித்த தேசியப் பயிலரங்கு

ஓலைச்சுவடிகள் குறித்த தேசியப் பயிலரங்கு

ஓலைச்சுவடிகள் மற்றும் தொல் பழங்கால எழுத்துகள் தொடர்பான இலவச தேசியப் பயிலரங்கு, ஆசியவியல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சுவடிப் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக ஆசியவியல் நிறுவன இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் தேசியப் பயிலரங்கு வரும் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை 21 நாள்கள் நடக்கின்றது. பயிலரங்கை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தொடங்கி வைக்கிறார்.
இப்பயிலரங்கில் இளம் தமிழறிஞர்கள், தமிழாய்வில் ஆர்வமுள்ள ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள், மலேசியர்கள், சீனர்கள், மோரீசியஸ் நாட்டினர் என பல்வேறு வெளிநாட்டவர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
பண்டைய எழுத்துகளின் வளர்ச்சி, பிராமி, கிரந்த எழுத்துகள், வட்டெழுத்து, சாரதா எழுத்து, சுவடிப் படிப்பு, சுவடிப் பாதுகாப்பு, கல்வெட்டு, சுவடிகளை கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும், 40-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். பயில்வோருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பயிலரங்கில் பங்கேற்க, ஆசியவியல் நிறுவனத்தை 9840526834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக