புதன், 12 ஜூன், 2013

97 அகவையில் பட்டம் பெற்ற முன்னாள் படைஞர்

97 அகவையில் பட்டம் பெற்ற முன்னாள் படைஞர்


நியூயார்க்கு: அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போர் முன்னாள் வீரர் 80 ஆண்டுகளுக்கு பின்னர் டிப்ளமோ பட்டம் பெற்றது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வடக்கே வாட்டர்டவுண் பகுதியைச் சேர்ந்தவர் பிரரெடரிக் கிரே (97), இவர் கடந்த 1934-ம் ஆண்டு ,வாட்டர் டவுண்பள்ளியில் சேர்ந்தார். ஒரு வருடம் படித்தார்.
எனினும் குடும்ப பிரச்னையால் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டார். 1942-ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் 24-வது இன்ஃபான்ட்ரி படைப்பிரிவில் ‌பணியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் , முக்கிய பங்காற்றிய கிரே, ஓய்வுபெற்றார்.எனினும் தன்னுடைய ஆசை எப்படியாவது படித்து பட்டம் வாங்கிடவேண்டும் என்பது தான்.
ஓய்வு பெற்ற பின்னர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாலும், பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்து ஒருவழியாக பட்டம் (டிப்ளமோ) பெற்றார்.நேற்று அப்பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பள்ளி நிர்வாகம் வழங்கி கெளரவித்தது. இது குறித்து பிரரெடரிக் கிரேகூறுகையில், 80 ஆண்டுகளுக்குபின்னர் தனது ஆசை நிறைவேறிவிட்டது என்றார். 97 வயதிலும் இடைவிடாத முயற்சியால் பட்டம் (டிப்ளமோ) பெற்றது பலரையும் அதிசயிக்க வைத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக