சனி, 15 ஜூன், 2013

திட்டமிட்டு ஆர்வத்துடன் படித்தேன்!

திட்டமிட்டு ஆர்வத்துடன் படித்தேன்!

ஆசிரியர் தகுதி த் தேர்வுக்கு த் தயாராகும் வழிமுறைகளை க் கூறும், கடந்தாண்டு முதலிடம் பெற்ற, திவ்யா: நான், 2012 ஜூலை மாதம் நடைபெற்ற, ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில்,150க்கு, 122 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில், முதலிடம் பிடித்தேன். ஆசிரியர் பணி ஆணை பெற்று, உடுமலைப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில், கணிதஆசிரியராக பணியாற்றுகிறேன். தற்போது, தேர்வுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளதால், பலர் தயாராகி வருகின்றனர்.முதலில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை, நமக்கு இருப்பது அவசியம். ஏனெனில், நம்மை விட, சிறிய வயது மாணவர்கள், படித்து வெற்றி பெற்றபாடங்களிலிருந்தே, தேர்வுக்கான கேள்விகள் வரும். இத்தேர்வு, ஆசிரியர் பணிக்கான அடித்தளத்தை தருவதால், முழு விருப்பத்தோடு படிக்க வேண்டும். தமிழில், செய்யுள், பாடல்கள்எழுதியவர்களின் பெயர், புனை பெயர்களில் எழுதிய, மற்ற நூல்கள் எவை என, தெரிய வேண்டும். உரைநடை மற்றும் இலக்கண பகுதியிலும், கவனம் அவசியம். ஆங்கிலத்தில், இலக்கணம் மற்றும் பாடப் பகுதியில் உள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை, புரிந்து படிக்க வேண்டும். 8லிருந்து, 10ம் வகுப்பு வரையுள்ள கணக்குகள், கொஞ்சம் கஷ்டமாக இருப்பதால், அடிக்கடி போட்டு பழகுவது அவசியம். அறிவியலில், முக்கிய விதிகள், விஞ்ஞானிகளின் பெயர்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் முக்கியமானதை, அடிகோடிட்டு படிப்பதுநல்லது. சமூக அறிவியலில், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தலைநகரங்கள், நிகழ்வுகள், ஆண்டுகள், முக்கிய போர்கள், அரசர்களின் ஆட்சி பகுதிகளை, நினைவில் வைப்பதுநல்லது. பொருளாதாரம், குடிமையியல், புவியியலை தனித்தனியே குறிப்பெடுத்து படிக்க வேண்டும். உளவியலில், ஒரு சூழ்நிலையை கொடுத்து, அதற்கு சிந்தித்து பதிலளிப்பதால்,இதை படிக்காமல் இருக்க கூடாது. தேர்வுக்கு தயாராக, கால அவகாசம் இருப்பதால், திட்டமிட்டு ஆர்வத்துடன் படித்தால், எளிதில் வெற்றி பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக