செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டை - இணையத் தளத்தின் மூலம்

ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டையை இணைய த் தளத்தின் மூலம் பெற எளிய வழி
 
ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டையை இணையதளத்தின் மூலம் பெற எளிய வழி
 
ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள், இணையதளத்தின் மூலம், நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதனை விண்ணப்பதாரர், அரபி அல்லது ஆங்கில மொழியில் நிரப்பி, அந்நாட்டின் அரசாங்க அலுவலகத்திற்கு அனுப்பிவிடலாம்.
 
இதற்கு முன்னர், விண்ணப்பங்கள் டைப் செய்யப்பட்டதால், ஒவ்வொரு முறையும் அரபு பண மதிப்பில் 30 திராம் செலவழிக்க வேண்டியிருந்தது. இதனைத் தவிர்ப்பதால், ஆண்டிற்கு 120 கோடி திராம் சேமிக்கப்படும் என்று இத்துறையின் நிர்வாக இயக்குனர், அலி அல் கவுரி தெரிவித்துள்ளார்.
 
பழைய அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கும், புதிய அட்டை பெறுவதற்கும், 40 நாட்கள் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில், சுமார் 40,000 பேர் இம்முறையினால் பயனடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். சென்ற முறை வெளியிட்டிருந்த விண்ணப்ப படிவத்தை விட புதிய படிவம் எளிதானது என்றும், பத்து வரிகளிலேயே இதனை நிரப்பிவிடமுடியும் என்றும் அவர் விளக்கம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக