திங்கள், 15 ஏப்ரல், 2013

சித்திரைப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் வழங்கினார்

சித்திரைப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் வழங்கினார்









தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு, கம்பர், உ.வே.சா, கபிலர் விருதுகளை பெருமக்களுக்கு இன்று வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று (15.04.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழுக்கு நற்தொண்டாற்றிவரும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு 2013-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினையும், கவிஞர் முத்துலிங்கத்துக்கு கபிலர் விருதினையும், பேராசிரியர் ம.வே.பசுபதிக்கு உ.வே.சா விருதினையும், முனைவர் பால.இரமணிக்கு கம்பர் விருதினையும், முனைவர் ம.லோகநாயகிக்கு சொல்லின் செல்வர் விருதினையும் வழங்கினார்.
கடந்த 2012-ஆம் ஆண்டில், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காத்து, தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றை போற்றி வளர்த்திடும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் / குழுமங்கள் போன்ற  அமைப்புகளை உருவாக்கி சிறப்பாக செயல்படச் செய்வதை  ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த்தாய் விருதினை ஏற்படுத்தினார் முதல்வர்.
இவ்வாண்டு (2013)க்கான தமிழ்த்தாய் விருதை புது டெல்லியில் சிறப்புடன் தமிழ்ப் பணியாற்றி வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கி, விருதுக்கான தொகை 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன், இணைச் செயலாளர் பி.இராகவன் ஆகியோரிடம் முதல்வர் வழங்கினார்.
கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கபிலர் விருதை, மரபுச் செய்யுள் மற்றும் கவிதைப் படைப்புகளைப் புனைவதில் வல்லவரான கவிஞர் முத்துலிங்கத்துக்கும், உ.வே.சா விருதை, ஓலைச் சுவடிகள் அரிய கையெழுத்துப் படிகள் மற்றும் கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ம.வே.பசுபதிக்கும், இவ்வாண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கம்பர் விருதை, கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பி வரும் தமிழறிஞரான முனைவர் பால. இரமணிக்கும், சொல்லின் செல்வர் விருதை, சிறந்த இலக்கியப் பேச்சாளரான முனைவர் ம. லோகநாயகிக்கும் முதல்வர் இன்று வழங்கினார். முதல்வரிடமிருந்து  விருதாளர்கள் ஒவ்வொருவரும் விருதுக்கான தொகை ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதிச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

4 தமிழ் அறிஞர்களுக்கு  ச் செயலலிதா விருது வழங்கினார்
 
4 தமிழ் அறிஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார்
சென்னை, ஏப்.15-

தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 4 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளையும், டெல்லி தமிழ்ச்சங்த்துக்கு தமிழ் தாய் விருதும் வழங்கி கவுரவித்தார். சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகத்தில் 2 வாரம் நடைபெற உள்ள சித்தரை தமிழ் புத்தாண்டு புத்தக திருவிழாவையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டில், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காத்து, தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றை போற்றி வளர்த்திடும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள், குழுமங்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கி சிறப்பாக செயல்படச் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் விருதினை ஏற்படுத்தினார்.

அதன்படி இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், இவ்வாண்டு (2013)க்கான தமிழ்த்தாய் விருதை இந்தியத் தலைநகராம் புதுடெல்லியில் சிறப்புடன் தமிழ்ப்பணியாற்றி வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கி, விருதுக்கான தொகை 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன், இணைச் செயலாளர் பி.இராகவன் ஆகியோரிடம் வழங்கினார்.

கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கபிலர் விருதை மரபுச் செய்யுள் மற்றும் கவிதைப் படைப்புகளைப் புனைவதில் வல்லவரான கவிஞர் முத்துலிங்கத்துக்கும், உ.வே.சா. விருதை ஓலைச் சுவடிகள் அரிய கையெழுத்துப் படிகள் மற்றும் கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் பேராசிரியர் ம.வே.பசுபதிக்கும், இவ்வாண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கம்பர் விருதை, கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பி வரும் தமிழறிஞரான முனைவர் பால.இரமணிக்கும், சொல்லின் செல்வர் விருதை, சிறந்த இலக்கியப் பேச்சாளரான முனைவர் ம.லோகநாயகிக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

முதல்-அமைச்சரிடம் இருந்து விருதாளர்கள் ஒவ்வொருவரும் விருதுக்கான தொகை ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதிச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

முதல்-அமைச்சர் தொடர்ந்து, சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகத்தில் இரண்டுவார காலம் நடைபெற உள்ள சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவினை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் நூலில் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமப் பொறுப்பாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக