எளிய வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எளிய வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

இற்றை நாள் உடனடித் தொடரி முன்பதிவு - எளிய வழி

தட்கல் ரயில் டிக்கெட்- ஈஸியாக முன்பதிவு செய்ய !

arasiyaltodayவெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டை - இணையத் தளத்தின் மூலம்

ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டையை இணைய த் தளத்தின் மூலம் பெற எளிய வழி
 
ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டையை இணையதளத்தின் மூலம் பெற எளிய வழி
 
ஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள், இணையதளத்தின் மூலம், நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதனை விண்ணப்பதாரர், அரபி அல்லது ஆங்கில மொழியில் நிரப்பி, அந்நாட்டின் அரசாங்க அலுவலகத்திற்கு அனுப்பிவிடலாம்.
 
இதற்கு முன்னர், விண்ணப்பங்கள் டைப் செய்யப்பட்டதால், ஒவ்வொரு முறையும் அரபு பண மதிப்பில் 30 திராம் செலவழிக்க வேண்டியிருந்தது. இதனைத் தவிர்ப்பதால், ஆண்டிற்கு 120 கோடி திராம் சேமிக்கப்படும் என்று இத்துறையின் நிர்வாக இயக்குனர், அலி அல் கவுரி தெரிவித்துள்ளார்.
 
பழைய அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கும், புதிய அட்டை பெறுவதற்கும், 40 நாட்கள் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில், சுமார் 40,000 பேர் இம்முறையினால் பயனடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். சென்ற முறை வெளியிட்டிருந்த விண்ணப்ப படிவத்தை விட புதிய படிவம் எளிதானது என்றும், பத்து வரிகளிலேயே இதனை நிரப்பிவிடமுடியும் என்றும் அவர் விளக்கம் கூறினார்.