செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பை பரிசுத் தொகை; முதல்வர் வழங்கினார்

வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பை பரிசுத் தொகை; முதல்வர் வழங்கினார்

இன்று (16.4.2013) தலைமைச் செயலகத்தில், “முதலமைச்சர் கோப்பைக்கான” விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 710 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்கும் முகமாக, முதற்பரிசு பெற்ற 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ``முதலமைச்சர் கோப்பை’’களையும், முதற்பரிசுத் தொகையான தலா 1 லட்சம் ரூபாய்கான  காசோலைகளையும் வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள கூடிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உருவாகுவதை ஊக்குவிக்கவும், அவ்வாறு விளையாட்டுத் திறன் கொண்டுள்ள  இளம் வீரர்களை அவரவரது திறன் சார்ந்த  விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபடுத்தவும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்த முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் பொது மக்களிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து அதன் மூலம் வெற்றி பெற்று,  புகழ் ஈட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிட செய்வதுமாகும்.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்து பந்து, நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் மாவட்ட அளவில் நவம்பர், டிசம்பர் 2012 மற்றும் ஜனவரி 2013 ஆகிய மாதங்களில், தமிழகத்தின் அனைத்து   மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாநில அளவில் தடகளம், நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ்,  இறகுப்பந்து மற்றும் குழுப் போட்டிகளான கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கபடி ஆகிய போட்டிகளில் முதல் இடம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா  1 லட்சம் ரூபாய்; இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் வென்றவர்களுக்கு  தலா 25 ஆயிரம் ரூபாய்; குழுப் போட்டிகளில் நான்காம் இடம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 710 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்க அனுமதியளித்து, முதல்வர் ஆணையிட்டிருந்தார்.
அதன்படி இன்று (16.4.2013) பல்வேறு போட்டிகளில் முதற் பரிசு பெற்ற 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பைகளையும், முதற்பரிசுத் தொகையான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் முதல்வர் வழங்கி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று வாழ்த்தினார். தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த அளவுக்கு அதிகபட்ச பரிசுத் தொகை வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து எதிர்வரும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களது திறனை மேம்படுத்தும் வகையில் அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விஞ்ஞான ரீதியில் சிறப்பு பயிற்சி பெறவும், உயர்தர விளையாட்டுக் கருவிகள் மற்றும் பயிற்சிக் கருவிகள் வாங்கிடவும், உயர்சத்து செறிவுள்ள உணவுப் பொருட்களைத் தருவித்துக் கொள்ளவும்,  விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக தலா 25 லட்சம் ரூபாய்  அரசு உதவி பெற்றுக் கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி, தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான - தடகள (நீளம் தாண்டுதல்) விளையாட்டு வீரர் கே. பிரேம்குமார், தடகள (100 மீட்டர் தடை ஒட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல்) விளையாட்டு வீராங்கனை கோ. காயத்திரி, நீச்சல் விளையாட்டு வீராங்கனை ஏ.வி. ஜெயவீனா, பாய்மர படகோட்டுதல் விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், மேசைப்பந்து விளையாட்டு வீரர் க. சத்யன் ஆகியோர் இந்த சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் இன்று இந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்கள்.

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு ப் போட்டி: வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ச் ஜெயலலிதா பரிசு த் தொகை வழங்கினார்
 
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஜெயலலிதா பரிசு தொகை வழங்கினார்
சென்னை, ஏப். 16-

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி க் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உருவாகுவதை ஊக்குவிக்கவும், அவ்வாறு விளையாட்டுத் திறன் கொண்டுள்ள இளம் வீரர்களை அவரவரது திறன் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபடுத்தவும், மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் பொது மக்களிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து அதன் மூலம் வெற்றி பெற்று, புகழ் ஈட்டி மற்றவர்களுக்கு வழி காட்டியாக விளங்கிட செய்வதுமாகும்.

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் மாவட்ட அளவில் நவம்பர், டிசம்பர் 2012 மற்றும் ஜனவரி 2013 ஆகிய மாதங்களில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாநில அளவில் தடகளம், நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து மற்றும் குழுப் போட்டிகளான கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபடி ஆகிய போட்டிகளில் முதல் இடம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய்; இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய்;

மூன்றாம் இடம் வென்றவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்; குழுப் போட்டிகளில் நான்காம் இடம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 710 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்க அனுமதியளித்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.

அதன்படி இன்று பல்வேறு போட்டிகளில் முதற்பரிசு பெற்ற 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் கோப்பைகளையும், முதற்பரிசுத் தொகையான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று வாழ்த்தினார்.

தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த அளவுக்கு அதிகபட்ச பரிசுத் தொகை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து எதிர்வரும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களது திறனை மேம்படுத்தும் வகையில் அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும்,

விஞ்ஞான ரீதியில் சிறப்பு பயிற்சி பெறவும், உயர்தர விளையாட்டுக் கருவிகள் மற்றும் பயிற்சிக் கருவிகள் வாங்கிடவும், உயர்சத்து செறிவுள்ள உணவுப் பொருட்களைத் தருவித்துக் கொள்ளவும், விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக தலா 25 லட்சம் ரூபாய் அரசு உதவி பெற்றுக் கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான - தடகள (நீளம் தாண்டுதல்) விளையாட்டு வீரர் கே. பிரேம்குமார், தடகள (100 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல்) விளையாட்டு வீராங்கனை செல்வி கோ. காயத்திரி, நீச்சல் விளையாட்டு வீராங்கனை செல்வி ஏ.வி. ஜெயவீனா, பாய்மர படகோட்டுதல் விளையாட்டு வீராங்கனை செல்வி ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், மேசைப்பந்து விளையாட்டு வீரர் க. சத்யன் ஆகியோர் இந்த சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று இந்த 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து முதல்-அமைச்சர் கோப்பைகள், பரிசுத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பளிப்பு ஆணைகளை பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் கோப்பைகள், பரிசுத்தொகை மற்றும் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக