வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வேதியல் உரம் வேண்டா

இரசாயன உரம் வேண்டா

விவசாயத்திற்கு, ரசாயன உரங்களுக்கு மாற் றாக, இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாம்மயன்: இயற்கை விவசாயத்தின் நன்மை மற்றும் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமை பற்றி, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, "தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம்' மூலம், இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். தற்போது, இதன் செயலராக இருக்கிறேன். பயிரின் விளைச்சலை நிர்ணயிப்பது, அந்நிலத்தின் மேல்மண் பகுதி. ஆனால், அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மேல்மண்ணின் உயிரோட்டம் பாதிக்கப்படுகிறது. பயிர்கள் செழித்து வளர, "நைட்ரஜன்' எனும் தழைச்சத்து, "பாஸ்பரஸ்' எனும் மணிச்சத்து, "பொட்டாஷ்' எனும் சாம்பல்சத்து கிடைப்பதற்கு, விவசாயிகள், "யூரியா' போன்ற ரசாயன உரங்களை பயன்படுத்துவர். இந்த உரங்களில் உள்ள நைட்ரேட், மழைக்காலங்களில் நீரால் அடித்துச் செல்லப்பட்டு, நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. விளைநிலத்தில், பயிர்களுக்கு நன்மை மற்றும் தீமை செய்யும் இரண்டு பூச்சிகள் இருக்கின்றன. ஆனால், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் போது, நன்மை செய்யும் பூச்சிகளும் இறக்கின்றன. எருக்கு, வேம்பு, நொச்சி போன்ற மூலிகை பூச்சி விரட்டிகள் மூலம், தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பயிர்களுக்கு தேவை யான சத்துக்களை, ரசாயன உரங்கள் மட்டுமே தருவதில்லை. அதற்கு இணையாக, இயற்கை பொருட்கள் வழியாகவும் இச்சத்துக் களை பெற முடியும். மண்ணின் ஈரப் பதத்தை அதிகரிக்க, மூடாக்கு போடுதல், பயிர் சுழற்சி முறை, கலப்புப் பயிர் முறை என, பல வழிகள் உள்ளன. "அசொஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம்' போன்ற, இயற்கையான வேளாண் இடுப்பொருட்களும் கடைகளில் கிடைக்கின்றன. காட்டில் வாழும் மரம் மற்றும் செடிகளுக்காக, யாரும் களையெடுத்து, உரமிடுவதில்லை. மரத்திலிருந்து விழும் பட்டைகள், இலைத்தழைகள் மண்ணில் புதைந்து மூடாக்காக மாறி, மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, நுண்ணுயிரிகள் பெருகுவதே இயற்கை வேளாண்மை. இதனால், விளைச்சலும் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக