ஏற்றம் காட்டும் "அலைபேசி க் குரல்கள்': தேனியில் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்
போடி : தேனி மாவட்டம், போடி அருகே கிராமத்து பெண்கள்
"மொபைல் போன் வாய்ஸ்' அடிப்படையில் ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர்.
இவர்களிடம் ஆலோசனை பெற, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
போடி அருகே சின்னபொட்டிபுரம், ராசிங்காபுரம், மணியம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில், பெண்கள் ஆடு, மாடுகளை மேய்க்கின்றனர். உழைப்பிற்கேற்ற பயனை பெறும் வகையில், ராசிங்காபுரத்தை சேர்ந்த "விடியல்' தன்னார்வ தொண்டு நிறுவனம் இவர்களுக்குவழிகாட்டியுள்ளது. இதன் நிறுவனர் காமராஜ் கெப்பன், மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்துள்ளார்.57, உறுப்பு நாடுகளை கொண்ட, காமன்வெல்த் ஆப் லேர்னிங் அமைப்பில்,குழு பெண்களை இணைத்துள்ளார். தகவல் தொழில் நுட்பத்துடன், வாழ்நாள் கல்வியில் சேர்ந்து(இப்கோ கிசான் சன்சார் லிமிடெட்) ஏர்டெல் கிரீன் சிம்கார்டு உதவியுடன், " மொபைல் போன் வாய்ஸ்' மூலம் ஆடு, மாடுகளை இவர்கள் வளர்க்கின்றனர். ஆடு, மாடுகளுக்கு வரும், அம்மை நோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் வராமல் தடுப்பது எப்படி. தடுப்பூசி போட்டு நோய்களை குணப்படுத்துவது மற்றும் அதற்கான உணவு வகைகள், அதன் எடை, உயரம், எவ்வளவு இருக்க வேண்டும். தக்க வளர்ச்சிக்கு, தேவையான உணவு வகைகள் கொடுப்பது, போன்ற தகவல்களை "வாய்ஸ் மொபைல் போன்' பயன்படுத்தி எளிதாக பெறுகின்றனர்.எழுதப்படிக்க தெரியாத, 33 சுயஉதவி குழுக்களில் உள்ள 300 பெண்களுக்கு, வங்கி கடன் மூலம், நபர் ஒருவருக்கு 9 ஆடுகள், ஒரு கிடா, ஒரு மொபைல் போனுடன், 43 ஆயிரத்தி 500 ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.கடனை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டும்.
ஆடு மாடுகளை வளர்த்து, கடனை 2 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தி விட்டனர் இப்பெண்கள். அத்துடன் ஒவ்வொருவரும், ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளனர். விடியல் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும்,விடிவெள்ளி கூட்டமைப்பில் உள்ள இப்பெண்களுக்கு பெரும்பாலும் எழுத, படிக்க தெரியாது. இதில் உள்ள பெண்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 30 க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வருகின்றனர். வெளிப்பழக்கம், போன் தொடர்பு அதிகரித்துள்ள நிலையில் இன்று சர்வ சாதரணமாக வங்கிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த, "மொபைல் போன் வாய்ஸ்', கல்வியறிவு இல்லாத பெண்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னம்பிக்கையை வளர்த்து, ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. இதனை கண்டு, "காமன்வெல்த் ஆப் லேர்னிங்' உறுப்பு நாடுகள், ஆடு வளர்ப்பை தங்களது நாடுகளில் அறிமுகப்படுத்த வேண்டும், என்ற ஆவலில் நியூ கினியா, மொரீஷியஸ், கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இக்கிராமத்திற்கு வந்து, தகவல்களை பெற்று செல்கின்றனர். மொபைல் போன் வாய்ஸ் மூலம் ஆடு வளர்ப்பது குறித்து, கனடா நாட்டிற்கு சென்று படிப்பறிவு இல்லாத இக்கிராமத்து பெண்கள் பேசியுள்ளனர். செல்ல முடியாத நிலையில், வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றியுள்ளனர். "மொபைல் போன் வாய்ஸ்' மூலம், ஆடு வளர்ப்பது மட்டுமின்றி, படிப்பறிவு இல்லாத பெண்களின் தன்னம்பிக்கை, கல்வி அறிவை வளர்த்து, பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் 300 நபர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட மொபைல் போன் வாய்ஸ், தற்போது 3000 நபர்களை எட்டியுள்ளது.இப்பெண்கள் கூறுவது என்ன...
*எஸ்.வளர்மதி: நான்காம் வகுப்பு படித்துள்ளேன். ஆரம்பத்தில் ஆடு வளர்ப்பு கஷ்டமாக இருந்தது. வங்கி கடன் பெற்று 6 ஆண்டுகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். நல்ல வருமானம் கிடைக்கிறது. தரகர்கள் மூலம் ஆடுகள் விற்பதை தவிர்த்து, இனி எங்கள் கூட்டமைப்பின் மூலம் வெளி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஆட்டுப்பாலை பாக்கெட் போட்டு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
*ஏ.திலகவதி: ஆடு வளர்ப்தால்,எங்கள் கையில் ஏ.டி.எம்., கார்டு உள்ளது போல சந்தோஷமாக உள்ளது. மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடுவதற்கு ஆட்டுப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஆட்டுப்பால் 100 மில்லி ரூ. 20 க்கு விற்பனை செய்கின்றோம். இதில் கிடைக்கும் வருமானம், எங்களுக்கு மன நிறைவை தருகிறது.
*டி.சொர்ணமணி : நானும், எனது கணவரும் 14 ஆண்டுகளாக ஆடுவளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றோம். கேரளாவில் இருந்து வியாபாரிகள் 15 கிலோ கொண்ட ஆட்டு சாண பெட்டி 25 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். இனி எங்களது கூட்டமைப்பின் மூலம், நாங்களே சாணத்தை மொத்தமாக சேகரித்து, இயற்கை உரமாக்கி விற்பனை செய்ய உள்ளோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக