ஓவியமாக த் தீட்டப்பட்ட தமிழ் எழுத்து : கல் உடைக்கும் தொழிலாளி அருவினை
சேலம்: தமிழ் எழுத்துகளை, தூரிகையால், ஓவியமாக தீட்டி, சாதனை
படைத்துள்ளார் கல் உடைக்கும் தொழில் செய்யும் வாலிபர்.சேலம் மாவட்டம்,
ஓமலூர் அடுத்த களரம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் நாராயணசாமி, 24. இவர்
தாய் ராஜாத்தி. தாய், மகன் இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,
தொரப்பள்ளி கிராமத்தில் தங்கி, கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர்.வேலை நேரம் தவிர்த்து, நாராயணசாமி, தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலையில், பி.காம்., படித்து வருகிறார். தமிழில் உள்ள, 247
எழுத்துக்களை, 247 அடி பேனரில் எழுதி, சாதனைக்கு விதை போட்டுள்ளார்.
இதுகுறித்து, நாராயணசாமி கூறியதாவது:சிறு வயதிலேயே தந்தையை இழந்த நான், வறுமையால், மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்க முடியவில்லை. எனினும், படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஊற்றெடுத்தது. என் தாத்தா பெரமச்சி வழிக்காட்டுதல்படி, அரிச்சுவடு வாங்கி, தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க கற்றுக் கொண்டேன். காலப்போக்கில், தமிழ் எழுத்துக்கள், 247ம் மனப்பாடம் செய்த பின், குறிப்பிடும் தமிழ் எழுத்தின், முன், பின் உள்ள எழுத்துக்களை, முறை பிறழாமல், சொல்லுவதில் தேர்ச்சி பெற்றேன். அதையடுத்து, "நன்றி' என்ற வார்த்தையை, ஒரு மி.மீ., அளவில் எழுதி, 11.11.2011 அன்று, "நன்றி என்றும் மறவாதே' என விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். அன்று முதல், நன்றி நாராயணசாமி என அழைக்கப்பட்டேன்.
தமிழில் மொத்தமுள்ள, 247 எழுத்துக்களையும், 247 அடி, அளவு பேனரில் ஓவியமாக தீட்டினேன். அதில், தமிழ் எழுத்து, 3.33 லட்சத்து, 333 முறையும், 247 தமிழ் எழுத்துக்கள், 9.99 லட்சத்து, 999 முறையும் இடம் பெற்றுள்ளன.இந்த பேனரை, 100 அடி தொலைவில் நின்று பார்த்தால், "தமிழ்' என்ற மூன்றெழுத்து மட்டும் தெரியும். 40-50 அடி தொலைவில் இருந்து பார்த்தால், 247 எழுத்துக்கள், 247 சதுரஅடி ஓவியமாக தெரியும். அருகில் சென்று பார்த்தால், எல்லா எழுத்துக்களும், தமிழ், தமிழ் என்றே தெரியும். இந்த எழுத்து சாதனைகள், 13 அடி உயரம், 19 அடி அகல பேனரில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக