ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வன்முறையைத் தடுக்க!


இரட்டிப்புமகசூல்!

விவசாயிகளுக்கு, அரசின் மானியத்தோடு, அதிக லாபம் தரும், மாம்பழ சாகுபடியின் புதிய முறையை கூறும், திரவியம்: நான், தென்காசி தோட்டக் கலையில், உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். தொடர்ந்து மழையின் அளவு குறைவது, மா மரத்தில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல் போன்ற குறைகளை நீக்கவும், மா சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் உற்பத்தியை பெருக்குவது என்ற நோக்கிலும், தேசிய தோட்டக்கலை இயக்கம், "மா அடர் நடவு' என்ற, புதிய மா சாகுபடி முறையை அறிமுகபடுத்தியுள்ளது.

இம்முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு, முதலாம் ஆண்டு, 24 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டு, 8,000 ரூபாயும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேரில், 100 மாங்கன்றுகளை மட்டுமே நட்டு வளர்க்க முடியும் என்ற நிலையை மாற்றி, 400 செடிகளை இம்முறையில் வளர்க்க முடியும்.

மா சாகுபடிக்கு, வடிகால் வசதியுள்ள செம்மண் ஏற்றது. அல்போன்சா, பங்கனபள்ளி, சேலம், மல்லிகா போன்ற மா ரகங்களே, தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. ஆடி முதல் மார்கழி வரை, மா கன்றுகளை நடவு செய்யலாம். வாங்கி வந்த மாங்கன்றுகளை உடனே நடவு செய்யாமல், நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பைகளில் இட்டு, நீர் தெளித்து, புதிய தளிர்கள் வரும் வரை, நிழலில் வைத்த பின்னரே, நடவு செய்ய வேண்டும்.
மாங்கன்றுகளுக்கு, தேவையான காலங்களில் உரமிடுவது, நோய் தாக்கிய மற்றும் காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு, சூரிய வெளிச்சமும், காற்றும், மரக் கிளைகளுக்கு கிடைக்கச் செய்வது, மா மரம் பூக்கும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கிகள் தெளிப்பது போன்ற செயல்களில், அதிக கவனம் தேவை.மாங்காய்கள், 80 சதவீதம் முற்றிய பின்னரே, அறுவடை செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கான மாங்காய்களை சேதமில்லாமல் பறிக்க வேண்டும். மற்ற முறைகளில் ஒரு ஹெக்டேருக்கு, 12 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். ஆனால், இம்முறையில், 20 முதல், 25 டன் மாங்காய்களை, அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

வன்முறையை த் தடுக்கணும்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து, ஐ.நா., சபையில் பேசிய, 13 வயது மாணவி சொர்ணலட்சுமி: நான், சென்னை லிட்டில் பிளவர் கான்வென்டில், 9ம் வகுப்பு படிக்கிறேன். பிறக்கும் போதே கண் பார்வை இல்லாமல் பிறந்தேன். நான் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், தன்னம்பிக்கை மற்றும் உலக அறிவுக்கான கருத்துக்களை சொல்லியே, பெற்றோர் வளர்த்தனர். படிப்பது, கீ போர்ட் வாசிப்பது, செஸ் விளையாடுவது என, அனைத்திலும் கவனம் செலுத்தினேன்.

மொத்தம், 6,000 குழந்தைகள் உறுப்பினராக உள்ள, "தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி குழந்தைகள் பாராளுமன்றம்' என்ற குழந்தைகள் அமைப்பில் சேர்ந்தேன். உலகில் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்புகளில், சிறந்த அமைப்பு என, 2009ம் ஆண்டு, "யுனிசெப்' வழங்கும், "சான் மெரினோ-யுனிசெப்' விருதை, எங்கள் அமைப்பு வென்றுள்ளது.
"தானே' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் எண்ணத்தில், ஒவ்வொரு குழந்தைகளிடமும், ஒரு ரூபாய் வீதம் என, 7,000 ரூபாய் வசூல் செய்து, "தானே' புயலால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுத்தேன். இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின், குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எப்படி ஒழிப்பது என, ஆராய்வதற்கான கூட்டம், நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., சபை அரங்கில் நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குழந்தைகள் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினேன்.பின்லாந்தின், ஐ.நா., பிரதிநிதியான ஜோர்மா பவ்டு என்பவர், குழந்தைகள் பாராளுமன்றத்தை தங்கள் நாட்டிலும் அமைக்க முயற்சிப்பதாக கூறினார்.என் ரோல் மாடலாக, விவேகானந்தரை பின்பற்றுகிறேன். ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, என் எதிர்கால லட்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக