செவ்வாய், 16 ஏப்ரல், 2013

கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க உச்ச மன்றத்தை அணுகத் " தெசோ' முடிவு



கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க உச்ச மன்றத்தை  அணுகத்  " தெசோ' முடிவு


சென்னை:"கச்சத்தீவு ஒப்பந்தத்தை முறிக்கவும், இந்தியாவின் ஒரு பகுதி என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்' என, "டெசோ' அமைப்பு அறிவித்துள்ளது.

டெசோ அமைப்பின் சார்பில், கலந்துரையாடல் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவை பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.

எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை, டெசோ அமைப்பு அணுகும். காரைக்காலை சேர்ந்த, 26 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டு, அவர்களின் சிறைக்காவல், இம்மாதம், 19ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில், மத்திய அரசு ஈடுபட வேண்டும். டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம், இம்மாதம் 24ம்தேதி, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. அதில், கருணாநிதி மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

2 கருத்துகள்:

  1. Is he joking

    When a piece of land given to Srilanka by the then Indira Gandhi under the auspicious presence of Tamil Ena Mana Thalivar Dr Kalingar then how Mr,Cho can bring the piece of Land into India.

    பதிலளிநீக்கு
  2. டெசோ(TESO)அமைப்பின் தீர்மானம். இவ்வமைப்பின் தலைவர் காவிரி தொடர்பில் வழக்கு வெற்றியடைந்திருப்பதால் இப்பொழுது கூறுகிறார். ஆனால், அதிகாரத்தில் இருந்த பொழுது அந்த எண்ணம் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    பதிலளிநீக்கு