புதன், 9 ஜனவரி, 2013

கழிவுகளை மனிதர் அள்ளும் அவலம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

கழிவுகளை மனிதர் அள்ளும் அவலம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

கழிவுகளை மனிதர் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டத்தை  இயற்றத் தவறியதற்காக, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்எல் தட்டூ, சி.கே. பிரசாத் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றுவது மற்றும் சாக்கடைக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில் இயற்றப்படும் எனப் பலமுறை உறுதியளிக்கப்பட்டும் இதுவரை அதைச் செயல்படுத்தாதற்காக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. சமூக நீதி மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளது என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக