செவ்வாய், 8 ஜனவரி, 2013

மருந்தில் விளையாடாதீர்கள்

சொல்கிறார்கள்

மருந்து விசயத்தில் விளையாடாதீள்!
குழந்தை நல மருத்துவர் சுப்ரமணியம்: குழந்தைகளுக்கு நோய் கள் வர முக்கிய காரணமே, "இன்பெக்ஷன்ஸ்' தான். 75 சதவீத, "இன்பெக்ஷன்ஸ்' தானாகவே சரியாகி விடும். குழந்தை கஷ்டப்படாமல் இருக்கவே, மேற்கொண்டு மருந்து கொடுக்கிறோம். இந்த மருந்துகள், எந்த அளவுக்கு கொடுக்க வேண்டும் என, மருத்துவருக்குத் தெரியும். அது புரியாமல், பெற்றோர், "குழந்தைக்கு இன்னும் சரியாகலை; வேற மருந்துகள் கொடுங்க' என, கேட்கக் கூடாது. ஒரு குழந்தைக்கு கொடுத்த மருந்தை, இன்னொரு குழந்தைக்கு, அதே உடல் பாதிப்பு இருந்தாலும் கூட, கொடுக்கக் கூடாது; அதே குழந்தைக்கே கூட, மறுபடி அந்த மருந்தை கொடுக்கக் கூடாது.

சிலருக்கு, "சிவியரா' வந்திருக்கலாம். அதே மருந்தாக இருந்தாலும், அதே வியாதியாக இருந்தாலும், டாக்டரைக் கேட்டுக் தருவது நல்லது. டாக்டர் எழுதும் மருந்தும், நீங்கள் தரும் மருந்தும் சரி தானா என, "செக்' பண்ணிய பிறகு, தருவது நல்லது. உதாரணத்திற்கு, ஏற்கனவே, வீட்டில் இருக்கும் பாரசிட்டமால் சொட்டு மருந்தை, காய்ச்சல் கண்ட குழந்தைக்குத் தரக் கூடாது. கொடுக்க வேண்டிய மருந்தின் அளவையும், டாக்டர் தான் முடிவு செய்வார். டாக்டர் பரிந்துரைப்படி, ஐந்து நாள் மருந்து கொடுத்தும், உடல் சரியாகவில்லை என்றால், டாக்டரிடம் தான் செல்ல வேண்டுமே தவிர, 10 நாளுக்கு, நீங்களே மருந்து கொடுக்கக் கூடாது.

எடுத்த எடுப்பிலேயே, சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகக் கூடாது. உங்களுக்கு யார் நம்பிக்கையான டாக்டரோ, அவரிடம் போங்கள். தேவைப்பட்டால் மட்டும், அவரே, சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்க்கு எழுதித் தருவார். மருந்து வாங்கும் போது, ஒவ்வொரு முறையும், காலாவதி தேதி பார்த்து வாங்குங்கள். ஏற்கனவே, வாங்கி வைத்திருந்ததை கொடுப்பதாய் இருந்தாலும், மருந்து காலாவதி ஆகி விட்டதா என்பதை, "செக்' பண்ணிக் கொடுங்கள். மருந்தை பயன்படுத்தும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் விட்டுக் கலக்கி சாப்பிட வேண்டியவை; நாக்கிலே வைத்திருந்து சாப்பிட வேண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக