புதன், 9 ஜனவரி, 2013

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்!

சொல்கிறார்கள்

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்!
"கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண் கிருஷ்ணமூர்த்தி: சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன. பின் குப்பை கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. நன்கு படித்து, "கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை, என்னுடன் இணைத்தேன். 2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக் கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில் செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம் நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள் எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன். ஏரிகளை சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் பணி துவங்கும். மொபைல்: 99402 03871

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக