பிரதமர் பதவிக்கு ப் பொருத்தமானவர் வைகோ: இராம் சேத்மலானி
By
Venkatesan Sr, மும்பை
இந்தியாவின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய
ஓட்டு வைகோவுக்குத்தான் என்று முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல
வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி கூறினார்.
''ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்'' என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு தில்லியில் வெளியிடபட்டது. அவை மராத்தி மொழியிலும் தயாரிக்கப்பட்டு நேற்று மும்பை, செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அரங்கில் வெளியீட்டு விழா நடைபெற்றது.
புத்தகம் மற்றும் ஒளிப்பட குறுவட்டு வெளியீட்டு விழாவில் பிரபல மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி கலந்துகொண்டு பேசியதாவது:
ஈழத் தமிழர்களுக்காக வைகோ தொடர்ந்து போராடி வருகின்றார். அவர் ஒரு தனிமனித ராணுவம். இலங்கை தமிழர்கள் பட்ட இன்னல்களையும் அவர்கள் அனுபவித்த வேதனைகளையும் இந்தியாவின் அணைத்து மாநில மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக வைகோ அவர்கள் இந்த முயற்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். மராத்தி மொழியில் இதை வாசிக்கின்றவர்களுக்கு, இலங்கையில் நடந்த கொடூரங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
தமிழர்களுடைய பண்பாடும், கலாச்சார பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஈழத் தமிழர்களுக்காக வைகோ மேற்கொண்டுள்ள முயற்ச்சிகளை நான் பாராட்டுகின்றேன். நான் வைகோவை நேசிக்கிறேன். வைகோவை நல்ல நண்பராக ஏற்று கொண்டு இருக்கின்றேன். அவர் மிகவும் திறமையானவர் இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என்றார் ராம்ஜெத்மலானி.

உண்மைதான்! ஆனால், தகுதியானவர்களையும் நல்லவர்களையும் வல்லவர்களையும் குறிப்பாகத் தமிழராய்ப் பிறந்தவர்களையும் நம் மக்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை!
பதிலளிநீக்கு