சனி, 12 ஜனவரி, 2013

மாணவர்களுக்குத் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து : இசைப்பயிற்சி

ஆங்கில ஆதிக்கத்தின் நடுவே மாணவர்களுக்குத் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து கற்பிப்பு: இசைப்பள்ளி மூலம் பயிற்சி

ராமநாதபுரம்:ஆங்கில மோகத்தின் நடுவே, மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், தேசிய பாடல்கள் கற்று கொடுத்து, அனைவரும் தடையின்றி தமிழ் இசை பாடல்களை தெரிந்து கொள்ள, தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இசைப்பள்ளி மூலம் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் அனைவரும் அவசியம் கற்க வேண்டிய பாடல்களான தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம், தேசியப் பாடல், கொடிப்பாடல், தமிழ்மொழி சிறப்பு, பாரதிதாசன் பாடல், தேவாரம் ஆகியவை மனப்பாடமாக தெரிந்து கொள்வதற்கு, இசைப்பள்ளி மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் கூறியதாவது: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக தமிழ் இசைப்பாடல்களை தெரிந்து இருக்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை அளிக்க, அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் முதற்கட்டமாக சேதுபதி நடுநிலைப்பள்ளியில், 60 மாணவர்கள், மன்னர் மெட்ரிக் பள்ளியில், 50 மாணவர்கள் என, 110பேருக்கு கடந்த 10.10.2012 முதல் 10.1.2013 வரை இசையுடன், பாடல்கள் கற்றுகொடுத்தோம்.தற்போது, 110 மாணவர்களும் நன்கு பாட கற்றுகொண்டுள்ளனர். அடுத்த கட்ட பயிற்சி துவங்கப்பட உள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் இசைப்பாடல் கற்றுத்தர உள்ளோம், என்றார்.

2 கருத்துகள்:

  1. தமிழ்த்தாய் வாழ்த்தில்
    ஆரியம்போல் நின்வழக்கொழிந்து சிதையா உன்
    சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
    வரிகள் உள்ளனவா இல்லையா
    இல்லையென்றால்
    அது குறையுடையது அல்லவா

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக இருக்காது என எண்ணுகிறேன். பாடல் வரிகளை எடுத்த பொழுதே தமிழன்பர்கள் எதிர்த்து இருக்க வேண்டும். நாம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பொழுது அவ்வரிகளுடனே பயன்படுத்த வேண்டும். நான்,அறநெறிப்பாடல் பயிற்சிப்பட்டறை முதலான பயிற்சியின் பொழுது முழுமையாகத்தான் பயிற்சி அளிக்கச் செய்தேன். நான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட நேர்ந்த சில நேர்வுகளில் அவ்வரிகளுடனேயே பாடிஉள்ளேன்.

    பதிலளிநீக்கு