புதன், 9 ஜனவரி, 2013

மரத்தைப் பெயர்த்து வேறு இடத்தில் நட்டுப் புதுமை

40  ஆண்டு  மரத்தை ப் பெயர்த்து வேறு இடத்தில் நட்டு ப் புதுமை

பெ.நா.பாளையம்: நான்கு அசோக மரங்கள், வேரொடு பெயர்த்து எடுக்கப்பட்டு, இன்னொரு இடத்தில் நட்டு வைக்கப்பட்டன. கோவை துடியலூரில், மோட்டார் உற்பத்தி செய்யும், ஒரு தனியார் நிறுவனம், தங்களுக்கு இக்கம்பெனியின் விரிவாக்கத்தின் போது வளாகத்தில் இருந்த, 40 ஆண்டு பழமையான, ஐந்து அசோக மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், மரத்தை வெட்டி அழிக்க நிர்வாகத்துக்கு மனமில்லை. இதனால், அசோகமரங்களை அப்படியே வேரொடு பெயர்த்து எடுத்து, கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள, இதே நிறுவனத்தின் இன்னொரு கிளையில், நட்டு வளர்க்க, நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து மரங்களை பெயர்த்து எடுக்கும் பணி, இரண்டு நாட்களாக நடந்தது.

பெயர்த்து எடுக்கப்பட்ட மரங்கள், "டிரெய்லர்' உதவியுடன், 5 கி.மீ., தொலைவில் உள்ள, கதிர்நாயக்கன்பாளையம் அருகே உள்ள இடத்துக்கு கொண்டு சென்று, நிறுவனத்தின் கிளையில் நடப்பட்டன. இது குறித்து தனியார் நிர்வாகத்தினர் கூறியதாவது: வயதான மரங்களை சிலர், வெட்டி, அகற்றி விடுகின்றனர். அவ்வாறு அகற்ற வேண்டாம் என்ற கருத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நான்கு அசோக மரங்களையும் பெயர்த்து நட, அதிக செலவு ஆகவில்லை. வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்ட சில உர வகைகளை வாங்கி, குழியில் போட்டோம். இது தொடர்பான தொழில்நுட்பத்தை பிறருக்கு கொடுத்து, உதவவும் தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக