சனி, 12 ஜனவரி, 2013

அனைத்து உறுப்பு தானம் வழங்கிய பெண்

உடலின் அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்கிய 37 அகவை  பெண்

புது தில்லி: உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த, பள்ளி ஆசிரியர், பல்பீர் சிங் ராவத் என்பவரின் மனைவி, சந்திரகாந்தா, 37. பூரண உடல் நலத்துடன் இருந்த சந்திரகாந்தா, சில நாட்களுக்கு முன் திடீரென, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளித்தும், பயனின்றி, இம்மாதம், 2ம் தேதி இறந்து விட்டார். சந்திரகாந்தா உயிருடன் இருக்கும் போது, உடல் உறுப்புகள் தானம் குறித்து கணவருடன் பேசியுள்ளார்."தான் இறக்க நேர்ந்தால், உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும்' என, கணவரிடம் கேட்டு கொண்டார்.சந்திரகாந்தா இறந்ததும், அவரின் ஆசைப்படி, உடல் உறுப்புகள், தேவைப்படுபவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.அவரின் இதயம், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை, அகற்றப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதால், அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.அதுபோல், கண் விழி, எலும்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக யாருக்கும் வழங்கவில்லை. தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக, அந்த பாகங்கள், "எய்ம்ஸ்' மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம், இந்த ஆண்டில், டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனையில், "முழு உடல் உறுப்புகளையும் தானமாக வழங்கிய முதல் பெண்' என்ற பெருமையை பெற்றுள்ள சந்திரகாந்தா, ஐந்து பேர் உயிரை காப்பாற்றியுள்ளார் என்று, டாக்டர்கள் பெருமையாக குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக