இயற்கைச் சாயம் உற்பத்தியி்ல் ஆய்வு : அரசு கல்லூரி மாணவிகள் அபாரம்
கோவை,: இராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள்
தயாரிப்பதே தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின்
ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். உணவுகளில் பயன்படுத்தும் ராசாயன
சாயங்கள் நமக்கு ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிற
துறைகளில் பயன்படுத்தப்பட்டு பின்பு வெளிவரும் ராசாயன சாயக்கழிவுகளால்
நிலத்தடி நீர், நதி, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.
இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், சென்னை அண்ணா பல்கலை மாணவியர் சரண்யா, திவ்யாலட்சுமி, உஷா ஆகியோர் கோவை அரசு கலை கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி மேற்பார்வையில் இயற்கை சாயங்கள் தயாரிப்பு என்ற தலைப்பில் கடந்த 1 வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்ச் உள்ளிட்ட 8 சாயங்களை தூய செந்தூர் பொடி,மஞ்சள், சோத்துக்கத்தாலை, வேப்பம், மாதுளை, மாசிக்காய், ஓம விதை மற்றும் பொடி, கருந்துளசி, ராமர் துளசி உள்ளிட்ட இயற்கை தாவரங்களில் மைக்ரோ என் கேப்சுலேன் மற்றும் கிராஸ் லிங்கிங் தொழில்நுட்ப முறை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை அரசு கலை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் ரவி கூறுகையில், "" ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய நேரம் இது. தற்போது அண்ணா பல்கலை எம். டெக் மாணவியர் 3 பேர் இயற்கை சாயம் தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சியை செய்து வருகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சாயங்கள் 15 தடவை நீரில் அலசினாலும் சாயம் போகாது மேலும் உணவு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சியை இந்த ஆராய்ச்சி உருவாக்கும். அரசின் ஒத்துழைப்பு இதற்கு கிடைத்தால் ஆராய்ச்சிகள் பெரிய அளவில் செய்து சாதிக்க இந்த மாணவிகளால் முடியும், '' என்றார்.ஆராய்ச்சியில் மாணவிகள் கூறுகையில்,
"" தொடர்ந்து இந்த ஆராய்ச்சிகள் 2 அல்லது 3 ஆண்டுகள் முயற்சித்தால் ராசாயண சாயங்களுக்கு மாற்றாக இயற்கை சாயங்களை பயன்படுத்த முடியும். உணவு துறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ராசாயன சாயங்கள் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவால் புற்றுநோய் உட்பட பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதை அடிப்படையாக வைத்து இயற்கை சாயங்கள் தயாரிக்கும்ஆராய்ச்சியில் இறங்கினோம். பல தாவரங்களை ஆராய்ச்சி செய்து தொழில்நுட்ப உதவியுடன் எட்டு நிறங்களை உருவாக்கியுள்ளோம். இயற்கை முறையில் அனைத்து சாயங்களையும் உருவாக்குவது சாத்தியமே என்று மாணவிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக