ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பறவைகள், விலங்குகளைப் பறிகொடுக்கும் வனத்துறை




ஈரோடு: தமிழகத்தில், வனத்துறை துவக்கப்பட்டு, 150வது ஆண்டில், அடியெடுத்து வைக்கிறது. ஆனால், மக்களிடையே போதிய விழிப்புணர்வு, கண்காணிப்பின்மை இல்லாததால், பறவைகளையும், விலங்குகளையும் இழந்து வனத்துறை பரிதாப நிலையில் உள்ளது.

இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வனத்துறை துவக்கப்பட்டது. எனினும், ஆங்கிலேயர்கள், மன்னர்கள் காலத்தில், வனப்பகுதிக்குள் புகுந்தும், ஊருக்குள் புகும் வன விலங்கினையும் வேட்டையாடுவதும் வழக்கம். வன விலங்கினை வேட்டையாடுபவர்களே, சிறந்த வீரன் எனவும் ஒருகாலத்தில் கருதப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்த பின், ஒவ்வொரு மாநிலத்துக்கும் வனத்துறை துவக்கப்பட்டது.
1948
ல் தமிழகத்தில் வனத்துறை துவக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து, இன்றைய காலம் வரை, வனத்துறை துவக்கப்பட்டு 150 ஆண்டுக்கும் மேலாவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினரோடு, பொதுமக்கள்ஒத்துழைக்காததாலும், போதிய கண்காணிப்பின்மை, ஆட்கள் பற்றாக்குறையாலும்,
வனக்குற்றங்கள் அதிகரித்ததால், பல்வேறு விலங்கினங்கள், பறவை இனங்கள் அழிவுப்பாதையே நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.இதுகுறித்து வனத்துறை ஆர்வலர்கள் கூறியதாவது:
சிட்டுக்குருவியை சாப்பிட்டால்.,
இந்தியாவில் வனத்துறை துவக்கப்பட்டு, 150 ஆண்டாகிறது. பழங்காலத்தில், பெருமைக்காக விலங்கு, பறவைகள் வேட்டையாடப்பட்டது. தற்போது, இறைச்சிக்காகவும், பணத்துக்காகவும், வேட்டையாடப்படுகிறது.மனிதனின் மூடநம்பிக்கையாலும், பொருள் தேடும் ஆசையாலும், மாநிலம் முழுவதும் வனங்கள், பொட்டல் காடாக மாறி வருகிறது. மனித இனத்தின்மூடநம்பிக்கையால் வனத்தில் வாழும் பறவை இனங்களும், விலங்கினங்களும் வேகமாக அழிந்து வருகின்றன.முற்றிலும் அழிந்து போன பறவை இனத்தில், முதல் இடத்தில் இருப்பது சிட்டுக்குருவிகள் தான். சிட்டுக்குருவியை சாப்பிட்டால், ஆண்மை பெருகும் என்ற மூடநம்பிக்கை நிலவியதால், சிட்டுக்குருவி இனமேஅழிந்தது. தமிழகம் முழுவதும், 80சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்தது. திண்டுக்கல், மதுரை,
கூண்டோடு அழிவுப்பாதை: மனிதனின் அடாவடி செயல்களாலும்,போதிய பாதுகாப்பு இல்லாததாலும், நரி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டெருமை, கரடி, காட்டு முயல், மலைப்பாம்பு, எறும்பு திண்ணி, கவரைமான் ஆகியவையும் குறைந்து வருவதாக வனத்துறை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில், மற்ற விலங்கினங்களும், பறவைகளும் கூண்டோடு அழிவுப்பாதையை நோக்கி பயணித்து வருவது, அதிர்ச்சியாக உள்ளது. வனத்தினையும், வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமெனில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், விலங்குகளை வேட்டையாடுபவரை பலஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக