புதன், 9 ஜனவரி, 2013

வால்ட் டிசுனி : எண்மக் கருவி அறிமுகம்

அமெரிக்க வால்ட் டிசுனி ப் பூங்காவைப் பயன்படுத்த இனி க் கட்டணச்சீட்டு  தேவையில்லை: எண்மக் கருவி அறிமுகம்
அமெரிக்க வால்ட் டிஸ்னி பூங்காவை பயன்படுத்த இனி டிக்கெட் தேவையில்லை: புதிய டிஜிட்டல் கருவி அறிமுகம்
புளோரிடா, ஜன. 8-

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க வால்ட் டிஸ்னி பூங்கா வருடத்திற்கு 3 கோடி பார்வையாளர்கள் வருகின்றனர். இப்பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக பணம் செலுத்துவதால் காலவிரயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், இங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களை எளிமையாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு கைக்கடிகாரம் போன்ற புதிய டிஜிட்டல் மின்னணு கருவியை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

மைமேஜிக் பிளஸ் என்ற இந்த டிஜிட்டல் மணிக்கட்டு காப்பானது, பூங்காவில் பார்வையாளர்கள் பயன்படுத்துவதற்கான நேரம் மற்றும் அங்குள்ள பொழுது போக்கு அம்சங்களின் பயன்பாடுகள் குறித்து அறிவிக்கும். அதற்கேற்ப அவர்களுடைய கிரெடிட் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் இந்த மின்னணு கருவியில் பதிவு செய்யப்படும். இந்த கருவி, வரும் வசந்த காலத்தில் அறிமுகமாகிறது.

இந்த புதிய முறை தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஓய்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக