வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நரிக்குறவ மாணவன் இராசபாண்டிக்கு மூத்த மாணவர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சை மருத்துவ க் கல்லூரியில் நரிக்குறவ மாணவன்  இராசபாண்டிக்கு மூத்த  மாணவர்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சை மருத்துவ கல்லூரியில் நரிக்குறவ மாணவன் ராஜபாண்டிக்கு  சீனியர் மாணவர்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர்,ஆக.2-

கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை கிரா மத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது18), நரிக்குறவ இனத்தை சேர்ந்தவரான இவர், கடந்த பிளஸ்-2 தேர்வில் 1167 மார்க் பெற்றார். மாணவர் ராஜபாண்டியின் பெற்றோர் ஏழ்மையில் நிலையில் அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். பிளஸ் -2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜபாண்டி , டாக்டராகி ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று குறிக்கோளாக கொண்டிருந்தார்.

மருத்துவக்கல்லூரிக்கான கட்-ஆப் மார்க் 197.75 அவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த மருத்துவ கல்லூரி கவுன்சிலிங்கில், மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

நரிக்குறவ இனத்தை சேர்ந்த அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த தன்னால் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவித்து வந்தார். டாக்டர் கனவு நனவாகுமா? என்று கவலை அடைந்தார்.

இந்நிலையில் நரிக்குறவ மாணவர் ராஜபாண்டியின் வசதியற்ற நிலையை பற்றி கேள்விப்பட்ட நடிகர் ஜீவா, மாணவர் ராஜபாண்டிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவினார். இதேபோல் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த சமூக சேவகர் , டாக்டர் முத்துலட்சுமி ஆகியோரும் மாணவர் ராஜபாண்டிக்கு பண உதவி அளித்தனர்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மாணவர் ராஜ பாண்டியும் முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டார். அவருக்கு சீனியர் மாணவ-மாணவிகள் கை குலுங்கி வாழ்த்து தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மருத்துவ கல்லூரி டீன் உமாதேவி , மாணவர் ராஜ பாண்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. மாணவர் மன்ற ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு வரவேற்றார்.

விழாவில் மருத்துவக் கல்லூரி டீன் உமாதேவி தலைமை தாங்கி பேசியதாவது-

நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்து பின்னாளில் சமூகத்துக்கு மருத்துவராகி சேவையாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளீர்கள்.கல்லூரியில் ராக்கிங்கை கண் காணிக்கவும், தடுக்கவும் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடை, பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும். செல்போன்களை வகுப்பு நேரங்களில் மாணர்கள் பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக